களுத்துறை
களுத்துறை | |
![]() ![]() களுத்துறை
| |
மாகாணம் - மாவட்டம் |
மேல் மாகாணம் - களுத்துறை |
அமைவிடம் | 6.5761°N 79.9658°E |
- கடல் மட்டத்திலிருந்து உயரம் |
- 0-11 மீட்டர் |
கால வலயம் | இ.சீ.நே (ஒ.ச.நே + 05:30) |
மக்கள் தொகை (2001) - நகரம் (2001) |
141414 - 37081 |
குறியீடுகள் - அஞ்சல் - தொலைபேசி - வாகனம் |
- 12000 - +9434 - WP |
களுத்துறை இலங்கையின் மேல் மாகாணத்தின் களுத்துறை மாவட்டத்தில் அமைந்துள்ள மாநகரசபை ஆகும். இது மாவட்ட தலைநகரமுமாகும். கொழும்பில் இருந்து தெற்குத் திசையில் இலங்கையின் மேற்கு கரையோரத்தில் களுகங்கை கடலோடு கலக்கும் இடத்தில் அமைந்துள்ளது. களுத்துறையில் காணப்படும் பௌத்த விகாரை இலங்கை பௌத்தர்களுக்கு முக்கியமான வணக்கத்தலமாகும்.
புவியியலும் காலநிலையும்
களுத்துறை கரையோர சமவெளி என அழைக்கப்படும் இலங்கையின் புவியியல் பிரிவில் அமைந்துள்ளது. கடல் மட்டத்துக்கு மேல் சுமார் 0-11 மீற்றர் உயரத்தில் காணப்படுகிறது. இங்கு வருடாந்த சராசரி வெப்பநிலை 27 பாகை செல்சியஸ் ஆகும். பெரும்பாலான மழைவீழ்ச்சி தென்மேற்கு பருவக்காற்று மூலம் கிடைக்கிறது. 2500-3125 மி.மீ. வருடாந்த சராசரி மழைவீழ்ச்சியை பெறுகின்றது.
மக்கள்
இது சிங்களவரை பெரும்பான்மையாக கொண்ட ஒரு மாநகரசபை ஆகும். இங்குள்ள மக்களில் பெரும்பான்மையினர் பௌத்த மதத்தைச் சேர்ந்தவராவர். 2001 இலங்கை அரசின் மக்கள் தொகை கணிப்பீட்டில மக்களின அடிப்படையிலான மக்கள் தொகைப் பரம்பல் பின்வருமாறு:
பிரிவு | மொத்தம் | சிங்களவர் | இலங்கைத் தமிழர் | இந்தியத் தமிழர் | முஸ்லிம்கள் | பரங்கியர் | ஏனைய |
---|---|---|---|---|---|---|---|
மொத்தம் | 141414 | 128004 | 1646 | 504 | 10952 | 184 | 124 |
நகரம் | 37081 | 26552 | 582 | 252 | 9583 | 66 | 32 |
கிராமம் | 104333 | 101452 | 1064 | 252 | 1369 | 118 | 64 |
2001 இலங்கை அரசின் மக்கள் தொகை கணிப்பீட்டில் மத அடிப்படையிலான மக்கள் தொகைப் பரம்பல் வருமாறு:
பிரிவு | மொத்தம் | பௌத்தர் | இந்து | இஸ்லாம் | கத்தோலிக்கம் | ஏனைய கிறிஸ்தவம் | ஏனைய |
---|---|---|---|---|---|---|---|
மொத்தம் | 141414 | 119587 | 1447 | 11032 | 8895 | 428 | 25 |
நகரம் | 37081 | 23294 | 471 | 9627 | 3504 | 179 | 6 |
கிராமம் | 104333 | 96293 | 976 | 1405 | 5391 | 249 | 19 |
கைத்தொழில்
நகரத்தில் சேவை சார் தொழில்கள் முக்கிய இடம் வகிப்பதோடு நகரைச் சுற்றிய பகுதிகளில் நெற்பயிர்ச் செய்கை முக்கிய இடத்தை பெறுகிறது.