வேம்பு

வேம்பு அல்லது வேப்பை (Azadirachta indica, Neem) இந்தியா, இலங்கை, பர்மா போன்ற நாடுகளில் வளரும் மிகவும் பயனுள்ள ஒரு மரம். இதன் மருத்துவ பண்புகள் கருதி, ஒரு மூலிகை என்றும் வகைப்படுத்தலாம். வேப்ப மரம் நன்றாக வளர்ந்து நிழல் தர வல்லது. அதன் இலைகள் கிருமிகளை அழிக்கும் அல்லது அணுகவிடா தன்மை கொண்டவை என்று கருதப்படுகின்றது. வேப்பம் பூ இல் இருந்து வேப்பம் பூ வடகம், பச்சடி, ரசம் என்பவை செய்யலாம். வேப்ப எண்ணெய் மருத்துவ ரீதியாக பாவிக்கப்படுகின்றது.

வேம்பு
வேம்பு, பூவும் இலைகளும்
உயிரியல் வகைப்பாடு
திணை: தாவரம்
தரப்படுத்தப்படாத: பூக்கும் தாவரம்
தரப்படுத்தப்படாத: இருவித்திலைத் தாவரம்
தரப்படுத்தப்படாத: ரோசித்கள்
வரிசை: Sapindales
குடும்பம்: Meliaceae
பேரினம்: Azadirachta
இனம்: A. indica
இருசொற் பெயரீடு
Azadirachta indica
A.Juss., 1830[1]
வேறு பெயர்கள் [1][2]
  • Azadirachta indica var. minor Valeton
  • Azadirachta indica var. siamensis Valeton
  • Azadirachta indica subsp. vartakii Kothari, Londhe & N.P.Singh
  • Melia azadirachta L.
  • Melia indica (A. Juss.) Brandis
வேம்பின் காய்கள்
வேப்ப மரம்

காப்புரிமை

1995ல் யுரோப்பிய காப்புரிமைக்கழகம் வேம்பு தொடர்பான காப்புரிமையை அமெரிக்க ஐக்கிய நாடுகள் விவசாயத்துறைக்கு வழங்கியது. பிறகு இந்திய அரசாங்கம் காப்புரிமை வழங்கப்பட்ட இச்செயற்பாடு 2000 ஆண்டுகளாக இந்தியாவில் நடைமுறையில் இருப்பதாக கூறி இதை எதிர்த்தது. கிபி2000ல் இந்தியாவிற்கு சாதகமாக யுரோப்பிய காப்புரிமைக்கழகம் தீர்ப்பளித்தது.


சொல்லின் வேர்

வேல் என்பது கூரிய வடிவிலான என்று பொருள். வேல் போன்ற கூரிய இலைகள் உடைய மரம் வேம்பு. வேல்பு என்ற சொல் மருவி வேம்பு என்றாகும்.

பு என்ற வல்லினம் ல் என்ற மெல்லினத்தை திரித்து ம் என்ற இணைக்கமான மெல்லினமாக மாற்றம்.

வேல்பு => வேம்பு.

வேம்ப மரம் => வேப்ப மரம் ( Vernacular Tamil )

உசாத்துணை

வெளி இணைப்புகள்

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.