ஜன கண மன

சன கண மன... இந்திய நாட்டுப்பண் ஆகும். இப்பாடல் வங்காள மொழியில் இரவீந்திரநாத் தாகூர் இயற்றிய கவிதை ஒன்றின் தொடக்க வரிகளாகும். இந்த கீதத்தை முழுவதாக பாடுவதற்கு 52 விநாடிகள் ஆகும்.

জন গণ মন
சன கண மன (மக்கள் பெருங்கூட்டத்தின் மனதில் ஆட்சி செய்பவள் நீ)
தேசியக் கீதம் இந்தியா
இயற்றியவர்இரவீந்திரநாத் தாகூர்
இசைஇரவீந்திரநாத் தாகூர்
சேர்க்கப்பட்டது1950
இசை மாதிரி
சன கண மன (இசைக்கருவியில்)
இந்தியா மற்றும் வங்காள தேச கீதங்களை இயற்றிய இரவீந்திரநாத் தாகூர்
ஜன கண மன
இசை மாதிரி
சன கண மன - ஒலி வடிவில்

பாடல்

சன கண மன அதிநாயக செய கே
பாரத பாக்கிய விதாதா.
பஞ்சாப சிந்து குசராத்த மராட்டா
திராவிட உத்கல வங்கா.
விந்திய இமாச்சல யமுனா கங்கா
உச்சல சலதி தரங்கா.
தவ சுப நாமே சாகே,
தவ சுப ஆசிச மாகே,
காகே தவ செய காதா.
சன கண மங்கள தாயக செயகே
பாரத பாக்கிய விதாதா.
செய கே, செய கே, செய கே,
செய செய செய, செய கே.

தமிழாக்கம்

தமிழக அரசின் அதிகாரப்பூர்வ மொழி பெயர்ப்பான இது அரசு பாடநூல்களில் பயன்படுத்தப்படுகின்றது:

இந்தியத் தாயே! மக்களின் இன்ப துன்பங்களைக் கணிக்கின்ற

நீயே எல்லாருடைய மனத்திலும் ஆட்சி செய்கிறாய்.

நின் திருப்பெயர் பஞ்சாபையும், சிந்துவையும், கூர்ச்சரத்தையும்

மராட்டியத்தையும், திராவிடத்தையும், ஒரிசாவையும்.
வங்காளத்தையும், உள்ளக் கிளர்ச்சி அடையச் செய்கிறது.

நின் திருப்பெயர் விந்திய, இமய மலைத் தொடர்களில்

எதிரொலிக்கிறது; யமுனை, கங்கை ஆறுகளின்
இன்னொலியில் ஒன்றுகிறது; இந்தியக் கடலலைகளால்
வணங்கப்படுகிறது.

அவை நின்னருளை வேண்டுகின்றன; நின் புகழைப் பரப்புகின்றன.

இந்தியாவின் இன்ப துன்பங்களைக் கணிக்கின்ற தாயே. உனக்கு

வெற்றி! வெற்றி! வெற்றி!

வரலாறு

1911-ம் ஆண்டு டிசம்பர் 27-ம் தேதிதான் முதன்முதலாக கல்கத்தா நகரில் இந்திய தேசிய காங்கிரசு மாநாடு நடக்கும்போது இப் பாடல் பாடப்பட்டது.[1] தாகூரின் உறவினரான சரளாதேவி சௌதுராணி இந்தப் பாடலைப் பாடினார்.

1950-ம் ஆண்டு சனவரியில்தான் "சன கன மண' இந்தியாவின் தேசிய கீதமாகவும் "வந்தேமாதரம்' தேசியப் பாடலாகவும் இந்தியாவின் முதல் குடியரசுத் தலைவர் டாக்டர் இராசேந்திர பிரசாத்தால் அறிவிக்கப்பட்டது.[2]

பாடும் முறை

  • தேசிய கீதத்தை ஒருநிமிடத்திற்கு மேல் பாடக்கூடாது.
  • தேசிய கீதம் பாடும்போது ஆடாமல் அசையாமல் தலைநிமிர்ந்து நிற்கவேண்டும்.[3]

மரியாதை

இந்தியாவில் சகல விதமான அரசு நிகழ்ச்சிகளின் இறுதியில் இப்பாடல் பாடப்பெற்று இந்தியர்கள் அனைவரும் எழுந்து நின்று அசையாமல் மரியாதை செலுத்தும் வழக்கம் உள்ளது.[4]

தேசிய கீதம் அறிமுகமான காலத்தில் அனைத்திந்திய வானொலியின் அன்றாட நிகழ்ச்சிகளின் இறுதியில் இப்பாடல் ஒலிபரப்பட்டது. திரையரங்குகளில் திரைப்படத்தின் முடிவில் தேசியக்கொடி திரையிலும், தேசிய கீதம் ஒலியிலும் வந்தன. திரையரங்கில் உள்ள மக்கள் எழுந்து நின்று மரியாதை செய்தனர். தற்காலத்தில் இந்நடைமுறை இல்லை.

வெளி இணைப்புகள்

குறிப்புகளும் மேற்கோள்களும்

  1. "தேசிய கீதத்துக்கு வயது 100!". தினமணி. பார்த்த நாள் 19 திசம்பர் 2013.
  2. "இந்திய தேசிய கீதத்துக்கு வயது 100". தினமணி. பார்த்த நாள் 19 திசம்பர் 2013.
  3. "தேசிய கீதம்". தினமணி. பார்த்த நாள் 19 திசம்பர் 2013.
  4. "ஜன கண மன' பாடலுக்கு நூறு வயது". பி பி சி. பார்த்த நாள் 19 திசம்பர் 2013.
This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.