செவ்வாழை
வாழைப்பழங்களில் செவ்வாழை (செந்த்துழுவன்; Red Dacca bananas) சிறப்பு வாய்ந்தது ஆகும். இதன் தாயகம் தென்மேற்கு ஆசியா எனக் கருதப்படுகிறது. தமிழகத்தில் கன்னியாகுமரி மாவட்டத்தில் இது அதிகம் விளைகிறது.
Musa acuminata 'Red Dacca' | |
---|---|
செவ்வாழைச் சீப்புகள் | |
இனம் | |
Musa acuminata | |
பயிரிடும்வகைப் பிரிவு | |
AAA Group (Cavendish group) | |
வெளியீட்டு நிறுவனம் | |
'Red Dacca' | |
தோற்றம் | |
West Indies, Central America |

தக்கலை வாழைப்பழ சந்தை, கன்னியாகுமரி மாவட்டம்
தோற்றம்
செவ்வாழை மரங்கள் மற்ற வாழைமரங்களை விட தண்டு பகுதியில் சற்று சிவந்து காணப்படும். பொதுவாக வாழை மரங்கள் செம்மண் பகுதியில் செழித்து வளருகின்றன. 1870–1880 ஆண்டுகளின் இடைப்பட்ட காலங்களில் முதன் முதலாக டொராண்டோ சந்தைகளில் இவ்வகைப்பழங்கள் விற்கப் பட்டன.[1] தமிழகத்தின் தென்கோடியில் அதிகமாகப்பயிரிடப்படும் இவை தற்போதைய காலங்களில் இதன் பயிரிடல் குறைந்து வருகிரது. [2]
பயன்கள்
- இயற்கையியலாளர்களின் கருத்துப்படி வடிவமும், நிறமும் அதற்குரியப் பயன்களைத் தரும். அக்கருத்துப்படி, இது சிவப்பு நிறமாக இருப்பதால் இரத்த மண்டலத்திற்கும், ஆண்மைக்கான ஊட்டச்சத்துகளும் இருப்பதாக கருதப்படுகிறது. *கண்களுக்குத் தேவையான ஊட்டச்சத்துகள் அதிகமாகக் காணப்படுகின்றன.
- செரிமானக்கோளாறுகள் மலச்சிக்கல், மூலநோயால் பாதிக்கப்பட்டவர்கள் தினமும் ஒரு வாழைப்பழம் சாப்பிட்டால் அந்த நோய்ப் பாதிப்பில் இருந்து படிப்படியாக விடுபடலாம்.
குறிப்புகள்
- அறிஞர் அண்ணா செவ்வாழை என்ற சிறுகதையை எழுதியுள்ளார்.
This article is issued from
Wikipedia.
The text is licensed under Creative
Commons - Attribution - Sharealike.
Additional terms may apply for the media files.