தீவாய்ப்புக் கவலை குறைந்த இனம்
தீவாய்ப்புக் கவலை குறைந்த இனம் (LC - Least Concern) என்பது ஒரு உயிர்வாழும் இனத்திற்கு பன்னாட்டு இயற்கைப் பாதுகாப்புச் சங்கத்தினால் வழங்கப்படும் சிவப்புப் பட்டியலில், அமைந்திருக்கக்கூடிய காப்பு நிலைகளில் ஒன்றாகும். மதிப்பீடு செய்யப்பட்டிருப்பினும், காப்பு நிலைகளில் வேறெந்தவொரு பிரிவினுள்ளும் வராத இனங்கள் இப்பிரிவினுள் அடக்கப்படுகின்றன. மனிதர் உட்பட எலி, தேனீ போன்ற பொதுவான பல இனங்கள் இப்பிரிவினுள் வரும்.
ஆனால் இப்பிரிவினுள் ஒரு இனத்தை அடையாளப்படுத்த முன்னர், இவ்வினத்தின் சனத்தொகை, சனத்தொகைப் பரவல் போன்றவை நுணுக்கமாக மதிப்பீடு செய்யப்பட்டு, போதியளவு தரவுகள் பெறப்பட்டிருக்க வேண்டும்.
ICUN வகைப்படுத்தல் ![]() படத்திலுள்ள ஒவ்வொரு வட்டத்தின் மேல் அழுத்தும்போதும், இணைய உலாவியானது பொருத்தமான கட்டுரைக்கு இட்டுச் செல்லும் |
"தீவாய்ப்புக் கவலை குறைந்த இனம்" என அடையாளப்படுத்தும் வரைவு |
காப்பு நிலை |
---|
அழிந்து போவதற்கான சூழ் இடரின் அடிப்படையில் |
இன அழிவு (Extinction) |
அற்றுவிட்ட இனம் (EX) இயலிடத்தில் அற்றுவிட்ட இனம் (EW) |
இன அச்சுறுத்தல் (Threatened) |
மிக அருகிய இனம் (CR) அருகிய இனம் (EN) அழிவாய்ப்பு இனம் (VU) |
குறைந்த சூழ் இடர் (At Low risk) |
காப்பு சார்ந்த இனம் (CD) அச்சுறு நிலையை அண்மித்த இனம் (NT) தீவாய்ப்புக் கவலை குறைந்த இனம் (LC) |
இதனையும் பார்க்க சிவப்புப் பட்டியல் பன்னாட்டு இயற்கைப் பாதுகாப்புச் சங்கம் ![]() |
This article is issued from
Wikipedia.
The text is licensed under Creative
Commons - Attribution - Sharealike.
Additional terms may apply for the media files.