தூய இந்தியா இயக்கம்
தூய இந்தியா இயக்கம் (Clean India Mission, அலுவல் முறையாக சுவச்ச பாரத் அபியான், Swachh Bharat அல்லது Swachh Bharat Abhiyan) நாட்டின் 4041 நகரங்களில் உள்ள சாலைகள், கட்டமைப்புக்களை தூயப்படுத்துவதற்காக இந்திய அரசு துவக்கியுள்ள இயக்கமாகும்.[1][2][3]
நாள் | அக்டோபர் 2, 2014 |
---|---|
அமைவிடம் | இந்தியா |
ஏற்பாடு செய்தோர் | நரேந்திர மோடி இந்திய அரசு |
பங்கேற்றோர் | அனில் அம்பானி சச்சின் டெண்டுல்கர் சல்மான் கான் பிரியங்கா சோப்ரா ராம்தேவ் கமல்ஹாசன் மிருதுளா சின்கா சசி தரூர் தாரக் மேத்தாவின் தலைகீழ் மூக்குக்கண்ணாடி தொலைக்காட்சித் தொடர் குழுவினர் |
இந்த இயக்கத்தை அக்டோபர் 2, 2014 அன்று புது தில்லியில் ராஜ்காட்டில் இந்தியப் பிரதமர் நரேந்திர மோதி துவக்கி வைத்தார். காந்தி தங்கியிருந்த இல்லத்திற்கு வெளியே சாலையை சுத்தப்படுத்தி திட்டம் தொடங்கி வைக்கப்பட்டது.[4] 3 மில்லியன் அரசுப் பணியாளர்களும் பள்ளி, கல்லூரி மாணவர்களும் பங்கேற்கும் இத்திட்டமே இந்தியாவின் மிகப் பெரும் தூய்மை இயக்கமாகும்.[5][6]
நோக்கம்
2019 அக்டோபர் 2 அன்று மகாத்மா காந்தியின் நூற்றைம்பதாவது பிறந்த நாள் கொண்டாடப்படவுள்ள நிலையில் அந்த நாளுக்குள் இந்தியாவில் திறந்தவெளிக் கழிப்பிடங்கள் இல்லாத நாடாக்குதல், அனைத்து வீடுகளிலும், பள்ளிகளிலும் கழிப்பறை கட்டப்படுவதை உறுதிசெய்தல்.
பின்னணி
இந்திய அரசு 1999 ஏப்ரல் 1இல் எளிய ஊரக துப்புரவு திட்டத்தைக் கட்டமைப்பு மாற்றம் செய்து, சமூகத் தலைமை முழுமைத் துப்புரவு பரப்புரையைத் (Total Sanitation Campaign) (TSC) தொடங்கி வைத்தது. பின்னர் 2012 ஏப்ரல் 1இல் நிர்மல் பாரத் அபியான் ( Nirmal Bharat Abhiyan) (NBA) என மன்மோகன் சிங் அவர்களால் பெயர் மாற்றப்பட்டது.[7][8] நிர்மல் பாரத் அபியான் கட்டமைப்பை மாற்றி, தூய்மை இந்தியா இயக்கம் (Swachh Bharat Abhiyan) என இந்திய அமைச்சரவை 2014 செப்டம்பர் 24 இல் ஒப்புதல் அளித்தது.[9]
தூய்மை இந்தியா இயக்கம் (Swachh Bharat Abhiyan) 2014 அக்டோபர் 2 இல் தொடங்கப்பட்டது. இதன் நோக்கம் திறந்தவெளி மலங்கழிப்பை 2019க்குள் ஒழித்துகட்டலே ஆகும்.[8][10] தூய்மை இந்தியா இயக்கம் ஒரு தேசிய பரப்புரையாகும்.இது 4,041 நகரங்களையும் பேரூர்களையும் உள்ளடக்கும்.[11]
ஊரகப் பகுதி கழிப்பறைகள்
இந்திய அரசு காந்தி அடிகளின் பிறந்த நாளான 2019 அக்டோபர் 2 ஆம் நாளுக்குள் திறந்தவெளி மலங்கழிக்காத இந்தியாவை உருவாக்கும் குறிக்கோளை முன்வைத்துள்ளது. இதற்காக 12 மில்லியன் கழிவறைகளை இந்திய ஊரகப் பகுதிகளில் 1.96 ஆயிரம் கோடி ரூபாயில் கட்டியமைக்க திட்டமிட்டுள்ளது.[12][13] இந்திய முதன்மை அமைச்சர் நரேந்திர மோதி தன் 2014 ஆம் ஆண்டு விடுதலைநாள் உரையில் ஊரகக் கழிவறைகளைப் பற்றிப் பின்வருமாறு குறிப்பிட்டுள்ளார்:
நாம் எப்போதாவது நம் தாய்மாரும் தங்கையரும் திறந்த வெளியில் மலங்கழிப்பதைப் பற்றிக் கவலைபட்டுள்ளோமா. அவர்கள் அதற்காக இரவில் இருட்டு கவியும் வரை காத்திருக்கின்றனரே; அதுவரை அவர்கள் மலங்கழிக்காமல் தவிக்கலாமா. எவ்வளவு கொடுமையாக இதை அவர்கள் உணர்வார்கள். இதனால் எத்தணை நோய்கள் உருவாகுமோ. இவர்களது தன்மதிப்பைக் காக்க கழிவறைகளைக் கட்டும் ஏற்பாடுகளை நம்மால் செய்ய முடியாதா?
பள்ளியின் கழிவறைகலைப் பற்ரி மோதி 2014 ஜம்மு-காஷ்மீர் சட்டமன்ற தேர்தலின்போது தன்பரப்புரையில் பின்வருமாறு பேசியுள்ளார்:
ஒரு மாணவி பூப்படைந்ததும் பள்ளியில் தனிக்கழிவறையின் தேவையை உணர்கிறார். நடுவிலேயே இதற்காக படிப்பை விட்டுவிடுகிறார். நடுவில் பள்ளியை விட்டு நின்றுவிடுவதால், கல்விகற்காதவராகிறார். ஒவ்வொரு பள்ளியிலும் படிக்கும் நமது பெண்மகவுகள் ஆண்களைப் போலவே தரமான கல்வியைக் கட்டாயம் அடைதல் வேண்டும். ஆனால், நாம் 60 ஆண்டுகளாக நம் பள்ளிகளில் பெண்சிறாருக்கான கழிவறைகளை உருவாக்கவில்லை. எனவே நம் பெண்சிறார் நடுவிலேயே பள்ளியை விட்டு நிற்க வேண்டியதாகி விடுகிறது.[14]
—நரேந்திர மோதி
2015 ஆம் ஆண்டளவில், டாட்டா அறிவுரைச் சேவைகள் நிறுவனமும் இணைந்த 14 குழுமங்களும் மகிந்திரா குழுமமும் பன்னாட்டு சுழற்குழுவணியும் 3,185 கழிவறைகளையும் 71 பொதுத்துறை நிறுவனங்கள் 86,781 கழிவறைகளையும் கட்டித்தர இசைந்துள்ளன.[15]
பெரும்பாலான இந்தக் கழிவறைகள் குழிவகையாக, குறிப்பாக இருகுழி வகையாக அமைகின்றன. அவற்றில் கழிவு அகற்றும் நீர்பீய்ச்சும் அமைப்பும் அமைந்திருக்கும்.
நிதி
இத்திட்டத்திற்காக, உலக வங்கியும் நிதியும் தொழில்நுட்ப உதவிகளும் தருகிறது. இந்நிதியும் உதவிகளும் சமூகப் பொறுப்பு முயற்சிகளுக்காக மாநகராட்சிகளுக்கும் மாநில அரசுகளுக்கு அனைத்துக் கல்வி இயக்கம், அரசு நடுநிலைக் கல்வி இயக்கம் ஆகிய திட்டங்களின் கீழும் அமையும்.[13] தூய்மை இந்தியா இயக்கச் செலவு 620 பில்லியன் ரூபாயாக மதிப்பிடப்பட்டுள்ளது.[16] இந்திய அரசு வறுமைக்கோட்டின்கீழ் உள்ள குடும்பத்துக்கு ஒரு கழிவறை கட்ட 15,000 ரூபாய் தருகிறது.[12] தூய்மை இந்தியா நிதிக்காக 2016 ஜனவரி 31 வரை திரண்டுள்ள மொத்தத் தொகை 3.69 பில்லியன் உரூபாய் ஆகும்.[17] 2016 ஆம் ஆண்டுக்கான இந்திய அரசுப் பாதீட்டில் (Budget) இந்த இயக்கத்துக்காக 9,000 கோடி உரூபாய் ஒதுக்கப்பட்டது.[11]
இந்திய அரசும் உலக வங்கியும் 2016 மார்ச்சு 30 இல் 1.5 பில்லியன் ரூபாய்க்கு, இந்தியாவின் தூய்மை இந்தியா இயக்கப் பொதுத் துப்புரவு முயற்சிக்காக, கடன் ஒப்பந்தம் ஒன்றில் கையெழுத்திட்டுள்ளன. உலக வங்கி தொழில்நுட்ப உதவியாக, தேர்ந்தெடுத்த மாநிலங்களுக்கு ஊரக வீடுகள் கழிவறைகளைப் பயன்படுத்தலுக்கு உதவும் சமூகத் தலைமை நடத்தை மாற்றத் திட்டங்களை நடைமுறைப்படுத்த, 25 பில்லியன் டாலர்களைத் தருகிறது.[10]
தூதுவர்கள்

குறிப்பிடத்தக்க பொதுவெளி சார்ந்த பங்கேற்பாளர்கள்
மத்திய அரசு பொதுவெளியில் நன்கறியப்பட குறிப்பிடத்தக்க 11 ஆளுமைகளைப் பங்கேற்பாளராகத் தேர்ந்தெடுத்து இயக்கத்திற்கான பரப்புரை ஆற்ற வேண்டுகோள் விடுத்துள்ளது. இவர்கள்—[18]
- அனில் அம்பானி
- சச்சின் டெண்டுல்கர்
- சல்மான் கான்
- பிரியங்கா சோப்ரா
- ராம்தேவ்
- கமல்ஹாசன்
- மிருதுளா சின்கா
- சசி தரூர்
- சாசியா இல்மி
- விராட் கோலி
- மகேந்திரசிங் தோனி
- தாரக் மேத்தாவின் தலைகீழ் மூக்குக்கண்ணாடி தொலைக்காட்சித் தொடர் குழுவினர்
- பங்கஜ் சிந்துவானி
இந்தி நடிகர் ஆமிர் கான் இந்த இயக்கத்தை வரவேற்றுள்ளார்; இதில் ஈடுபட அழைக்கப்பட்டால் தாம் மகிழ்ச்சியுடன் பங்கேற்பதாகக் கூறியுள்ளார்.[19] இந்திய அரசின் தூய்மை இந்தியா திட்டத்துக்காக தனிப்பட்ட செயலியை உருவாக்கலாம் என்று ஃபேஸ்புக் நிறுவனர் மார்க் சக்கர்பெர்க் உறுதியளித்துள்ளார்.[20]
நகர வளர்ச்சி அமைச்சரான எம். வெங்கைய நாயிடு தென்மாநிலமாகிய ஆந்திரப் பிரதேசத்தில் தூய்மைப் பரப்புரையாக புயல்தாக்கிய விசாகை துறைமுக மாநகரில் விளக்குமாற்றால் பெருக்கினார்.[21][22]
சிறப்பு தூதுவர்கள்
வெங்கைய நாயுடு பல்வேறு துறைகளுக்கான தூதுவர் பட்டியலை 2016 சூன் 1 இல் வெளியிட்டுள்ளார்.[23][24]
- இராஜயோகினி பிரம்மகுமாரி தாதி ஜானகிஜி
- பவான் கல்யாண்[25]
- எசு.பி. பாலசுப்பிரமணியம்
- அமலா (நடிகை))
- கே. கவிதா[25]
- கனுபதி வெங்கட கிரிழ்சுணா ரெட்டி
- சுட்டாலா அழ்சோக் தேஜா
- புல்லேலா கோபிசந்த்
- அம்பி கோனேரு
- கல்லா ஜயதேவ்
- நிதின்
- வி. வி. எசு. இலக்சுமண்
- ஜே. இராமேழ்சுவர் ராவ்
- சிவ்லால் யாதவ்
- பி. வி. ஆர். மோகன் ரெட்டி
- இலக்சுமி மஞ்சு[26]
மோதி அவர்கள் 2014 அக்டோபர் 2 இல், பின்வரும் ஒன்பது பேரை அமர்த்தினார்:
- நகைச்சுவை நடிகர் கபில் சர்மா,
- முன்னாள் இந்தியத் துடுப்பாட்டக் குழு தளபதி (கேப்டன்) சவுரவ் கங்கூலி
- முன்னாள் இந்தியக் காவல் துறை அலுவலர் கிரண் பேடி, தூய்மை இந்தியா இயக்கத்தை முன்கொண்டுசெல்ல
- பத்மநாப ஆச்சார்யா, நாகாலாந்து ஆளுநர்
- சோனால் மன்சிங், செவ்வியல் நடனமங்கை
- ஈநாடு குழு இராமோஜி ராவ்
- இந்தியா டுடே குழுவின் அருண் பூரி
இவர் இயக்க முன்னேற்றத்துக்காக, பின்வரும் பல நிறுவனங்களையும் அறிவித்தார்: இந்தியக் கணக்காயர் பட்டய நிறுவனம், ஈநாடு, இந்தியா டுடே, மும்பை நகரில் பல இலக்கம் மக்களுக்கு உணவளிக்கும் மும்பை தாபாவாலா.
மோதி அவர்கள் உத்தரப் பிரதேசத்துக்காக, 2014 நவம்பர் 8 இல் மேலும் ஒன்பது பேரை அறிவித்தார்.[27][28]
- அகிலேசு யாதவ்
- சுவாமி இராமபத்ராச்சார்யா
- மனோஜ் திவாரி
- முகம்மது கைஃப்
- தேவிபிரசாத் திவேதி
- இராஜூ சிறிவத்சவா
- சுரேஷ் இரெய்னா
- கைலாசு கேர்
இந்த இயக்கத்தில் மூன்று மில்லியனுக்கும் மேற்பட்ட அரசுப் பணியாலர்களும் பள்ளி, கல்லூரி மாணவர்களும் பங்கேற்கின்றனர்.[29][30]
செயல்திறம்

2014 ஏப்ரல் முதல் 2015 ஜனவரி வரை, 3,183,000 கழிவறைகள் கட்டப்பட்டன. அனைத்து மாநிலங்களையும் இத்திட்டத்தின்கீழ் கழிவறைகளைக் கட்டுவதில் கருநாடக மாநிலம் முந்தியது.[13] 2015 ஆகத்து 8 அளவில், 8 மில்லியன் கழிவறைகள் இந்தத் திட்டத்தின்கீழ் கட்டப்பட்டன.[31] 2016 அக்டோபர் 27 அளவில், 56 மவட்டங்கள் இந்தியவில் திறந்தவெளிக் கழிப்பறானவாகின.[12] நடுவண் அரசு 2017 இல் இந்தூரும் அதன் ஊரகப் பகுதிகளும் திறந்தவெளிக் கழிப்பற்றனவாக அறிவித்தது.[32][33]
தூய நகரங்களின் பட்டியல்
இந்திய அரசு 2016 பிப்ரவரி 15 இல் தூய்மைத் தரப் பட்டியலை வெளியிட்டது.[34][35] [36]
- மைசூர்
- சண்டிகார்
- திருச்சிராப்பள்ளி
- புது தில்லி நகராட்சி மன்றம்
- விசாகப்பட்டினம்
- சூரத்
- இராஜ்கோட்டை
- நாகாவோன்
- பிரிம்பிரிசிஞ்சுவாடு
- மும்பைப் பெருநகர்
ஒத்தபிற பரப்புரைகள்
இந்திய அரசின் மனிதவள மேம்பாட்டு அமைச்சர் இசுமிருதி இரானி தூய இந்தியா பள்ளிப் பரப்புரையைப் பள்ளி ஆசிரியர், மாணவருடன் இணைந்து பெருக்கித் தூய்மை இயக்க முன்முயற்சியாகத் தொடங்கி வைத்தார்.[37][38]
விமர்சனங்கள்
இந்தியாவில் உள்ள கிராமங்கள் திறந்தவெளி கழிப்பிடம் இல்லாத நிலையை எட்டியுள்ளது என்று மகாத்மா காந்தியின் 150-ஆவதுஆண்டு விழாவை முன்னிட்டு 2019 அக்டோபர் 2-ஆம் தேதி சபர்மதி ஆற்றங்கரையோரத்தில் நடந்த ‘தூய்மை இந்தியா’ வெற்றிவிழாவில் பிரதமர் நரேந்திர மோடி பேசினார்.[39]ஆனால் , அரசு தேசிய புள்ளியியல் துறை அலுவலகம் நவம்பர் 2019 இல் வெளியிட்ட அறிக்கையின் படி[40][41]
- கிராமங்களில் நான்கில் ஒரு பங்கிற்கும் அதிகமானோருக்கு கழிப்பறை வசதி இல்லை .
- குடிநீர், சுகாதாரம் மற்றும் வீட்டுவசதி நிலை அறிக்கையின்படி, கிராமப்புற குடும்பங்களில் 71.3 சதவிகிதம் வீடுகளில் கழிப்பறை பயன்பாடு இருக்கிறது. 28.7 சதவிகிதம் வீடுகளுக்கு கழிப் பறை வசதி இல்லை. அவர்கள் திறந்த வெளியில்தான் மலம் கழிக்கிறார்கள்.
- ஜார்க்கண்டில் கிட்டத்தட்ட 42 சதவிகித கிராமப்புற குடும்பங்களுக்கு கழிப்பறைகள் இல்லை. தமிழ்நாட்டில் அது 37 சதவிகிதமாகவும், ராஜஸ்தானில் 34 சதவிகிதமாகவும் உள்ளது.
- கழிப்பறையை உபயோகிப்பவர்கள் எண்ணிக்கை முன்பை காட்டிலும் அதிகரித்திருந்தாலும், கட்டி முடிக்காமல் பாதியில் விடப்பட்ட கழிப்பறைகள், தண்ணீர் வசதி இல்லாததால் உபயோகிக்கப்படாமல் உள்ள கழிப்பறைகள் நாட்டில் அதிகம் உள்ளன
வெளி இணைப்புகள்
- "Ministry of Urban Development (MOUD)".
- "PM India Official".
- "Swachh Bharat Gramin".
- "Ministry of Drinking Water & Sanitation".
- "Ministry of External Affairs".
- "Swachh Bharat Website".
- "Nirmal Bharat - Swachh Bharat".
- "Toilet Beneficiary".
- "Swachh Bharat - How to Donate".
- "Swachh Bharat Mission Gramin Dhamtari-Chhattisgarh India Directed by Raju Hhirwani".
மேற்கோள்கள்
- "Swachh Bharat campaign should become mass movement: Narendra Modi". The Economic Times. பார்த்த நாள் 2 October 2014.
- "PM reviews preparations for launch of Mission Swachh Bharat". பார்த்த நாள் 2 October 2014.
- "Swachh Bharat: PM Narendra Modi launches 'Clean India' mission". Zee News. பார்த்த நாள் 2 October 2014.
- ""தூய்மை இந்தியா" திட்டத்தைத் தொடங்கி வைத்தார் நரேந்திர மோடி". வெப்துனியா (2 அக்டோபர் 2014). பார்த்த நாள் 12 அக்டோபர் 2014.
- "Swachh Bharat Abhiyan: PM Narendra Modi to wield broom to give India a new image". The Times of India. http://timesofindia.indiatimes.com/india/Swachh-Bharat-Abhiyan-PM-Narendra-Modi-to-wield-broom-to-give-India-a-new-image/articleshow/44039120.cms. பார்த்த நாள்: 2 October 2014.
- "As it happened: PM Narendra Modi's 'Swachh Bharat Abhiyan'". http://timesofindia.indiatimes.com/india/PM-Narendra-Modis-Swachh-Bharat-Abhiyan/newsliveblog/44058150.cms. பார்த்த நாள்: 2 October 2014.
- "Time to clean up your act", Hindustan Times, http://www.hindustantimes.com/namitabhandare/time-to-clean-up-your-act/article1-1274081.aspx
- "Nirmal Bharat Abhiyan failed to achieve its desired targets: CAG jdjgjfi", Mint, 16 December 2015, http://www.livemint.com/Politics/ghYnnKN03hSqre4cwSrwqN/Nirmal-Bharat-Abhiyan-failed-to-achieve-its-desired-targets.html
- "Restructuring of the Nirmal Bharat Abhiyan into Swachh Bharat Mission". pib.gov.in.
- "India, World Bank sign $1.5 billion loan pact for Swachh Bharat Mission", The Economic Times, 30 March 2016, http://economictimes.com/news/economy/finance/india-world-bank-sign-1-5-billion-loan-pact-for-swachh-bharat-mission/articleshow/51617391.cms
- "Budget 2016: Swachh Bharat Abhiyan gets Rs 9,000 crore", The Economic Times, 29 February 2016, http://economictimes.com/news/politics-and-nation/budget-2016-swachh-bharat-abhiyan-gets-rs-9000-crore/articleshow/51193662.cms
- "MDWS Intensifies Efforts with States to Implement Swachh Bharat Mission", Business Standard, 18 March 2016, http://wap.business-standard.com/article/government-press-release/mdws-intensifies-efforts-with-states-to-implement-swachh-bharat-mission-116031801084_1.html
- "Swachh Bharat Abhiyaan: Government builds 7.1 lakh toilets in January". timesofindia-economictimes.
- "Swachh Bharat Abhiyaan: PM Modi govt builds 7.1 lakh toilets in January". Firstpost.
- "Saffron Agenda for Green Capitalism? - Swarajya". Swarajya.
- "PM Modi's 'Swachh Bharat Abhiyan' set for mega launch Thursday; schools, offices gear up for event". Zee News.
- "Modi government mobilises Rs 370 crore under Swachh Bharat Kosh", The Economic Times, 11 March 2016, http://economictimes.com/news/politics-and-nation/modi-government-mobilises-rs-370-crore-under-swachh-bharat-kosh/articleshow/51359296.cms
- "PM Modi's Swachh Bharat Abhiyan: Anil Ambani dedicates himself to the movement". 2 October 2014. http://economictimes.indiatimes.com/news/politics-and-nation/pm-modis-swachh-bharat-abhiyan-anil-ambani-dedicates-himself-to-the-movement/articleshow/44114141.cms. பார்த்த நாள்: 2 October 2014.
- "Aamir Khan on PM Modi's Swachh Bharat Abhiyan: We Should All Support This". NDTV. http://movies.ndtv.com/bollywood/aamir-khan-on-pm-modis-swachh-bharat-abhiyan-we-should-all-support-this-673933. பார்த்த நாள்: 2 October 2014.
- "'தூய்மை இந்தியா' திட்டத்துக்கு உதவ மோடியிடம் ஃபேஸ்புக் நிறுவனர் உறுதி". தி இந்து தமிழ் (11 அக்டோபர் 2014). பார்த்த நாள் 12 அக்டோபர் 2014.
- "Venkaiah Naidu picked up the broom to clean cyclone-hit port city of Visakhapatnam - indtoday.com - indtoday.com". indtoday.com. மூல முகவரியிலிருந்து 24 October 2014 அன்று பரணிடப்பட்டது.
- "Naidu picked up the broom to clean cyclone-hit port city of Visakhapatnam".
- "18 Telugu icons named ambassadors for Swachh Bharat".
- "18 Telugu People as Swachh Bharat Ambassadors | 9 people each in AP and Telangana as Swachh Bharat Ambassadors" (en-US) (2015-01-05).
- admin. "swachh bharat brand ambassador List". Telangana State Portal - Latest News Updates.
- "Lakshmi Manchu Is Telangana Swachh Bharat's Brand Ambassador" MovieNewz.in,Retrieved 04.09.2015
- "PM India". Prime Minister's Office (8 November 2014). பார்த்த நாள் 27 November 2014.
- "Press Information Bureau". Press Information Bureau, Government of India (8 November 2014). பார்த்த நாள் 27 November 2014.
- "Swachh Bharat Abhiyan: PM Narendra Modi to wield broom to give India a new image". The Times of India. http://timesofindia.indiatimes.com/india/Swachh-Bharat-Abhiyan-PM-Narendra-Modi-to-wield-broom-to-give-India-a-new-image/articleshow/44039120.cms. பார்த்த நாள்: 2 October 2014.
- "Swachh Bharat campaign is beyond politics, PM Narendra Modi says". The Times of India. http://timesofindia.indiatimes.com/india/Swachh-Bharat-campaign-is-beyond-politics-PM-Narendra-Modi-says/articleshow/44092537.cms. பார்த்த நாள்: 2 October 2014.
- "PM Modi fulfils promise of 80 lakh toilets, but not many takers in rural India".
- "Indore city declared open defecation free: Mayor". Times of India. பார்த்த நாள் February 6, 2017.
- "After rural areas, Indore city declared open defecation free". Indian Express. பார்த்த நாள் February 6, 2017.
- "Cleanliness ranking for 73 cities is out. Mysuru cleanest, Modi's Varanasi among dirtiest", India Today, 15 February 2016, http://indiatoday.intoday.in/story/cleanliness-ranking-for-73-cities-is-out-mysuru-cleanest-modis-varanasi-among-dirtiest/1/596317.html
- "Chandigarh Declared Second Cleanest City of India in 2016 Swachh Bharat Survey", Chandigarh Metro, http://chandigarhmetro.com/chandigarh-second-cleanest-city-swachh-bharat-survey-india-2016
- Nagaon topped 8th cleanest city in India, http://www.theassamnews.com/nagaon-ranks-8th-among-500-clean-cities/
- Swachch Bharat Swachch Vidhalaya
- "Swachh Bharat-Swachh Vidyalaya Campaign". pib.gov.in.
- Langa, Mahesh (2 October 2019). "Prime Minister Modi declares country open defecation-free".
- Jebaraj, Priscilla (24 November 2019). "Open defecation-free India: National Statistical Office survey debunks Swachh Bharat claims".
- "Only 71.3% rural households have access to toilets, shows NSSO data". www.downtoearth.org.in.