சாத்துகுடி

சாத்துக்குடி (சிட்ரஸ் லிமாட்டா; Citrus limetta) சிட்ரஸ் பழங்களில் ஒன்றாகும். அவை பெரும்பாலும் இனிப்புச் சுண்ணாம்பு, இனிப்பு எலுமிச்சை அல்லது இனிப்பு லிம்பெட்டா என்று அழைக்கப்படுகின்றன.

சாத்துக்குடி பழங்கள்

வரலாறு

தென் மற்றும் தென்கிழக்கு ஆசியாவில், சாத்துக்குடி தோன்றியிருக்கலாம் என கருதப்படுகிறது. மேலும் மத்திய தரைக்கடல் பகுதியின் பிராந்தியங்களில் வளர்க்கப்பட்டது. இது மெக்ஸிகோ நாட்டின் எலும்பிச்சையும், இனிப்பு சிட்ரானின் கலவையாகும்.

இன்றைய சூழலில், எகிப்திலும், சிரியாவிலும், பாலஸ்தீனத்திலும், தென்கிழக்கு ஆசியாவிலும் சாத்துக்குடி அதிகமாக வளர்கிறது.

தோற்றம்

வெள்ளை பூக்களும், பழ மொட்டுகளும்

சாத்துக்குடி மரங்கள், 26 அடி (8 மீ) உயரம் வரை வளரும் சிறிய மரங்கள். அவை பழுப்பு-சாம்பல் நிறம் கொண்ட பட்டைகளையும், சீர் அல்லாத கிளைகளையும், சுமார் 1.5 – 7.5 செ.மீ அளவில் பல முட்களையும் கொண்டவை. இந்த மரத்தில், 0.79-1.18 அங்குல அகலம் கொண்ட வெள்ளை நிற பூக்கள் பூக்கும். பின்னர், இவை பூப்படைந்து மஞ்சள் சாயல் கொண்ட பச்சை பழங்களாகும். இவைதான் சாத்துகுடி என்பர். அவை பெரும்பாலும் வெப்ப மண்டல மற்றும் மிதவெப்ப மண்டல காலநிலை நிலைகளை விரும்புகின்றன. இந்த மரங்கள் 5 – 7 வயதிலே பழங்களை தருகின்றன, ஆனால் 10- 20 வயதான பின்பே, நிறைய பழங்கள் கிட்டும். அவர்கள் பொதுவாக தங்கள் விதைகள் மூலம் மகரந்தமாகின்றன. [1]

ஊட்டச்சத்து

மற்ற சிட்ரஸ் வகை பழங்களைப் போல, சாத்துக்குடியிலும் வைட்டமின் சி அதிகமாக உள்ளது. சுமார் 100 கிராம் சாத்துக்குடியில், குறைந்தபட்சம் 50 மில்லி கிராம் 'வைட்டமின் சி' உள்ளது. இதை தவிர பொட்டாசியமும், பாசுபரசும் உள்ளன.

பெயர்கள்

சாத்துக்குடி, பல இடங்களில் பல பெயர்களில் அழைப்பர். அவை

  • ஈரான் - லீமு ஷிரின்
  • வட இந்திய மாநிலங்கள் - மொசாம்பி
  • கிழக்கு இந்திய மாநிலங்கள் - முசும்பி
  • தெலுங்கு மாநிலங்கள் - பத்தயி
  • தமிழ்நாடு - சாத்துக்குடி
  • நேபால் - மௌசம்
  • பிராஞ்சு - பெர்கமாட்

மேற்கோள்கள்

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.