காப்பு நிலை

காப்பு நிலை (Conservation status) என்பது ஓர் இனம் தற்போது அல்லது வருங்காலத்தில் பிழைத்திருக்குமா என்பதற்கான ஓர் அளவீடு ஆகும். ஓர் இனத்தின் காப்புநிலையை தீர்மானிக்கும் முன்னர் பல காரணிகள் ஆராயப்படுகின்றன. தற்பொழுதுள்ள எண்ணிக்கையை மட்டும் கவனத்தில் கொள்ளாமல், நாளடைவில் அவற்றின் இனத்தொகையின் வளர்ச்சி அல்லது தளர்ச்சி, இனப்பெருக்க வீதம், தெரிந்த ஆபத்துகள் என்பவையும் கருத்தில் கொள்ளப்படுகிறது.

உலக அமைப்புகள்

உலக அளவில் இனங்களின் காப்பு நிலையை பட்டியலிட்டு வரிசைப்படுத்துவதில் முதன்மை அமைப்பாக பன்னாட்டு இயற்கைப் பாதுகாப்புச் சங்கம் விளங்குகின்றது. இவ்வமைப்பினால் காப்புநிலையை குறித்து வெளியிடப்பட்ட பட்டியல் IUCN சிவப்புப் பட்டியல் எனப்படுகின்றது. இந்த காப்புநிலைப் பட்டியலில் அச்சுறுத்தலுக்கு உள்ளாகும் இனங்கள், மூன்று நிலைகளில் பிரிக்கப்பட்டுள்ளன. அவையாவன:மிக அருகிய இனம் (CR), அருகிய இனம் (EN), அழிவாய்ப்பு இனம் (VU).
தவிர கிபி 1500 இலிருந்து இனஅழிவு காரணமாக அழிவடைந்த இனங்களும் இங்கே அழிந்த அற்றுவிட்ட இனங்கள், இயலிடத்தில் அற்றுவிட்ட இனங்கள் என ஆவணப்படுத்தப்பட்டுள்ளன.

அருகிய வனவிலங்குகள் மற்றும் தாவர இனங்களில் பன்னாட்டு வணிகத்திற்கான பேரவை (CITES) பன்னாட்டு வணிகத்தின் வழியே இவ்வினங்கள் அழியாமல் இருப்பதை உறுதி செய்யும் நோக்குடன் செயல்படுகிறது.

வெளியிணைப்புகள்

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.