சூரியகாந்தி விதை

சூரியகாந்தி விதை என அழைக்கப்படுவது உண்மையில் சூரியகாந்தித் தாவரத்தின் பழமே ஆகும். பழத்தையே தவறாக சூரியகாந்தி விதை என அழைத்து வருகின்றோம். காரணம், அந்தப் பழம் வித்தின் அமைப்பை ஒத்திருப்பதேயாகும். இதன் வெளிப்பகுதியில் மெல்லிய மேலோடும், உள்பகுதியில் உண்மையான வித்து அல்லது பருப்பும் (Kernal) காணப்படுகின்றது. மேலோடானது சுற்றுகனியத்தாலான, கிட்டத்தட்ட 20 - 25 % ஐக் கொண்டதாகவும், உள்ளான பருப்பின் பகுதி முளையத்தைக் கொண்ட விதையாகவும் இருக்கும்[1]. சூரியகாந்திப் பழமே சூரியகாந்தி விதை எனப்படுவதனால், இந்த மேலோடானது உமி என அழைக்கப்படுகின்றது. இது தாவரவியல் அடிப்படையில் வெடியா உலர்கனி (Achene) எனும் பகுப்பிற்குள் அடங்கும்.

இடது: உறை/உமி நீக்கப்பட்டது. வலது: உறை/உமி நீக்காதது
சூரியகாந்தி விதை உட்கரு, உலர்ந்தது
100 கிராமில் உள்ள ஊட்டச் சத்து
ஆற்றல் 570 kcal   2390 kJ
மாப்பொருள்     18.76 g
- சர்க்கரை  2.62 g
- நார்ப்பொருள் (உணவு)  10.5 g  
கொழுப்பு49.57 g
- நிறைவுற்ற கொழுப்பு  5.20 g
- ஒற்றைநிறைவுறா கொழுப்பு  9.46 g  
- பல்நிறைவுறா கொழுப்பு  32.74 g  
புரதம் 22.78 g
தயமின்  2.29 mg  176%
ரிபோஃபிளாவின்  0.25 mg  17%
நியாசின்  4.5 mg  30%
பான்டோதெனிக் அமிலம்  6.75 mg 135%
உயிர்ச்சத்து பி6  0.77 mg59%
இலைக்காடி (உயிர்ச்சத்து பி9)  227 μg 57%
உயிர்ச்சத்து சி  1.4 mg2%
உயிர்ச்சத்து ஈ  34.50 mg230%
கால்சியம்  116 mg12%
இரும்பு  6.77 mg54%
மக்னீசியம்  354 mg96% 
பாசுபரசு  705 mg101%
பொட்டாசியம்  689 mg  15%
சோடியம்  3 mg0%
துத்தநாகம்  5.06 mg51%
ஐக்கிய அமெரிக்கா அரசின்
வயதுக்கு வந்தவருக்கான,
உட்கொள்ளல் பரிந்துரை .
மூலத்தரவு: USDA Nutrient database

உமி நீக்கப்பட்ட பின்னர் கிடைக்கும் பருப்பு உண்ணப்படும் பகுதியாகும். பருப்பானது நொறுக்குத்தீனியாக உண்ணப் பயன்படும். இது மிகவும் ஊட்டச்சத்து நிறைந்ததாகும். பல உயிர்ச்சத்துக்கள், கனிமங்களைக் கொண்டது[2][3]. உயிரணுக்கள் தாக்கப்படுவதில் இருந்து பாதுகாப்பைக் கொடுக்கும் உயிர் வளியேற்ற எதிர்ப்பொருளான[4] உயிர்ச்சத்து ஈயை அதிகளவு கொண்டிருக்கின்றது[3].

உமி நீக்கப்பட்ட நிலையிலும், நீக்கப்படாத நிலையிலும் இது கடைகளில் விற்பனைக்கு விடப்படும். இதில் கிடைக்கும் உமியானது உயிரி எரிபொருள் உற்பத்தியில் பயன்படுத்தப்படும். இந்த சூரியகாந்தி விதையிலிருந்து பெறப்படும் எண்ணெயும் விற்பனைக்கு விடப்படும்.

பயிரிடல்

உச்ச சூரியகாந்தி விதை உற்பத்தியாளர்கள் - 2005
ஆதாரம்: ஐ.நா. உணவு மற்றும் விவசாய நிறுவனம் (FAO)[5]
நிலை நாடு 106 டன் பரப்பளவு (கிமி²)
1 உருசியா6.31,70,75,400
2 உக்ரைன்4.76,03,700
3 அர்கெந்தீனா3.727,80,400
4 சீனா1.995,98,086
5 இந்தியா1.931,66,414
6 ஐக்கிய அமெரிக்கா1.896,29,091
7 பிரான்சு1.56,32,759
8 அங்கேரி1.393,028
9 உருமேனியா1.32,38,391
10 துருக்கி1.07,83,562
11 பல்கேரியா0.91,10,993
12 தென்னாப்பிரிக்கா0.712,21,037
உலக மொத்தம்31.1

ஊட்டச்சத்துப் பெறுமதி

லினோலெயிக் அமிலத்தையும்விட [6]மேலதிகமாக, சூரியகாந்தி விதைகள் சிறந்த உணவுக்குகந்த நார்ப்பொருள் மூலங்கள், சில அமினோ அமிலம், உயிர்ச்சத்து ஈ, உயிர்ச்சத்து பி மற்றும் உணவுக்குகந்த கனிமங்களான செப்பு, மாங்கனீசு, பொட்டாசியம், மக்னீசியம், இரும்பு, பாசுபரசு, செலீனியம், கல்சியம், துத்தநாகம் ஆகியவற்றையும்[7] கொண்டுள்ளது.[8]

குறிப்புக்கள்

வெளி இணைப்புக்கள்

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.