தக்காளி

தக்காளி சமையலிற் காயாகவும் பழமாகவும் பயன்படும் ஒரு காய்கறிச் செடியினமாகும். இது கத்தரிக்காய், கொடை மிளகாய் போன்றே சோலானேசியெ (Solanaceae ) அல்லது நிழல்சேர் (nightshade) செடிக் குடும்பத்தைச் சேர்ந்த செடியினமாகும். இதனை அறிவியலில் சோலானம் லைக்கோபெர்சிக்கம் (Solanum lycopersicum) அல்லது இணையாக லைக்கோபெர்சிக்கன் லைக்கோபெர்சிக்கம் (Lycopersicon lycopersicum) என்று அழைக்கிறார்கள். இதன் தாயகம் (தென் அமெரிக்கா, நடு அமெரிக்கா மற்றும் வட அமெரிக்காவின் தென் பகுதியாகும். குறிப்பாக பெரு, மெக்சிக்கோவில் இருந்து அர்ஜெண்டைனா வரையான பகுதியாகும்.[1] ஓராண்டுத் தாவரமான இது 1-3 மீ உயரமாக வளர்கிறது.

தக்காளி
Tomato from a supermarket and cross section
உயிரியல் வகைப்பாடு
திணை: தாவரம்
துணைத்திணை: கலன்றாவரம்
பிரிவு: பூக்கும் தாவரம்
வகுப்பு: இருவித்திலைத் தாவரம்
Dicotyledon
துணைவகுப்பு: Asteridae
வரிசை: சோலானேல்ஸ் (Solanales)
குடும்பம்: சோலானேசியெ (Solanaceae)
பேரினம்: சோலானம் (Solanum)
இனம்: S. lycopersicum
இருசொற் பெயரீடு
Solanum lycopersicum
L.
வேறு பெயர்கள்

Lycopersicon lycopersicum
Lycopersicon esculentum

ஆங்கிலத்தில் இதற்கு வழங்கும் பெயரான டொமேட்டோ (அல்லது டொமாட்டோ) என்பது நஃகுவாட்டில் (Nahuatl) மொழிச்சொல்லான டொமாட்ல் (tomatl) என்பதில் இருந்து வந்ததாகும். இதனை அப்பகுதிகளை முன்னர் ஆண்ட ஆசுட்டெக் மக்கள் தங்கள் மொழியில் ஷிட்டோமாட்ல் (xitomatl, ஒலிப்பு shi-to-ma-tlh) என்று அழைக்கப்பட்டது. அறிவியல் பெயராகிய லைக்கோபெர்சிக்கம் (lycopersicum) என்பது ஓநாய்-பீச்பழம் ("wolf-peach") என்று பொருள்படுவது, ஏனெனில் இவற்றை ஓநாய்கள் உண்ணும்.

இந்தியாவில் தக்காளி

மணித்தக்காளி, பேத்தக்காளி என்னும் இனங்கள் இந்தியாவில் உள்ளவை.மேலே விளக்கப்பட்ட அமெரிக்கத் தக்காளியைத் தமிழர் சீமைத்தக்காளி எனக் கூறுவர்.

  • மணித்தக்காளி மிளகு அளவு பருமன் கொண்டது. இதன் பழம் கருமையானது. காய்களைக் குழம்பு வைப்பர். பழங்களை உண்பர்.
  • நுரைத்தக்காளி என்னும் பேத்தக்காளி குப்பைக் கூளங்களில் தோன்றி வளரும். இதனை நெய்த்தக்காளி எனவும் வழங்குவர். பழம் மூடாக்குத் தோலுடன் காணப்படும். மூடாக்குத் தோலை உரித்துவிட்டு உள்ளே இருக்கும் பசுமைநிறத் தக்காளியை உண்பர். இது காய்நிலையில் கசக்கும். எனவே உண்ணமாட்டார்கள். இந்த உள் தக்காளி பட்டானி அளவு பருமன் கொண்டிருக்கும். மூடாக்குத் தோலை உரித்துவிட்டு காய்நிலையில் அளவு பருமன் கொண்டது. இதன் பழம் கருமையானது. காய்களைக் குழம்பு வைப்பர். பழங்களை உண்பர்.
  • நுரைத்தக்காளி என்னும் பேத்தக்காளி குப்பைக் கூளங்க பட்டானி அளவு

படங்கள்

தக்காளி உற்பத்தி

இடங்கள்நாடுகள்தக்காளி உற்பத்தி (டன்கள்)
1 சீனா33,911,702
2 ஐக்கிய அமெரிக்கா13,718,171
3 இந்தியா10,965,355
4 துருக்கி10,313,000
5 எகிப்து9,204,097
6 இத்தாலி5,976,912
7 ஈரான்4,826,396
8 எசுப்பானியா3,922,500
9 பிரேசில்3,867,655
10 மெக்சிக்கோ2,936,773
11 உருசியா1,938,710
12 உஸ்பெகிஸ்தான்1,930,000
13 நைஜீரியா1,701,000
14 உக்ரைன்1,492,100
15 கிரேக்க நாடு1,338,600
16 மொரோக்கோ1,312,310
17 சிலி1,270,000
18 தூனிசியா1,170,000
19 சிரியா1,163,300
20 போர்த்துகல்1,147,600
இடங்கள்நாடுகள்தக்காளி உற்பத்தி(டன்கள்)
21 ஈராக்830,000
22 உருமேனியா814,376
23 அல்ஜீரியா800,000
24 கனடா770,059
25 சப்பான்750,300
26 நெதர்லாந்து720,000
27 பிரான்சு714,635
28 போலந்து702,546
29 அர்கெந்தீனா680,000
30 இந்தோனேசியா624,420
31 யோர்தான்600,336
32 கியூபா575,900
33 கென்யா559,680
34 கசக்கஸ்தான்549,310
35 பாக்கித்தான்536,217
36 கொலம்பியா490,929
37 சவூதி அரேபியா477,572
38 அசர்பைஜான்438,419
39 சூடான்432,000
40 தென்னாப்பிரிக்கா420,701
41 இசுரேல்420,524
42 கமரூன்420,000
43 தென் கொரியா408,170
44 குவாத்தமாலா355,434
45 துருக்மெனிஸ்தான்310,000
46 லெபனான்305,300
47 ஆத்திரேலியா296,035
48 ஆர்மீனியா293,784
49 பெலருஸ்274,139
50 தாய்லாந்து270,000

தக்காளி வித்து பிரித்தெடுக்கும் முறை

நன்கு பழுத்த பழத்தில் இருந்து உட்கனியம் வித்துக்களுடன் வேறாக்கப்படும். இது இரு நாள் வரை நொதிக்கவிடப்படும். மறு வித்திக்களை சுற்றியுள்ள சளிப்படை நிங்கும் வகையில் நன்கு வித்துக்கல் கழுவப்பட்டு வித்துக்கள் வேறாக்கப்படும். பின் சுத்தமான துணியின் மீது ஏரலிப்பு வடியும் வரையில் வைக்கப்படும். அதன் பின் சில மணி நேரம் வரையில் வெயிலில் உலரவிடப்படும்.பின் நிழலான இடத்தில் உலர்த்தி குளிரான சூழலில் சேமிக்க வேண்டும்.

மேற்கோள்கள்

  1. ஆதலையூர் சூரியகுமார் (2017 சூன் 14). "தக்காளிச் செடியின் தற்காப்புக் கலை!". கட்டுரை. தி இந்து. பார்த்த நாள் 14 சூன் 2017.
This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.