மாப்பொருள்

மாப்பொருள் (starch) என்பது அதிக எண்ணிக்கையில் குளுக்கோசு மூலக்கூறுகள் இணைந்து உருவாகும் ஒருவகை காபோவைதரேட்டு ஆகும். இந்த கூட்டுச்சர்க்கரை எல்லா பச்சைத் தாவரங்களாலும் ஒளியின் முன்னிலையில் காபனீரொக்சைட்டு நீர் இணைந்து உருவாக்கப்பட்டு ஆற்றல் தேவைக்காக சேமிக்கப்படும்.
இதுவே மனிதரின் உணவில் உள்ள பொதுவான காபோவைதரேட்டு வகையாகும். வெவ்வேறு நாட்டு மனிதர்கள் வெவ்வேறு உணவை தமது முக்கிய உணவாகப் பயன்படுத்துவர். கோதுமை, அரிசி, உருளைக்கிழங்கு, சோளம், மரவள்ளி என்பன முக்கிய உணவு வகைகளில் அடங்கும். இவை யாவும் மாப்போருளை தமது முக்கிய கூறாகக் கொண்டனவாகும்.
தூய்மையான மாப்பொருள் வெண்ணிறமான, சுவையற்ற, மணமற்ற பொடியாக இருக்கும். அத்துடன் குளிர் நீரிலோ, அல்ககோலிலோ கரையாது. இது இரு வகையான மூலக்கூறுகளைக் கொண்டது. முதலாவது நேரோட்ட சுருளி வடிவான (linear and helical) அமைலோசு, இரண்டாவது கிளை அமைப்புடைய (branched) அமைலோபெக்ரின். தாவரங்களில் பொதுவாக 20 - 25% அமைலோசும், 75 - 80% அமைலோபெக்ரினும் காண்ப்படும்.[1] விலங்குகளில் சேமிக்கப்படும் குளுக்கோசின் ஒரு தோற்றமான கிளைக்கோசன் இவ்வகை அமைலோபெக்ரினின் மெலதிகமான கிளையுடைய அமைப்பாகும்.
பதனிடப்பட்ட மாப்பொருள் உணவில் பல விதமான சக்கரைப் பதார்த்தங்கள் இருக்கும். சுடுநீர் சேர்க்கப்படும்போது மாப்பொருள் தடிப்படைந்து, இறுக்கமடைந்து ஒட்டும் தன்மையுள்ள பதார்த்தமாக மாறும்.

மாப்பொருள்
இனங்காட்டிகள்
9005-25-8 Y
EC number 232-679-6
வே.ந.வி.ப எண் GM5090000
பண்புகள்
(C6H10O5)n
தோற்றம் white powder
அடர்த்தி 1.5 g/cm3
உருகுநிலை
none
தீங்குகள்
பொருள் பாதுகாப்பு குறிப்பு தாள் ICSC 1553
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும்
பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும்.
 Y verify (இது: Y/N?)
Infobox references
அமைலோசு மூலக்கூறின் கட்டமைப்பு
அமைலோபெக்ரின் மூலக்கூறின் கட்டமைப்பு
ஒளி நுணுக்குக்காட்டியின் கீழ், அயடின் சாயம் ஊட்டப்பட்ட கோதுமை மாப்பொருள் மணிகளின் தோற்றம்

மேலும் படிக்க

மேற்கோள்கள்

  1. Brown, W. H.; Poon, T. (2005). Introduction to organic chemistry (3rd ). Wiley. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:0-471-44451-0..
This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.