வவுனியா

வவுனியா இலங்கையின் வடமாகாணத்தில் உள்ள ஒரு நகரமாகும். வவுனியா மாவட்டத்தின் தலைநகரம் ஆகும். இதன் எல்லைகளாக மன்னார், முல்லைத்தீவு, அனுராதபுரம், திருகோணமலை ஆகிய மாவட்டங்கள் அமைந்துள்ளன. இலங்கையில் இரு தசாப்தங்களிற்கும் மேலாக நடந்த உள்நாட்டுப் போரினால் மக்கள் இடம் பெயர்ந்து இப்பகுதியில் குடியேறினார்கள். இலங்கையின் வடக்குக் கிழக்கு மாகாணத்தில் மிகவும் வளர்ச்சியுடைய நகரமாக அமைந்துள்ளது. ஈழப்போரில் வன்னிப் பகுதியில் இருந்து இடம்பெயர்ந்தவர்களில் பல்லாயிரக்கணக்கானோர் இம்மாவட்டத்திலேயே உள்ளனர். மெனிக்பாம் நலன்புரி நிலையம் இங்கு அமைந்துள்ளது.

வவுனியா
ஒரு தோற்றம்.
வவுனியா நகரின் ஒரு பகுதி.

வவுனியா
மாகாணம்
 - மாவட்டம்
வட மாகாணம்
 - வவுனியா
அமைவிடம் 8.754239°N 80.497971°E / 8.754239; 80.497971
 - கடல் மட்டத்திலிருந்து உயரம்

 - 30-120 மீட்டர் மீட்டர்

கால வலயம் இ.சீ.நே (ஒ.ச.நே + 05:30)
அரச அதிபர் திரு.பந்துல ஹரிச்சந்திரா
குறியீடுகள்
 - அஞ்சல்
 - தொலைபேசி
 - வாகனம்
 
 - 43000
 - +94-24,
 - NP

கல்வி

பல்கலைக்கழகம்

வவுனியா மாவட்ட அளவிடைக்கான படம்

யாழ் பல்கலைக்கழகத்தின் வவுனியா வளாகம் வவுனியா நகரப் பகுதியில் அமைந்துள்ளது. இவ் வளாகத்திற்காக ஒரு தொகுதி நிலப்பரப்பானது A30 வவுனியா மன்னார் வீதியில், வவுனியா நகரத்திலிருந்து 8 கிமீ தொலைவிலுள்ள பம்பைமடுப் பகுதியில் ஒதுக்கப்பட்டு விடுதிகளிற்கான ஆரம்பவேலைகள் தொடங்கியுள்ளபோதிலும் உள்நாட்டுப் போர் காரணமாக இதன் கட்டட வேலைகள் முடிவடையவில்லை.

இதை விட வவுனியா குருமன்காட்டில் விஞ்ஞான பீடமும், மற்றும் புகையிரத நிலைய வீதியூடாகச் செல்லும் உள்வட்ட வீதியில் முகாமைத்துவக் கற்கைகளும் பார்க் வீதியில் யாழ் பல்கலைக்கழகத்தின் ஆங்கில பீடமும் அமைந்துள்ளன.

பாடசாலைகள்

தொழில் நுட்பக் கல்லூரி

வவுனியா தொழில் நுட்பக் கல்லூரி வவுனியா மன்னார் வீதியில் ஏறத்தாழ 5 கிமீ தொலைவில் அமைந்துள்ளது. இதை விட வவுனியா பூந்தோட்டத்தில் தேசிய கல்வியியல் கல்லூரி அமைந்துள்ளது.

விவசாயக் கல்லூரி

வவுனியா யாழ்ப்பாணம் வீதியில் தாண்டிக்குளம் என்ற இடத்தில் வவுனியா விவசாயக் கல்லூரி அமைந்துள்ளது. இந்தக் கல்லூரி, 1989 ஆம் ஆண்டு வடகிழக்கு மாகாணத்தில், விவசாய பட்டயப் படிப்பை வழங்குவதற்காக ஆரம்பிக்கப்பட்டது.

மத வழிபாட்டுத் தலங்கள்

வவுனியாவில் நான்கு மதங்களுக்குமான வழிபாட்டுத் தலங்கள் உள்ளன.

சைவக் கோயில்கள்

காவடி எடுக்கும் பக்தர்கள்
  • சித்திவிநாயகர் ஆலயம், குடியிருப்பு
  • வவுனியா கோவில்குளம் சிவன் கோயில்
  • லக்ஷ்மி சமேத நரசிங்கர் ஆலயம், பூந்தோட்டம்
  • வவுனியா சிறிதேவி பூதேவி மகாவிஷ்ணு கோயில்
  • காளிகோயில்-குருமன்காடு
  • ஸ்ரீ கந்தசாமி கோயில் வவுனியா நகர்
  • ஸ்ரீ கந்தசாமி கோயில் தாண்டிக்குளம்
  • சிந்தாமணிப் பிள்ளையார் கோயில்
  • பழனி மலை முருகன் கோயில்-சிதம்பரபுரம்
  • ஸ்ரீ சித்திவிநாயகர் ஆலயம்-வெளிக்குளம்
  • சமளங்குளம் கல்லுமலை பிள்ளையார் கோவில்
  • ஸ்ரீ முத்துமாரி அம்மன் தேவஸ்தானம்- சமளங்குளம்
  • ஸ்ரீ முத்துமாரி அம்மன் தேவஸ்தானம்- தெற்கிலுப்பைக்குளம்
  • ஸ்ரீ நரசிம்மர் ஆலயம்-தெற்கிலுப்பைக்குளம்
  • ஐயப்பன் தேவஸ்தானம்-கோவில்குளம்.
  • கருமாரி அம்மன் கோவில் (வைஜயந்த் சர்மா)
  • தேடிவந்த பிள்ளையார் கோவில் (வைத்தீஸ்வரக்குருக்கள்)
  • பூவரசங்குளம் ஸ்ரீ பாலமுருகன் ஆலயம்.
  • ஸ்ரீ சித்தி விநாயகர் ஆலயம் , கூமாங்குளம்
  • ஸ்ரீ முத்துமாரி அம்மன் தேவஸ்தானம் - தோணிக்கல்
  • சாஸ்த்திரிகூழாங்குளம் சிவன் கோயில்

கிறித்தவ ஆலயங்கள்

  • கல்வாரி (இயேசு பகவானின் அவதாரங்களை உள்ளடக்கிய சிற்பங்கள் உள்ளது)
  • புனித அந்தோனியார் தேவாலயம்-இறம்பைக்குளம்
  • கிறிஸ்து அரசா் ஆலயம் -குருமன்காடு
  • புனித செபஸ்ரியார் தேவாலயம்-தெற்கிலுப்பை
  • குருசாண்டவர் தேவாலயம்- தச்சன்கு
  • யெகோவாவின் சாட்சிகளின் வணக்கஸ்தலம் - உக்குளாம் குளம்
  • புனித குழந்தை இயேசு தேவாலயம்-சமளங்குளம்

போக்குவரத்து

வவுனியா தொடருந்து நிலையம் ஊடான தொடருந்து சேவைகள் காங்கேசன்துறை முதல் கொழும்பு கோட்டை வரை நடைபெறுகின்றன. யாழ்ப்பாணத்தில் இருந்து பேருந்து சேவைகள் வவுனியா ஊடாக கொழும்பு மற்றும் பிற நகரங்களுக்குச் செல்கின்றன. இருபத்து நான்கு மணிநேரமும் போக்குவரத்து வசதியை பெற முடிதல் வவுனியா நகரின் சிறப்பாகும்

தொலைத் தொடர்பு

வவுனியாவில் அரச அஞ்சல் அலுவலகம் தவிர முகவர் அஞ்சல் நிலையங்களும் அமைந்துள்ளன.

  • அஞ்சற் குறியீடு: 43000
  • தொலைபேசிக் குறியீடு: 024 (வேறு மாவட்டங்களில் இருந்தும் நகர்பேசியூடாகத் தொடர்பு கொள்ள)

டயலாக், மொபிடெல், ஹட்ச், எயார்டேல், எடிசலட் மற்றும் லங்காபெல் போன்ற தனியார் தொலைபேசி நிறுவங்களும் ஸ்ரீ லங்கா டெலிகொம்மும் தொலைபேசி மற்றும் 4G இணையத்தள சேவையினை வழங்குகின்றன

அரச இலவச Wi-fi ( வயர்லெஸ் ) சேவையினை வவுனியா பேருந்து நிலையம், வவுனியா புகையிரத நிலையம், வவுனியா பொது நூலகம் ஆகிய இடங்களில் பெற முடிவதுடன் தனியார் சேவையினை அசிச்டியா ( Assistia ) நிறுவனம் வழங்குகிறது

வானொலிகள்

இதழ்கள்

  • சகா பத்திரிகை
  • நிலம் - கவி இதழ்
  • தேடல் - இளையோர் தொடர்புசாதனப்பிரிவினது
  • பூங்கனி - மாதமொருமுறை
  • வெளி - சிந்தனை இதழ்

மேற்கோள்கள்

வெளி இணைப்புகள்

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.