தாமரை
தாமரை (lotus), ஒரு நீர்வாழ் பல்லாண்டுத் தாவரம். இதன் அறிவியல் பெயர் நெலும்போ நூசிபேரா (Nelumbo nucifera) என்பதாகும். தாமரைப்பூவானது பண்டைய இந்தியா மற்றும் எகிப்து நாடுகளில் புனிதமானதாகப் போற்றப்பட்டதுடன், வழிபாட்டுக்கும் பயன்படுத்தப்பட்டது. தாமரையின், பூக்கள், இதழ்கள் என்பவை அக்காலச் சமயத்துறை மற்றும் கட்டிடக்கலை அலங்காரங்களிலும் காணப்படுகின்றது. பண்டைய இந்தியப் புராணங்களிலும் பழங்கால இந்திய மருந்து வகைகளிலும் தாமரை மிகவும் போற்றப்படும் இடம் பிடித்துள்ளது.
தாமரை | |
---|---|
![]() | |
நெலும்போ நுசிபேரா (Nelumbo nucifera) பூவும் இலைகளும் | |
உயிரியல் வகைப்பாடு | |
திணை: | தாவரம் |
பிரிவு: | பூக்கும் தாவரம் |
வகுப்பு: | மக்னோலியோப்சிடா |
வரிசை: | Proteales |
குடும்பம்: | நெலும்போனேசியே |
பேரினம்: | நெலும்போ |
இனம்: | நெ. நுசிபேரா' |
இருசொற் பெயரீடு | |
நெலும்போ நுசிபேரா Gaertn. | |

சொற்பிறப்பு
தேவநேயப் பாவாணர், தும் - துமர் - தமர் - தமரை - தாமரை என்று இச்சொல் பிறந்ததாகக் கூறுகிறார். தும் என்பது சிவந்தவற்றோடு தொடர்புபட்ட சொல்மூலம். ஆகையால், தாமரை எனும் சொல் செம்முளரியைக் குறிக்கும் என்றும் அது இன்று தன் சிறப்புப் பொருள் இழந்து எந்த நிறத்தாமரைப்பூவையும் குறிக்குமாறு பொதுப் பொருளில் வழங்குகின்றது என்றும் கூறுகிறார்.[1]
தாமரைப்பூக்கள்
தாமரைப்பூக்கள் பல வண்ணங்களில் தடாகங்களில் பூக்கும் மலர்கள் ஆகும். இது ஒரு நீர்த்தாவரம். ஆகையால், இது எப்போதும் நீர்நிலைகள் உள்ள இடங்களிலேயே காணப்படும். வெண்தாமரை ஆயுர்வேதத்தில் அதிகமாகப் பயன்படுத்தப்படுகிறது.[2] அல்லி இரவில் மலர்ந்து காலையில் குவியும் (இதழ்கள் மூடும்). தாமரை காலையில் மலர்ந்து இரவில் குவியும்.
மேற்கோள்கள்
- ஞா. தேவநேயப்பாவாணர், தமிழர் வரலாறு நூல் 1,பக் 50
- பெற மருத்துவ மூலிகைகள் தி இந்து தமிழ்