அமர் சோனர் பங்களா

அமர் சோனர் பங்களா (ஒலிப்பு:ஆமார் ஸோனார் பா₃ங்லா; பொருள்:எனது தங்க வங்கமே) என்பது வங்கதேச தேசிய கீதம் ஆகும். அமர் சோனர் பங்களா எனத் தொடங்கும் பாடலை 1906 ஆம் ஆண்டு வங்கப் புலவர் இரவீந்திரநாத் தாகூர் எழுதினார். 1905 ஆம் ஆண்டு நடந்த வங்கப் பிரிவினைக்குப் பின் இப்பாடல் எழுதப்பட்டது. 1972 ஆம் ஆண்டு வங்கத்தேசம் பாகிசுதானிடம் இருந்து விடுதலை பெற்றது. அப்போது இப்பாடலின் முதல் பத்து வரிகளைத் தமது நாட்டுப்பண்ணாக வங்கத்தேசம் அறிவித்தது. சன கண மன எனத் தொடங்கும் தாகூரின் பாடல் இந்தியாவின் நாட்டுப்பண் என்பது குறிப்பிடத்தக்கது.

அமர் சோனர் பங்களா
আমার সোনার বাংলা
இரவீந்திரநாத் தாகூர், அமர் சோனர் பங்களா பாடலை இயற்றி இசையமைத்தவர்
நாட்டுப்பண் வங்காளதேசம்
இயற்றியவர்இரவீந்திரநாத் தாகூர், 1906
இசைஇரவீந்திரநாத் தாகூர், 1906
சேர்க்கப்பட்டது1972
இசை மாதிரி
அமர் சோனர் பங்களா (வாத்தியம்)

வரிகள்

வங்க மொழியில் தமிழ் ஒலிபெயர்ப்பு தமிழ் மொழிபெயர்ப்பு[1]

আমার সোনার বাংলা

আমার সোনার বাংলা,
আমি তোমায় ভালোবাসি।

চিরদিন তোমার আকাশ,
তোমার বাতাস
আমার প্রাণে বাজায় বাঁশি।

ও মা,
ফাগুনে তোর আমের বনে
ঘ্রাণে পাগল করে
মরি হায়, হায় রে
ও মা,
অঘ্রানে তোর ভরা ক্ষেতে,
আমি কী দেখেছি মধুর হাসি।।

কী শোভা, কী ছায়া গো,
কী স্নেহ, কী মায়া গো,
কী আঁচল বিছায়েছ
বটের মূলে,
নদীর কূলে কূলে।

মা, তোর মুখের বাণী
আমার কানে লাগে
সুধার মতো-

মা তোর বদন খানি মলিন হলে
আমি নয়ন
ও মা আমি নয়ন জলে ভাসি
সোনার বাংলা,
আমি তোমায় ভালবাসি।

அமர் சோனார் பாங்க்ளா

அமர் சோனார் பாங்க்ளா
அமி தொமாய் பாலோ பாஷி

சிரோதின் தோமர் ஆகாஷ்,
தோமார் பாதாஷ்,
அமார் ப்ரானே பாஜாய் பாஷி.

ஓ.. மா,
ஃபகுனே தோ ரமிர் போனே
க்ரானே பகொல் காரே,
மோரி ஹாய்..., ஹாரி
ஓ.. மா,
ஓக்ரானே தோர் போரா கேதே
அமி கி தேக்கேச்சி மோதுர் ஹாசி.

கி ஷோபா கி ச்சாயா கோ,
கி ஸ்நேஹோ, கி மாயா கோ,
கி ஆச்சோல், பிச்சாயாச்சோ
பாதேர் மூலே,
நோதிர் கூலே கூலே.

மா, தோர் முகேர் பானி
அமார் கானே லாகே
சுதர் மோதோ-

மாதோர் போதோன் கானி மோலின் ஹோலே
அமி நோயோஅன்
ஓ மா அமி நொயோன் ஜோலே பாசி
சோனார் பாங்க்ளா,
அமி தோமாய்.. பாலோ பாஷி!

என் பொன்னான வங்காளமே

என் பொன்னான வங்காளமே,
உன்னை நேசிக்கிறேன்.

நினது வானமும் நினது காற்றும், (கலந்து)
எமது இதயத்தில் இசைத்த வண்ணம் உள்ளது,
இனிய குழலோசையாய்.

ஓ வசந்தத்தின் தாயே
மாமரங்களின் வாசம்
ஆனந்தத்தில் திளைக்க வைக்கிறது.
ஆகா! என்ன ஒரு பேரானந்தம்!
ஓ வசந்தத்தின் தாயே
முற்றிய நெல் வயல்களின் வாசம்
முற்றுமாய் எங்கும் பரவிக் கிடக்கிறது.

என்ன அழகு, என்ன குளுமை,
என்ன அன்பு, என்ன கனிவு!
என்ன ஒரு அமைதியை நீ பரவ விட்டுள்ளாய்!
ஆலமரங்களின் காலடிகளில்
ஒவ்வொரு ஆற்றின் கரைகளிலும்

ஓ என் தாயே, நின் திருவாய்ச் சொற்கள்
என் செவிகளுக்கு அமுதம் போன்றது.
ஆகா என்ன ஒரு பேரானந்தம்!

ஓ தாயே, வருத்தம்
உன் முகத்தில் பரவுமாயின்
என் விழிகள் கண்ணீரால் நிரம்பி விடும்!
என் பொன்னான வங்காளமே,
உன்னை நான் நேசிக்கிறேன்.

மேற்கோள்கள்

  1. பாஸ்கரன் கிருஷ்ணமூர்த்தி (2016 -சூன் 22). "நாட்டுக்கொரு பாட்டு- 11: அண்டை நாட்டின் அழகான கீதம்!". தி இந்து (தமிழ்). பார்த்த நாள் 22 சூன் 2016.
This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.