மாதுளை
மாதுளை சிறுமர இனத்தைச் சோ்ந்த பழமரமாகும். 5000 ஆண்டுகளாக ஈரானிலும், ஆப்கானிஸ்தானிலும், பலுகிஸ்தானத்திலும் பயிரிடப்பட்டு வருகிறது.இருந்தாலும் இதன் தாயகம் ஈரான் என்று சொல்லப்படுகிறது[1].மாதுளையின் பூ, பிஞ்சு,மற்றும் பழம் நிறத்திலும் வடிவத்திலும் மிகுந்த அழகு மிக்கவை.
மாதுளை | |
---|---|
மாதுளை பழம் | |
உயிரியல் வகைப்பாடு | |
திணை: | தாவரம் |
பிரிவு: | பூக்கும் தாவரம் |
வகுப்பு: | Magnoliopsida |
துணைவகுப்பு: | Rosidae |
வரிசை: | Myrtales |
குடும்பம்: | Lythraceae |
பேரினம்: | Punica |
இனம்: | P. granatum |
இருசொற் பெயரீடு | |
Punica granatum L. | |
வேறு பெயர்கள் | |
L, 1758 |
மாதுளையின் வேறு பெயா்கள்
மாதுளைக்கு தமிழில் தாடிமம், பீசபுரம், மாதுளங்கம், மாதுளம் , கழுமுள் என பெயா்கள் உண்டு. மாதுளைக்கு ஆங்கிலத்தில் பொமிகிரேனட் என்ற பெயரும் பியுனிகா கிரனேட்டம் என்ற தாவரப் பெயரும் உண்டு.
மாதுளை (Pomegranate, Punica granatum) வெப்ப இடைவெப்ப வலயத்திற்குரிய ஒரு பழமரமாகும்.மாதுளையில் இனிப்பு, புளிப்பு, துவர்ப்பு ஆகிய மூன்று ரகங்கள் உள்ளன. இனிப்பு மாதுளம் பழத்தைச் சாப்பிட்டால் இதயத்திற்கும், மூளைக்கும் மிகுதியான சக்தி கிடைக்கிறது. பித்தத்தைப் போக்குகிறது இருமலை நிறுத்துகிறது.
பெயர்க்காரணம்
பெண்களின் உள்ளத்தில் பிறர் எளிதில் அறிய இயலாத வகையில் ரகசியங்கள் இருப்பது போல, மாதுளம்பழத்தில் விதைகள் மறைந்திருப்பதால் 'மாது+உள்ளம்+பழம்' என்பதே மாதுளம்பழமாக அழைக்கப்படுகிறது.
மாதுளையின் வகைகள்
- ஆலந்தி
- தோல்கா
- காபுல்
- மஸ்கட் ரெட்
- ஸ்பேனிஷ் ரூபி
- வெள்ளோடு
- பிடானா
- கண்டதாரி
ஒவ்வொரு ரகத்திற்கும் தனிப்பட்ட சுவையும் சக்தியும் உண்டு. அது போல் சில ரகத்திற்கு தனிப்பட்ட மருத்துவ குணமும் உண்டு. மஸ்கட் ரெட் மற்றும் ஆலந்தி இனங்களில் உள்ள பழ முத்துக்கள் இளஞ் சிவப்பு, இரத்த சிவப்பு மற்றும் வெள்ளை நிறங்களில் இருக்கும். இவைகளில் இளஞ் சிவப்பும், இரத்த சிவப்புமே மருத்துவ ரீதியாக பயன்படுகிறது.[2]
பயன்கள்
புளிப்பு மாதுளையைப் பயன்படுத்தினால் வயிற்றுக் கடுப்பு நீங்குகிறது. இரத்த பேதிக்குச் சிறந்த மருந்தாகிறது. தடைபட்ட சிறுநீரை வெளியேற்றுகிறது. பித்தநோய்களை நிவர்த்தி செய்கிறது. குடற்புண்களை ஆற்றுகிறது. எந்த வகையான குடல் புண்ணையும் குணமாக்குகிறது. மாதுளம் விதைகளைச் சாப்பிட்டால் இரத்தவிருத்தி ஏற்படும். சீதபேதிக்குச் சிறந்த நிவாரணம் அளிக்கும்.
மாதுளை மரத்தின் பட்டைகளிலும் வோ்களிலும் "Pyridine" வகுப்பைச் சார்ந்த ஆல்கலாய்டுகள் "Pelletierine" மற்றும் "Iso Pelletierine" உள்ளன. "Tanin" என்னும் மருந்துச் சாரத்துடன் மரப்பட்டைகளிலுள்ள"Pelletierine Tannate" என்னும் சத்துப்பொருள் தான் புழுக் கொல்லி செய்கையை நிலை நிறுத்த செய்கிறது. மாதுளம் பழ விதையில்"Punicic Acid" என்னும் அமிலம் உள்ளது. இது ஒரு நுண் கிருமி கொல்லியாகும்.அதனால் தான் நுண்கிருமிகளால் உண்டாகும் மலட்டு பிரச்சனைக்கு இது மருந்தாகிறது.[3]
![]() | |
ஊட்ட மதிப்பீடு - 100 g (3.5 oz) | |
---|---|
ஆற்றல் | 346 kJ (83 kcal) |
18.7 g | |
சீனி | 13.67 g |
நார்ப்பொருள் | 4 g |
1.17 g | |
புரதம் | 1.67 g |
உயிர்ச்சத்துகள் | |
தயமின் (B1) | (6%) 0.067 mg |
ரிபோஃபிளாவின் (B2) | (4%) 0.053 mg |
நியாசின் (B3) | (2%) 0.293 mg |
line-height:1.1em | (8%) 0.377 mg |
உயிர்ச்சத்து பி6 | (6%) 0.075 mg |
இலைக்காடி (B9) | (10%) 38 μg |
கோலின் | (2%) 7.6 mg |
உயிர்ச்சத்து சி | (12%) 10.2 mg |
உயிர்ச்சத்து ஈ | (4%) 0.6 mg |
உயிர்ச்சத்து கே | (16%) 16.4 μg |
நுண்ணளவு மாழைகள் | |
கல்சியம் | (1%) 10 mg |
இரும்பு | (2%) 0.3 mg |
மக்னீசியம் | (3%) 12 mg |
மாங்கனீசு | (6%) 0.119 mg |
பாசுபரசு | (5%) 36 mg |
பொட்டாசியம் | (5%) 236 mg |
சோடியம் | (0%) 3 mg |
துத்தநாகம் | (4%) 0.35 mg |
| |
Percentages are roughly approximated using US recommendations for adults. Source: USDA Nutrient Database |
மாதுளம் பிஞ்சு: பிஞ்சைக் காயவைத்துப் பொடிசெய்து ஏலக்காய் தூள், கசகசாத் தூள், குங்கிலியத்தூள் ஒரு கிராம் அளவாகச் சேர்த்து தினம் இரு வேளை கொடுத்தால் சீதக் கழிச்சல் குணமாகும். பூவின் சாறும் அறுகம்புல்லின் சாறும் ஓரளவு சேர்த்துக் கொடுக்க மூக்கில் இருந்து குருதி வடிவது நிற்கும்.
வெளி இணைப்புகள்
- மாதுளை நூலகம் திட்டத்தில்
- Pomegranate Fruit Facts, California Rare Fruit Growers
- Pomegranate - Trusted Health Information (MedlinePlus)
- Pomegranate Council (California, US) - Recipes, News, and Info
- nhb.gov.in/report_files/pomegranate/POMEGRANATE.htm
- nhb.gov.in/report_files/pomegranate/POMEGRANATE.htm
- ஏ.டி.அரசு (ஜீலை 2008) ' பிணிகளை வெல்லும் கனிகள்' , பார்வதி கண்ணதாசன் பதிப்பகம், சென்னை - 17