இந்திய ரூபாய்

இந்தியாவின் நாணயம் இந்திய ரூபாய் என அழைக்கப்படுகிறது. இந்திய ரிசர்வ் வங்கி இந்திய ரூபாயை வெளியிடுகிறது. ஒரு ரூபாய் தாள்கள் முதல் இரண்டாயிரம் ரூபாய் வரையிலான நாணயங்களை வெளியிடும் அதிகாரம் இந்திய அரசுக்கு உண்டு.[1] INR என்பது இந்திய ரூபாயின் ஐஎஸ்ஓ 4217 குறியீடு. தற்போது ரிசர்வ் வங்கியால் 5, 10, 20, 50, 100, 500 மற்றும் 2000 வரையிலான ரூபாய் தாள்கள் அச்சடிக்கப்படுகின்றன. இவற்றுள் 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுக்களை இந்திய அரசாங்கம் நவம்பர் 08 ஆம் திகதி 2016 ஆம் ஆண்டு இரவிலிருந்து கருப்பு பண புழக்கத்தை முடக்கும் பொருட்டு செல்லாது என்று அறிவித்தது. ஆனால் 500, 2000 ஆகியவற்றின் புதுவடிவ நோட்டுக்கள் 11 ஆம் திகதி நவம்பர் 2016 அன்று வங்கிகளில் கிடைக்கும் என்று அறிவித்தது.[2] உலோக நாணயங்கள் 1, 2, 5, 10, 20,25, 50, 100, 500 மற்றும் 1000 வரையிலான மதிப்புகளில் வெளியிடப்படுகின்றன. 20 க்கு அதிகமான மதிப்புடைய நாணயங்கள் நினைவு நாணயங்களாக வெளியிடப்படுகின்றன. அதாவது, இவை புகழ்வாய்ந்த நபர்களையோ அல்லது ஏதேனும் ஒரு நிகழ்வையோ குறிப்பிடும் வகையில் வெளியிடப்படுகின்றன. 50 பைசாவுக்கு குறைவான பைசா நாணயங்கள் தற்போது புழக்கத்தில் இல்லை.

இந்திய ரூபாய்
இந்திய ரூபாயின் சின்னம்
ஐ.எசு.ஓ 4217
குறிINR
வகைப்பாடுகள்
சிற்றலகு
1/100பைசா
குறியீடு
பைசாp
முன்னர் பாவிக்கப்பட்ட குறியீடு(கள்)Rs, ರೂ, രൂ, ৳, ૱, రూ, ௹, रु
வங்கிப் பணமுறிகள்
அதிகமான பயன்பாடு10, 20, 50, 100, 500, 2000 ரூபாய்
Rarely used5 ரூபாய்
Coins
Freq. used1, 2, 5, 10 ரூபாய்
Rarely used50 பைசா
மக்கள்தொகையியல்
Official user(s) இந்தியா
Unofficial user(s) பூட்டான்
 நேபாளம்
Issuance
நடுவண் வங்கிஇந்திய ரிசர்வ் வங்கி
Websitewww.rbi.org.in
Mintஇந்திய நாணயத் தயாரிப்பகம்
Websitewww.igmint.org
Valuation
Inflation10.7 %
Sourceஉலகத் தரவுப் புத்தகம் 2009.
Pegged byபூட்டான் நகுல்ட்டிரம்
நேபாள ரூபாய் (1 INR = 1.6 NPR)

சொற்பிறப்பியல்

ரூபாய் என்கிற பதம் சமஸ்கிருத வார்த்தையான ரூப்யா என்கிற வார்த்தையிலிருந்து வந்தது. வடமொழியில் ரூப்யா என்பதற்கு வெள்ளி (பணம்) என்பது பொருள், இங்கிலாந்தின் நாணயமான பவுண்டு ஸ்டெர்லிங்கிலும் ஸ்டெர்லிங் என்பது வெள்ளியையே குறிக்கிறது. இந்தியாவில் பெரும்பான்மையாக ருபீ, ரூபாய், ரூபயி போன்ற பெயர்களால் அழைக்கப்படுகிறது, ஆனால் கிழக்கு இந்தியாவின் மேற்கு வங்காளம், ஒரிசா, அசாம் போன்ற மாநிலங்களில் "டாக்கா" என்னும் சமஸ்கிருதப் பெயரிலிருந்து தோன்றிய பெயரால் அழைக்கப்படுகிறது.

பல்வேறு இந்திய மொழிகளில் இந்திய ரூபாய் உச்சரிக்கப்படும் விதம்

  1. টকা (tôka) அசாமிய மொழியில்
  2. টাকা (taka) பெங்காலியில்
  3. ଟଙ୍କା(tanka) ஒரிய மொழிவில்
  4. રૂપિયો (rupiyo) குஜராத்தியில்
  5. रुपया (rupayā) இந்தியில்
  6. روپے (rupay) காஷ்மீரி, உருதுவில்
  7. ರೂಪಾಯಿ (rūpāyi) கன்னடம், துளு
  8. रुपया (rupayā) கொங்கணியில்
  9. രൂപ (rūpā) மலையாளத்தில்
  10. रुपये (rupaye) மராத்தியில்
  11. रुपियाँ(rupiya) நேபாளியில்
  12. ਰੁਪਈਆ (rupiā) பஞ்சாபியில்
  13. रूप्यकम् (rūpyakam) சமசுகிருதத்தில்
  14. रुपियो (rupiyo) சிந்தி (தேவநாகரி)
  15. ரூபாய் (rūpāi) தமிழில்
  16. రూపాయి (rūpāyi) தெலுங்கில்

அசாம் பள்ளத்தாக்கு, மேற்கு வங்காளம், திரிபுரா, ஒடிசா ஆகிய இடங்களில், இந்திய ரூபாய் டங்கா टङ्क (ṭaṇkā) என்கிற வேர்ச்சொல்லை அடிப்படையாகக்கொண்ட வழிச்சொற்களால் வழங்கப்படுகிறது. டங்கா என்பதற்கு பணம் என்பது பொருள் [3]. இந்திய வங்கியின் பணத்தாள்களின் முதற்பக்கத்தில் பணத்தின் மதிப்புடன் ரூபாய் என்கிற வார்த்தையும் ஆங்கிலத்திலும், இந்தியிலும் குறிக்கப்பட்டுள்ளது. பணத்தாளின் பின்புறம் மற்ற 15 இந்திய மொழிகளிலும் ஆங்கில அகரவரிசைப்படி எழுதப்பட்டுள்ளது [4].

பல்வேறு இந்திய மொழிகளில் பணமதிப்புகள்
Language12510205010050010002000
ஆங்கிலம்One RupeeTwo RupeesFive RupeesTen RupeesTwenty RupeesFifty RupeesHundred RupeesFive Hundred RupeesOne Thousand RupeesTwo thousand rupees
பெங்காலிএক টাকাদুই টাকাপাঁচ টাকাদশ টাকাকুড়ি টাকাপঞ্চাশ টাকাশত টাকাপাঁচশত টাকাএক হাজার টাকাদুই হাজার টাকা
குஜராத்திએક રૂપિયોબે રૂપિયાપાંચ રૂપિયાદસ રૂપિયાવીસ રૂપિયાપચાસ રૂપિયાસો રૂપિયાપાંચ સો રૂપિયાએક હજાર રૂપિયાબે હજાર રૂપિયા
இந்திएक रुपयादो रुपयेपाँच रुपयेदस रुपयेबीस रुपयेपचास रुपयेएक सौ रुपयेपांच सौ रुपयेएक हज़ार रुपयेदो हज़ार रुपये
நேபாளிएक रुपियाँदुई रुपियाँपाँच रुपियाँदश रुपियाँबीस रुपियाँपचास रुपियाँएक सय रुपियाँपाँच सय रुपियाँएक हज़ार रुपियाँदुई हजार रुपियाँ
கன்னடம்ಒಂದು ರುಪಾಯಿಎರಡು ರೂಪಾಯಿಗಳುಐದು ರೂಪಾಯಿಗಳುಹತ್ತು ರೂಪಾಯಿಗಳುಇಪ್ಪತ್ತು ರೂಪಾಯಿಗಳುಐವತ್ತು ರೂಪಾಯಿಗಳುನೂರು ರೂಪಾಯಿಗಳುಐನೂರು ರೂಪಾಯಿಗಳುಒಂದು ಸಾವಿರ ರೂಪಾಯಿಗಳುಎರಡು ಸಾವಿರ ರುಪಾಯಿಗಳು
கொங்கணிएक रुपयादोन रुपयापांच रुपयाधा रुपयावीस रुपयापन्नास रुपयाशंभर रुपयापाचशें रुपयाएक हज़ार रुपयादोन हजार रुपया
மலையாளம்ഒരു രൂപരണ്ടു രൂപഅഞ്ചു രൂപപത്തു രുപഇരുപതു രൂപഅമ്പതു രൂപനൂറു രൂപഅഞ്ഞൂറു രൂപആയിരം രൂപരണ്ടായിരം രൂപ
மராத்திएक रुपयादोन रुपयेपाच रुपयेदहा रुपयेवीस रुपयेपन्नास रुपयेशंभर रुपयेपाचशे रुपयेएक हजार रुपयेदोन हजार रुपये
அசாமிএক টকাদুই টকাপাঁচ টকাদহ টকাবিছ টকাপঞ্চাশ টকাএশ টকাপাঁচশ টকাএক হাজাৰ টকাদুহেজাৰ টকা
சமஸ்கிருதம்एकं रूप्यकम्द्वे रूप्यकेपञ्च रूप्यकाणिदश रूप्यकाणिविंशती रूप्यकाणिपञ्चाशत् रूप्यकाणिशतं रूप्यकाणिपञ्चशतं रूप्यकाणिसहस्रं रूप्यकाणिद्विसहस्रं रूप्यकाणि
தமிழ்ஒரு ரூபாய்இரண்டு ரூபாய்ஐந்து ரூபாய்பத்து ரூபாய்இருபது ரூபாய்ஐம்பது ரூபாய்நூறு ரூபாய்ஐந்நூறு ரூபாய்ஆயிரம் ரூபாய்இரண்டாயிரம் ரூபாய்
தெலுங்குఒక రూపాయిరెండు రూపాయిలుఐదు రూపాయిలుపది రూపాయిలుఇరవై రూపాయిలుయాభై రూపాయిలునూరు రూపాయిలుఐదువందల రూపాయిలువెయ్యి రూపాయిలురెండు వేల రూపాయలు
பஞ்சாபிਏਕ ਰੁਪਏਦੋ ਰੁਪਏਪੰਜ ਰੁਪਏਦਸ ਰੁਪਏਵੀਹ ਰੁਪਏਪੰਜਾਹ ਰੁਪਏਇਕ ਸੋ ਰੁਪਏਪੰਜ ਸੋ ਰੁਪਏਇਕ ਹਜਾਰ ਰੁਪਏਦੋ ਹਜ਼ਾਰ ਰੁਪਏ
உருதுایک روپیہدو روپےپانچ روپےدس روپےبیس روپےپچاس روپےایک سو روپےپانچ سو روپےایک ہزار روپےدو ہزار روپے
ஒரியா1 ଟଙ୍କ2 ଟଙ୍କ୫ ଟଙ୍କ୧୦ ଟଙ୍କ୨୦ ଟଙ୍କ୫୦ ଟଙ୍କ୧୦୦ ଟଙ୍କ୫୦୦ ଟଙ୍କ୧୦୦୦ ଟଙ୍କଦୁଇ ହଜାର ଟଙ୍କା

ரூபாய் தாள்களின் அம்சங்கள்

‘அசோக ஸ்தூபி’ வரிசை

1950இல் இந்திய ரிசர்வ் வங்கியால் வெளியிடப்பட்ட ரூபாய் தாள்கள் ஆங்கிலேயே ரூபாயின் அம்சங்களுடன், ஜார்ஜ் IV படத்திற்கு பதிலாக ‘அசோக ஸ்தூபி’ சின்னத்தை நீர்க்குறியாக கொண்டிருந்தன. அதன் பின்னர், தொழில்நுட்ப வளர்ச்சியால், இந்தியக் கலை வடிவங்களைக் கொண்ட படங்கள் ரூபாய் தாள்களில் இடம்பெற்றன. 1980இல் “வாய்மையே வெல்லும்” என்று தேசிய சின்னத்தில் பொறிக்கப்பட்டது. இந்த ரூபாய் தாள்கள் யாவும் ‘அசோக ஸ்தூபி’ வரிசை எனப்பட்டன.[5]

மகாத்மா காந்தி வரிசை

1996 முதல் மகாத்மா காந்தி வரிசை ரூபாய் தாள்கள் வெளியிடப்பட்டன. 2005க்கு பிறகு புதிய மகாத்மா காந்தி வரிசை ரூபாய் தாள்கள் வெளியிடப்பட்டன. இவற்றில் மகாத்மா காந்தி நீர்க்குறி இருக்கும்.[5]

பாதுகாப்பு குறிப்புகள்

  1. ஐம்பது ரூபாய் வரை உள்ள தாள்களில் பாதுகாப்பு நூல் முன்புறம் சாளரம் வடிவில் தெரியும், பின்புறம் மறைந்திருக்கும். புற ஊதாக் கதிரில் பார்க்கும்போது இரு புறத்திலும் இந்த பாதுகாப்பு நூல் மஞ்சள் நிறத்தில் தெரியும். சாதாரண வெளிச்சத்தில் ஒரே நேர்கோடாகத் தெரியும்.
  2. நூறிலிருந்து ஆயிரம் ரூபாய் வரை உள்ள தாள்களில் பாதுகாப்பு நூல் இயந்திரத்தால் கண்டறியக்கூடியது. இந்த நூலின் நிறம் வெவ்வேறு கோணங்களில் நீலத்திலிருந்து பச்சையாக மாறும். புற ஊதாக் கதிரில் பார்க்கும்போது வாசகங்கள் பிரகாசமாகத் தெரியும்.
  3. காந்தி, ரிசர்வ் வங்கி முத்திரை, உறுதி வாசகம், அசோக ஸ்தூபி, ஆளுநர் கையொப்பம், பார்வையற்றோர்க்கான குறி ஆகியவை செறிவூட்டப்பட்ட இன்டளிக்ளோவில் அச்சிடப்பட்டவை.
  4. முன்னும் பின்னும் எண்கள் சரியாக அச்சிடப்பட்டுள்ளதால் எவ்வாறு பார்த்தாலும் ஒன்றுபோல் தெரியும்.[5]

மகாத்மா காந்தி புதிய வரிசை

மகாத்மா காந்தி புதிய வரிசை ரூபாய் தாள்கள், நவம்பர் 8, 2016ல் அறிவிக்கப்பட்டது.[6] நவம்பர் 10, 2016ல் இந்திய ரிசர்வ் வங்கியால் 2000 ரூபாய் மற்றும் 500 ரூபாய் தாள்கள் மக்கள் பயன்பாட்டிற்கு வெளியிடப்பட்டது. இத்தாள்களின் முகப்பில் மகாத்மா காந்தி படமும், மறுபக்கத்தில் தூய்மை இந்தியா இயக்கத்தின் சின்னமும் இடம்பெற்றிருக்கின்றன.[7][8]

ரூபாயின் மதிப்பு

1947க்கு முன்னர் ஒரு டாலரின் மதிப்பு ஒரு ரூபாயாக இருந்தது. 1952ல் ஒரு டாலர் ரூ4.79 என நிர்ணயிக்கப்பட்டது. 1966ல் ரூபாயின் மதிப்பை ரூ7.57 என்ற அளவுக்கு குறைக்கும் அறிவிப்பை இந்திய அரசே வெளியிட்டது. உலக வங்கியின் நிர்ப்பந்தத்துக்கு அடிபணிந்து, அந்த அறிவிப்பை வெளியிட்ட அன்றைய நிதி அமைச்சர் சச்சின் சவுத்ரி, அந்நிய முதலீடுகளுக்காக இந்தியத் தாய் தனது கருவறையைத் திறந்து வைத்துள்ளதாக வெட்கக் கேடான முறையில் குறிப்பிட்டதானது நாடு தழுவிய கண்டனத்தை ஏற்படுத்தியது.[9]1975ம் ஆண்டில் அமெரிக்க டாலர் ஜப்பானிய யென் ஜெர்மன் மார்க் ஆகிய மூன்று நாணயங்களின் பரிவர்த்தனை மதிப்புடன் இந்திய ரூபாய்க்கு இணைப்பு ஏற்படுத்தப்பட்டது. [10]1993ல் தாராளமயக் கொள்கையின் அடியொற்றி பரிவர்த்தனை மதிப்பினை பணச்சந்தை தீர்மானிக்கும் என்று அறிவிக்கப்பட்டது. [11]அதே நேரத்தில் கடுமையான ஏற்ற இறக்கங்களை தவிர்க்கும் விதத்தில் தலையிடுவதற்கான உரிமை ரிசர்வ் வங்கிக்கு வழங்கப்பட்டது.1995ல் ஒரு டாலருக்கு நிகரான ரூபாயின் மதிப்பு 32, 42 ஆக இருந்தது. 2000 முதல் 2010 வரை இது சற்றே குறையாக ரூ.45 என்ற நிலையில் இருந்து வந்தது.2013 ஆகஸ்டில் 50 சதவீதம் அளவுக்கு வீழ்ச்சியடைந்து ஒரு டாலர் 68 ரூபாய் என்ற நிலையிலான கடும் சரிவை எதிர்கொண்டது.[12] [13]

மேற்கோள்கள்

  1. "Government of India can print Re 1 note: Law Ministry". பார்த்த நாள் 8 செப்டம்பர் 2014.
  2. ரூ.500, ரூ.2000 நோட்டுகளின் நிலவரம்: அரசு விளக்கம்தி இந்து தமிழ் 09 நவம்பர் 2016
  3. "டங்கா என்கிற வார்த்தையின் பொருள்". பார்த்த நாள் மார்ச்சு 17, 2013.
  4. "இந்திய ரூபாயின் விவரங்கள்". பார்த்த நாள் மார்ச்சு 17, 2013.
  5. "ரூபாய் தாள்களின் அம்சங்கள்". தி இந்து (23 அக்டோபர் 2013). பார்த்த நாள் 24 அக்டோபர் 2013.
  6. "ஆர்.பி.ஐ. செய்திக் குறிப்பு". இந்திய ரிசர்வ் வங்கி (8 நவம்பர் 2016). பார்த்த நாள் 10 நவம்பர் 2016.
  7. "500, 1000 ரூபாய் தாள்கள் செல்லாது". இந்துஸ்தான் டைம்ஸ் (9 நவம்பர் 2016). பார்த்த நாள் 10 நவம்பர் 2016.
  8. "புதிய 500, 2000 ரூபாய் தாள்கள்". தி எக்கணாமிக் டைம்ஸ் (9 நவம்பர் 2016). பார்த்த நாள் 10 நவம்பர் 2016.
  9. "Integrated approach to economic issues". The Hindu (Sep 13, 2003). பார்த்த நாள் 14 அக்டோபர் 2013.
  10. "The Implications of Renminbi Revaluation On India's Trade - A Study". RBI (01 Apr 2011). பார்த்த நாள் 14 அக்டோபர் 2013.
  11. "Devaluation of the Rupee: Tale of Two Years, 1966 and 1991" (PDF). Centre for Civil Society. பார்த்த நாள் 14 அக்டோபர் 2013.
  12. "Rupee's journey since Independence: Down by 65 times against dollar". Economic Times (Aug 24, 2013). பார்த்த நாள் 14 அக்டோபர் 2013.
  13. "ரூபாய் மதிப்பு வீழ்ச்சி ஏன்? எதனால்? எப்படி?". தீக்கதிர். பார்த்த நாள் 14 அக்டோபர் 2013.
This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.