வெல்வெட் ஆப்பிள்

வெல்வெட் ஆப்பிள் அல்லது வெண்ணெய்ப் பழம் (சிங்கப்பூர் வழக்கு) (velvet apple, Diospyros blancoi) என்பது ஒரு மரமாகும். இம்மரத்தின் பழத்தை பிரித்த உடன் பாலாடைக்கட்டியின் மணம் வீசும். இந்த பழத்தின் நிறம் சிவப்பு கலந்த பழுப்பு நிறத்துடனும், இதன் சதை இளஞ்சிவப்பாகவும், மென்மையான கூழ்போன்று இருக்கும். இந்த மரங்கள் பிலிப்பீன்சை தாயகமாக கொண்டவை [1] என்றாலும், மைக்ரோனேசியத் தீவுகளில் உள்ள பலாவுலிம், இலங்கையின் மாத்தறை, காலி மாவட்டங்களின் பல பகுதிகளிலும் காணப்படுகின்றன. தமிழ்நாட்டில் நீலகிரி மாவட்டத்தில் பரலியாறு, கல்லாறு ஆகிய பகுதிளில் விளைகிறது. வெப்ப மண்டலத்திலும், மிதவெப்ப மண்டலத்திலும் வளரக்கூடிய இம்மரங்கள் சுமார் 100 அடி உயரம்வரை வளரக்கூடியன.

வெல்வெட் ஆப்பிள்
வெல்வெட் ஆப்பிள் மரம்
உயிரியல் வகைப்பாடு
திணை: தாவரம்
தரப்படுத்தப்படாத: பூக்கும் தாவரம்
தரப்படுத்தப்படாத: இருவித்திலைத் தாவரம்
தரப்படுத்தப்படாத: Asterids
வரிசை: Ericales
குடும்பம்: Ebenaceae
பேரினம்: பனிச்சை மரம்
இனம்: D. blancoi
இருசொற் பெயரீடு
Diospyros blancoi
A.DC.
வேறு பெயர்கள்

See text

வெல்வெட் ஆப்பிள் பழம்

குறிப்புகள்

  1. Boning, Charles R. (2006). Florida’s Best Fruiting Plants: Native and Exotic Trees, Shrubs, and Vines. Sarasota, Florida: Pineapple Press, Inc.. பக். 135. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:1-56164-372-6.
This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.