பேரீச்சை

பேரீச்சை Phoenix dactylifera பனை வகையைச் சேர்ந்த ஒரு மரம். இம்மரம் இதனுடைய இனிப்பான பழங்களுக்காக வளர்க்கப்படுகிறது. இம்மரம் முதன்முதலில் எங்கு வளர்க்கப்பட்டது என்பதற்கான விவரம் தெரியவில்லை எனினும் பெர்சியக் குடாவில் தொடங்கியிருக்கலாம் என்று கருதப்படுகிறது.[1] இது ஒரு நடுத்தர அளவுள்ள தாவரம். 15 முதல் 25 மீட்டர் உயரம் வரை வளரக்கூடியது. இதன் ஓலைகள் 4 முதல் 6 மீட்டர் நீளம் வரை இருக்கும். ஓர் ஓலையில் 150 ஈர்க்குகள் வரை இருக்கும். ஒவ்வோர் ஈர்க்கும் 30 செ. மீ நீளம் வரை வளரும். மரத்தின் உச்சி 6 முதல் 10 மீட்டர் வரை இருக்கும். ஒவ்வொரு பழமும் அதன் அளவையும் வகையையும் பொறுத்து 20-70 கலோரி சத்தினைக் கொண்டிருக்கும்.இம்மரம் தோற்றத்தில் தமிழகத்தில் இயல்பாக காணப்படும் ஈச்சை மரத்தை ஒத்தது.

பேரீச்சை
துபையின் ரசீதியாவில் உள்ள ஒரு பேரீச்சை மரம்
உயிரியல் வகைப்பாடு
திணை: தாவரம்
தரப்படுத்தப்படாத: பூக்கும் தாவரம்
தரப்படுத்தப்படாத: ஒருவித்திலையி
தரப்படுத்தப்படாத: Commelinids
வரிசை: Arecales
குடும்பம்: Arecaceae
பேரினம்: Phoenix
இனம்: P. dactylifera
இருசொற் பெயரீடு
Phoenix dactylifera
லி.
Dates in salem

உற்பத்தி

பேரீச்சை விவசாயம் செய்பவர்கள் அதற்கான மகரந்தச் சேர்க்கையை செயற்கை முறையில் செய்கின்றனர். தனியாக ஆண் மரத்தை வைத்து, அதில் பூ வரும்போது மகரந்தத்தைச் சேகரித்து, அதை பெண் மரங்களின் பூக்களில் தெளித்து மகரந்த சேர்க்கையை செய்கின்றனர்.[2]

குவைத் நகரத்தின் பழைய கடைத்தெருவில் உள்ள பேரீச்சை வணிகர்
புரைதாவில் உள்ள பேரீச்சை நகரம்
Date output in 2012
முதல் இருபது பேரீச்சை உற்பத்தியாளர்கள் — 2009
(1000 மெற்றிக் தொன்கள்)
 எகிப்து1,350.00
 ஈரான்1,088.04
 சவூதி அரேபியா 1,052.40
 ஐக்கிய அரபு அமீரகம் 759.00
 பாக்கித்தான்735.28
 அல்ஜீரியா 600.70
 ஈராக்507.00
 சூடான்339.30
 ஓமான் 278.59
 லிபியா160.10
 தூனிசியா 145.00
 சீனா140.00
 மொரோக்கோ72.00
 யேமன்56.76
 நைஜர் 37.79
 துருக்கி25.28
 இசுரேல் 22.19
 கட்டார் 21.60
 மூரித்தானியா 20.00
 சாட் 18.78
மொத்த உலக உற்பத்தி7462.51 (இற்கு மேல்)
Source:
ஐநா உணவு, வேளாண்மை அமைப்பு (FAO)
[3]

உணவுப் பயன்பாடு

பேரீச்சை
100 கிராமில் உள்ள ஊட்டச் சத்து
ஆற்றல் 280 kcal   1180 kJ
மாப்பொருள்     75.03 g
- சர்க்கரை  63.35 g
- நார்ப்பொருள் (உணவு)  8 g  
கொழுப்பு0.39 g
புரதம் 2.45
நீர்20.53 g
தயமின்  0.052 mg  4%
ரிபோஃபிளாவின்  0.066 mg  4%
நியாசின்  1.274 mg  8%
பான்டோதெனிக் அமிலம்  0.589 mg 12%
உயிர்ச்சத்து பி6  0.165 mg13%
இலைக்காடி (உயிர்ச்சத்து பி9)  19 μg 5%
உயிர்ச்சத்து சி  0.4 mg1%
உயிர்ச்சத்து ஈ  0.05 mg0%
உயிர்ச்சத்து கே  2.7 μg3%
கால்சியம்  39 mg4%
இரும்பு  1.02 mg8%
மக்னீசியம்  43 mg12% 
பாசுபரசு  62 mg9%
பொட்டாசியம்  656 mg  14%
சோடியம்  2 mg0%
துத்தநாகம்  0.29 mg3%
ஐக்கிய அமெரிக்கா அரசின்
வயதுக்கு வந்தவருக்கான,
உட்கொள்ளல் பரிந்துரை .
மூலத்தரவு: USDA Nutrient database

பேரீச்சை வகைகள்

அரபு நாடுகளில் ஏராளமான பேரீச்சை வகைகள் காணப்படுகின்றன. அவற்றிற் சில பின்வருமாறு:

தமிழ்அரபுதமிழ்அரபுதமிழ்அரபுதமிழ்அரபு
அஃபந்தீأفنديஜுபைலீجبيليமக்தூமீمكتوميஸுவைத்سويدا
அஜ்வாعجوةகஈகாكعيكهமினைஃபீمنيفيஷஹ்ல்شهل
அன்பராعنبرةகலாஸ்خلاصமிஸ்கானீمسكانيஷலாபீشلابي
பைள்بيضகுள்ரீخضريமுஷௌகாمشوكةஷுக்ரீشقري
பர்னீبرنيகுஸாப்خصابரபீஆربيعةஸுஃப்ரீصفري
பர்ஹீبرحيலூனாلونةரஷூதியாرشوديهஸுக்கரீسكري
கர்غرலுபானாلبانةஸஃபாவீصفاويஸுக்ஈصقعي
ஹல்வாحلوةமப்ரூம்مبرومஷைஷீشيشيவனானாونانة
ஹில்யாحليةமஜ்தூல்مجدولஸாரியாساريةசாவீذاوي

மேற்கோள்கள்

  1. Morton, J. 1987. Date. p. 5–11. In: Fruits of warm climates. Julia F. Morton. Miami, FL. — Purdue University. Center for New Crops and Plants Products.
  2. ஆர்.கிருஷ்ணகுமார் (2018 அக்டோபர் 6). "தமிழ்நாட்டிலும் விளையும் பேரீச்சை". கட்டுரை. இந்து தமிழ். பார்த்த நாள் 7 அக்டோபர் 2018.
  3. "Food and Agricultural commodities production". FAOSTAT (2009). பார்த்த நாள் 2011-10-20.

வெளி இணைப்புக்கள்

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.