டாலர்

டாலர் அல்லது டொலர் (dollar, பொதுவாக "$" ஆல் குறிக்கப்படும்) என்பது ஐக்கிய அமெரிக்கா, ஆஸ்திரேலியா, நியூசிலாந்து, கனடா, கிழக்குக் கரிபியன் பகுதிகள், ஹொங்கொங், தாய்வான், சிங்கப்பூர், புருணை, கிழக்குத் திமோர், எக்குவடோர், சூரினாம், எல் சல்வடோர், பனாமா, மற்றும் பெலிசு ஆகிய நாடுகளில் நாணய அலகாகப் பயன்படுத்தப்படுகிறது.

வரலாறு

சொற்பிறப்பு

தற்போதைய செக் குடியரசின் ‘ஜோசிம்ஸ்தல்’ என்ற நகரத்தில் 16ம் நூற்றாண்டில் வெள்ளிச் சுரங்கம் தோண்டப்பட்டது[1]. இந்நகரம் அப்போது செருமனியின் வசம் இருந்தது. இங்கு தோண்டப்பட்ட வெள்ளியில் இருந்து வெள்ளி நாணயம் வார்க்கப்பட்டது. இதற்கு ஜோக்கிம்ஸ்தாலர் என்று பெயரிடப்பட்டது. செருமனிய மொழியில் ‘தால்’ (thal) என்பதற்குப் "பள்ளத்தாக்கு" என்று பொருள். ஜோக்கிம்ஸ்தாலர் "தாலெர்" எனச் சுருக்கமாக அழைக்கப்பட்டது.

இப்பெயர் பின்னர் வேறு மொழிகளுக்கும் பரவியது. தானிய மொழி, சுவீடிய மொழி, நோர்வேஜிய மொழிகளில் ரிக்ஸ்டாலெர் என்றும், எத்தியோப்பிய மொழியில் டாலரி என்றும், இத்தாலிய மொழியில் டாலெரோ என்றும், பின்னர் ஆங்கில மொழியில் டாலர் என்றும் வழங்கப்பட்டது.[1].


அடிக்குறிப்புகள்

  1. National Geographic. June 2002. p. 1. Ask Us.

வெளி இணைப்புகள்

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.