குழிப்பேரி

குழிப்பேரி (peach; தாவரவியல் பெயர்: Prunus persica[2]) சீனாவைப் பிறப்பிடமாகக் கொண்ட தாவரமாகும். இது இனிப்பு செறிந்த பழங்களை விளைவிக்கிறது. இப்பழம் ஆப்பிள் பழத்தினை ஒத்த தோற்றத்தையும், குணத்தையும் கொண்ட பழமாகும். குழிப்பேரி பழங்கள் பழக்கலவைகளிலும், பழரசங்களிலும் பயன்படுத்தப்படுகின்றன. இவற்றைக்கொண்டு கேக் போன்றவையும் தயாரிக்கப்படுகின்றன. மே முதல் செப்டம்பர் வரையான காலப்பகுதி இப்பழங்களின் பருவக்காலப்பகுதியாகும். சாப்பிட்டபின் உண்ணும் பழங்களில் இதுவும் ஒன்றாகும்.

குழிப்பேரி பழம்
Prunus persica
உயிரியல் வகைப்பாடு
திணை: தாவரம்
தரப்படுத்தப்படாத: பூக்கும் தாவரம்
தரப்படுத்தப்படாத: இருவித்திலைத் தாவரம்
தரப்படுத்தப்படாத: ரோசிதுகள்
வரிசை: Rosales
குடும்பம்: Rosaceae
பேரினம்: Prunus
துணைப்பேரினம்: Amygdalus
இனம்: P. persica
இருசொற் பெயரீடு
Prunus persica
(L.) Stokes[1]

அடங்கியுள்ள சத்துக்கள்

  • இப்பழங்களில் உயிர்ச்சத்துக்களும், தாதுப்பொருட்களும்,பொட்டாசியம், புளோரைடுகள், இரும்பு மற்றும் பீட்டாகரோடினும் அதிகம் உள்ளன.
  • இப்பழங்களில் நாற்பது சதவிகிதம் கலோரிகள் மட்டுமே உடலுக்கு ஆற்றலை வழங்குகின்றன.
  • சி மற்றும் ஏ உயிர்ச்சத்துக்கள் இப்பழங்களில் அதிகமாகக் காணப்படுகின்றன[3].

மருத்துவப் பண்புகள்

  • சி மற்றும் ஏ உயிர்ச்சத்துக்கள் இப்பழங்களில் அதிகமாகக் காணப்படுவதால் உடலினில் நோய் எதிர்ப்புச் சக்தியினையும், பார்வைத்திறனையும் அதிகரிக்கச் செய்கின்றன.
  • இப்பழங்கள் திசுக்கள் கூட்டிணைப்பாக செயல்பட உதவி புரிகின்றன.
  • இப்பழங்கள் இரத்த சிவப்பணுக்களை அதிகரிக்கச் செய்கின்றன.
  • குழிப்பேரியில் அதிகளவு பொட்டாசியம் உள்ளது[4]. இது இரத்த அழுத்தத்தினையும், இதயத்துடிப்பையும் சீராக்க உதவும்.
  • இவை வாய்ப்புற்று நோயினைத் தடுக்கும் சக்தி கொண்டதாகும்.
  • உடலின் செல்கள் மற்றும் திசுக்கள் நெகிழ்வுத்தன்மையுடன் இருக்கவும் இப்பழங்கள் உதவுகின்றன.
  • இப்பழங்களில் எதிர்-ஆக்சிகரணிகள் உள்ளன[5]. இவை இதயக்குழலிய நோயைக் கட்டுப்படுத்துவதில் பயனுள்ளதாகக் கூறப்படுகிறது[6].

மேற்கோள்கள்

  1. "Prunus persica". The Plant List (2010). பார்த்த நாள் 29 November 2012.
  2. http://plants.usda.gov/core/profile?symbol=prpe3
  3. "Basic Report: 09236, Peaches, raw". United States Department of Agriculture Agricultural Research Service National Nutrient Database for Standard Reference Release 27. பார்த்த நாள் 2015-08-09.
  4. Manzoor, Maleeha; Anwar, Farooq; Mahmood, Zahed; Rashid, Umer; Ashraf, Muhammad (2012). "Variation in Minerals, Phenolics and Antioxidant Activity of Peel and Pulp of Different Varieties of Peach (Prunus persica L.) Fruit from Pakistan". Molecules 17 (6): 6491-6506. doi:10.3390/molecules17066491. பப்மெட்:22728349.
  5. Kim, Hye-Ryun; Kim, Il-Doo; Dhungana, Sanjeev Kumar; Kim, Mi-Ok; Shin, Dong-Hyun (2014). "Comparative assessment of physicochemical properties of unripe peach (Prunus persica) and Japanese apricot (Prunus mume)". Asian Pac J Trop Biomed. 4 (2): 97–103.. doi:10.1016/S2221-1691(14)60216-1. பப்மெட்:25182279.
  6. Taylor, Wallace (2011). "Anthocyanins in cardiovascular disease.". Adv Nutr. 2 (1): 1-7. doi:10.3945/an.110.000042. பப்மெட்:22211184.

வெளியிணைப்புகள்

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.