சாசியா இல்மி

சாசியா இல்மி (Shazia Ilmi) இந்திய சமூக செயற்பாட்டாளர் ஆவார். இவர் முன்னதாக இசுடார் நியூசு தொலைக்காட்சியில் செய்தியாளராகப் பணியாற்றினார். 2011, 2012 ஆண்டுகளில் அண்ணா அசாரே முன்னின்று நடத்திய ஊழலுக்கு எதிரான இந்தியா இயக்கத்தில் செய்தித் தொடர்பாளராக இருந்தார். ஜன் லோக்பால் மசோதா என்ற லோக்பால் மசோதாவை சட்டமாக இயற்ற ஊடக ஒருங்கிணைப்பாளராக பரப்புரை ஆற்றினார். ஆம் ஆத்மி கட்சியின் தேசிய செயற்குழு உறுப்பினராக இருந்த இல்மா மே 2014இல் அக்கட்சியை விட்டு விலகி ஜனவரி 16, 2015 இல் பாரதிய ஜனதா கட்சியில் இணைந்தார்.[1]

சாசியா இல்மி
ஆம் ஆத்மி கட்சியில் இருந்தபோது
தனிநபர் தகவல்
பிறப்பு 1970
தேசியம் இந்தியர்
அரசியல் கட்சி பாரதிய ஜனதா கட்சி (2015-தற்சமயம்)
பிற அரசியல்
சார்புகள்
ஆம் ஆத்மி கட்சி (2012-2014)
வாழ்க்கை துணைவர்(கள்) சஜித் மாலிக்
கல்வி மக்கள் தொடர்பியல்
பணி சமூக செயற்பாட்டாளர், செய்தியாளர்

மேற்கோள்கள்

  1. "Shazia Ilmi joins BJP, not to enter poll fray". The Hindu. பார்த்த நாள் 18 January 2015.
This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.