முயல் மசால்

முயல் மசால் (Stylosanthes hamata) கால்நடைகளுக்கான பயறு வகை தீவனப் பயிராகும். இது பிரேசிலைத் தாயகமாகக் கொண்டது. வெப்ப மண்டலப் பிரதேசங்களில் வறட்சியினைத் தாங்கி, குறைந்த அளவு வளம் கொண்ட மண், அமிலத்தன்மை கொண்ட மண் மற்றும் குறைந்த வடிகால் உள்ள பகுதியில், முயல் மசால் வளரக் கூடியது. ஒரு வருடத்திற்கு, ஒரு எக்டேரில் 35 டன்கள் வரை இப்பயிரை அறுவடை செய்யலாம்[1]. புரதச்சத்து நிறைந்த முயல்மசாலை இறவையிலும், மானாவாரியிலும் பயிரிடலாம்[2][3].

Stylosanthes hamata
உயிரியல் வகைப்பாடு
திணை: தாவரம்
பிரிவு: கலன்றாவரம்
வகுப்பு: Magnoliopsida
வரிசை: Fabales
குடும்பம்: பபேசியே
பேரினம்: Stylosanthes
இனம்: Stylosanthes hamata
இருசொற் பெயரீடு
Stylosanthes hamata
(L.)Taub.
வேறு பெயர்கள்

Stylosanthes procumbens Sw.
Stylosanthes eriocarpa S.F.Blake
Hedysarum hamatum L.

மேற்கோள்கள்

  1. "தீவன உற்பத்தி: பயறு வகை தீவனப் பயிர்கள்". தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம். பார்த்த நாள் 5 மார்ச் 2016.
  2. "முயல், வேலி மசால் பயிர் சாகுபடிக்கு அரசு மானியம்". தினமலர். 26 நவம்பர் 2011. http://www.dinamalar.com/news_detail.asp?id=356135. பார்த்த நாள்: 5 மார்ச் 2016.
  3. "பலன் தரும் பசுந்தீவனச் சாகுபடி!". தினமணி. 5 சூலை 2012. http://www.dinamani.com/tamilnadu/article863942.ece?service=print. பார்த்த நாள்: 5 மார்ச் 2016.
This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.