மங்குசுத்தான்

மங்குசுத்தான் அல்லது மங்குஸ்தீன்- மலேசியத் தமிழ் (தாவரவியல் பெயர்:Garcinia mangostana, ஆங்கிலம்:mangosteen), வெப்பவலயத்துக்குரிய என்றும் பசுமையான தாவரம் ஆகும். இது சுண்டாத் தீவு மற்றும் இந்தோனேசியாவின் மொலாக்கா பகுதியைத் தாயகமாகக் கொண்டது. இம்மரம் 7 முதல் 25 m (20–80 ft) உயரனானது. மங்குசுத்தான் பழம் (உள்ளோட்டுச் சதயம்) இனிப்பும் இலேசான புளிப்பும் கொண்டதாகவும் சாற்றுத்தன்மையும் சிறிதளவும் நார்த்தன்மையுமுள்ள பழமாகவும் காணப்படும் இது வெள்ளை நிறமுடையது. பழத்தின் சுற்றுக்கனியம் கருங்கபில நிறமானது. இது உண்ணப்படுவதில்லை.[1] பழத்தின் உள்ளாக இருவித்திலை வித்து காணப்படும்[2]

Purple Mangosteen
Illustration from "Fleurs, Fruits et Feuillages Choisis de l'Ile de Java" 1863-1864 by Berthe Hoola van Nooten (Pieter De Pannemaeker lithographer)
உயிரியல் வகைப்பாடு
திணை: தாவரம்
தரப்படுத்தப்படாத: பூக்கும் தாவரம்
தரப்படுத்தப்படாத: இருவித்திலைத் தாவரம்
தரப்படுத்தப்படாத: ரோசிதுகள்
வரிசை: Malpighiales
குடும்பம்: Clusiaceae
பேரினம்: Garcinia
இனம்: G. mangostana
இருசொற் பெயரீடு
Garcinia mangostana
L.

இலங்கையில் மங்குசுத்தான்

இலங்கையில் தாழ்நில ஈரவலயத்தைச் சேர்ந்த களுத்துறை, கம்பகா, கொழும்பு, காலி ஆகிய மாவட்டங்களிலும் மற்றும் கேகாலை, கண்டி மாவட்டங்களில் சில பகுதிகளிலும் மங்குசுத்தான் பயிரிடப்படுகிறது. பொதுவாக வீட்டுத்தோட்டப் பயிராகவே இது செய்கை பண்ணப்படுகிறது.

சுற்றுக்கனியமும் உண்ணப்படும் உள்ளோட்டுச் சதயமும்

கருக்கட்டப்படாத பூவிலிருந்தே காயுருவாகும். காய் இளம் பச்சை நிறமாகக் காணப்படும். மரத்தின் அங்குரத்தின் கீழ் காணப்பட்டால் வெள்ளை நிறத்தில் இருக்கும். அடுத்து வரும் இரண்டு மூன்று மாதங்களில் சுற்றுக்கனியம் கடும்கபில நிறத்துக்கு மாறும். உள்ளோட்டுச் சதயம் உண்ணப்படும் பகுதியாகத் திரிபடையும். 6-8 சதம மீட்டர் விட்ட அளவு கொண்டதாக பழம் மாறும் பருவம் பழுப்பதற்குத் தயாராகும் பருவமாகும்.

போசணை மற்றும் வேதியியல் கூறுகள்

மங்குசுத்தான்,
பிரித்தெடுக்கப்பட்ட சாற்றுப் பொதி
100 கிராமில் உள்ள ஊட்டச் சத்து
ஆற்றல் 70 kcal   310 kJ
மாப்பொருள்     18 g
கொழுப்பு0.6 g
புரதம் 0.4 g
நீர்81 g
கால்சியம்  10 mg1%
இரும்பு  0.2 mg2%
பாசுபரசு  20 mg3%
ஐக்கிய அமெரிக்கா அரசின்
வயதுக்கு வந்தவருக்கான,
உட்கொள்ளல் பரிந்துரை .
மூலத்தரவு: USDA Nutrient database

மங்குசுத்தானில் உண்ணப்படும் பகுதியான உள்ளோட்டுச்சதயம் பிரதான போசனைக் கூறுகளைக் கொண்டிருக்கவில்லை.[3]

மங்குசுத்தான் மரம்

மேற்கொள்கள்

  1. "Mangosteen: Sweet, Tangy, Delicious". Exotic Fruit For Health (26 August 2011). பார்த்த நாள் 22 October 2011.
  2. Mabberley, D.J. 1997. The plant book: A portable dictionary of the vascular plants. Cambridge University Press, Cambridge.
  3. Mangosteen nutrient information
This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.