பேருந்து

பேருந்து[1] அல்லது மக்கள் இயங்கி[2] (Bus) என்பது சாலையில் கூடுதலான பயணிகளை ஏற்றிச் செல்லும் வகையில் வடிவமைக்கப்பட்ட ஊர்தியாகும். பேருந்தானது அதிகப்படியாக 300 பயணிகள் வரை பயணிக்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. இன்றைய நகர வாழ்க்கையில் இன்றியமையாத அங்கமாக இது விளங்குகின்றது. மேலும், பள்ளிக்கூடங்கள், கல்லூரிகள், நிருவாகங்கள், சுற்றுலாத்துறைகள் என்று பலதரப்பினர்கள் தங்கள் மாணவர்களின், ஊழியர்களின், வாடிக்கையாளர்களின் போக்குவரத்துக்காகப் பேருந்துகளைப் பயன்படுத்துகின்றன. மாநகரப் பேருந்துகள் அதிகமுள்ள நகரம் நியூயார்க்கு ஆகும்.

சென்னை மாநகரப் போக்குவரத்துக் கழகத்தின் பேருந்து
Benz-Omnibus, 1896

வடிவமைப்பு

கட்டமைப்பு

பேருந்தானது பொதுவாக முன்புற, பின்புற வாசல்கள் உடையதாக அமைக்கப்பட்டிருக்கும். பேருந்தின் விசைப்பொறி முன்புறத்தில் இருக்கும்.

உற்பத்தி

பேருந்து உற்பத்தில் அடித்தள உற்பத்தி, மேற்கூரை கட்டுதல் ஆகியவை இரு பெரும்பிரிவுகள். இலைலேண்டு, தாட்டா போன்ற நிறுவனங்கள் இந்தியாவில் பேருந்து உற்பத்தியில் முன்னிலை வகிப்பவை.

அடித்தள உற்பத்தி

  • விசைப்பொறியும் கதிர்த்தியும்
  • பல்லிணைப்பெட்டியும் (Gearbox) கதிமாற்றலும் (Transmission)
  • சில்லுகள்
  • முகப்புத்தட்டு, சுக்கான், ஓட்டுநர் இருக்கை

மேற்கூரை கட்டுதல்

  • இருக்கைகள் அமைத்தல்
  • மேற்கூரை வடிவமைப்பு
  • கதவுகளின் எண்ணிக்கையும் அவற்றின் அமைவிடங்களும்

அடிக்குறிப்பு

  1. ஐந்து பேர் என்னும்போது 'பேர்' என்னும் சொல் பொதுமக்களை உணர்த்தும். இந்த வகையில் பொதுமக்களை உந்திச் செல்லும் ஊர்தியைப் 'பேருந்து' என்கிறோம். உந்திச் செல்லத் தன்னுடைமையாக வைத்துக்கொள்ளும் ஊர்திகளைத் 'தன்னுந்து' என்கிறோம்.
  2. http://www.projectmadurai.org/pm_etexts/utf8/pmuni0108.html இளைஞர் இலக்கியம், பாரதிதாசன்
This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.