நேபாள நாட்டுப்பண்

நேபாள நாட்டுப்பண் ("Sayaun Thunga Phool Ka" நேபாள மொழி: सयौं थुँगा फूलका "நூற்றுக்கணக்கான பூக்களால் தொடுக்கப்பட்டது") என்பது நேபாள நாட்டுப்பண்ணாகும். இப்பாடல் நேபாள தேசிய திட்டக் குழுவின் தலைமையகத்தில் உள்ள சிங்க தர்பார் என்னும் அரங்கத்தில் இடைக்கால பாராளுமன்ற அவைத்தலைவரான சுபாஷ் சந்திர நிம்வாங் என்பவரால் நேபாளத்தின் நாட்டுப்பண்ணாக அதிகாரப்பூர்வமாக 2007 ஆகத்து 3, அன்று அறிவிக்கப்பட்டது.[1][2][3] இதற்கு முந்தைய நாட்டுப்பண்ணான, ராஷ்ட்ரிய காணம் என்னும் பாடல் 1962 இல் இருந்து நாட்டுப்பண்ணாக இருந்துவந்தது.

सयौं थुँगा फूलका
ஆங்கிலம்:We are Hundreds of Flowers
நூற்றுக்கணக்கான பூக்களால் தொடுக்கப்பட்டது
Sayaun Thunga Phool Ka
National நேபாளம்
இயற்றியவர்பிரதீப் குமார் ராய்
பையாகுல் மய்லா
இசைஅம்பீர் குருங்
சேர்க்கப்பட்டது3 ஆகத்து 2007

நேபாள நாட்டுப்பண் வரிகள் கவிஞர் பையாகுல் மய்லா என்னும் பிரதீப் குமார் ராய் என்பவரால் எழுதப்பட்டது. இந்த பாடலுக்கு அம்பீர் குருங் என்பவரால் இசையமைக்கப்பட்டது. இந்த நாட்டுப்பண் எளிமையான சொற்களால் நேபாள இறையாண்மை, ஒற்றுமை, அஞ்சாமை, பெருமை, அழகு, முன்னேற்றம், அமைதி, கலாச்சாரம், உயிரியல் பண்மை போன்றவற்றை புகழ்ந்து எழுதப்பட்டுள்ளது.

வரலாறு

மே 19, 2006, அன்று நேபாள அரச பிரதிநிதிகள் அவை (பிரதிநிதி சபா) பழைய நாட்டுப்பண்ணை தாற்காலிகமாக நீக்கியது. 2006 நவம்பர் 30 ஆம் நாள் நாட்டுப்பண் தேர்வு பணி குழு (NASTT) கவிஞர் பையாகுல் மைலா (இயற் பெயர்: பிரதீப் குமார் ராய் ) என்பவரின் பாடலை நேபாளத்தின் புதிய நாட்டுப்பண்ணாக அதிகாரப்பூர்வமாக ஒப்புதல் அளிக்கப்பட்டது. இந்த புதிய நாட்டுப்பண் நாடு முழுவதும் இருந்து தேர்வுக்கு வந்த 1272 பாடல்களில் இருந்து தேர்வு செய்யப்பட்டது.[4]

2007 ஆகத்து 3 அன்று, சாயாயும் துங்கா ஃபூல் கா அதிகாரப்பூர்வமாக நேபாள பிரதிநிதிகள் அவையில் இப்பாடலை நேபாள நாட்டின் நாட்டுப்பண் என அறிவித்தது.

வரிகள்

நேபாளி வரிகள்
सयौं थुँगा फूलका हामी, एउटै माला नेपाली
सार्वभौम भै फैलिएका, मेची-महाकाली।
प्रकृतिका कोटी-कोटी सम्पदाको आंचल
वीरहरूका रगतले, स्वतन्त्र र अटल।
ज्ञानभूमि, शान्तिभूमि तराई, पहाड, हिमाल
अखण्ड यो प्यारो हाम्रो मातृभूमि नेपाल।
बहुल जाति, भाषा, धर्म, संस्कृति छन् विशाल
अग्रगामी राष्ट्र हाम्रो, जय जय नेपाल।
சாய துங்க பூ கஹாமி யூட்டை மாலா நேபாளி
சர்வ பவும்பை ஃபைலி லேகா மேச்சி மஹாகாளி
ப்ரக்ரிதி கா கோடி கோடி சம்ப தாகோ ஆசலா,
பீர்ஹ ரூகா ராகதா லே ஸ்வதந்த்ர ரா ஆடலா
ஞானபூமி ஷாந்திபூமி தாராய் பாஹாட் ஹீமலா
அகண்ட யோ ப்யாரோ ஹம்ரோ மாத்ரிபூமி நேபாளா
பஹூல் ஜாதி, பாஷா, தர்மா, சஸ்க்ரிதி சான்பி பிஷாலா
ஆக்ரகாமி ராஷ்ட்ர ஹம்ரோ ஜெய ஜெய நேபாளா.
sʌjʌũ tʰũɡa pʰulka ɦami, euʈʌi mala nepali
saɾvʌbʱʌum bʱʌi pʰʌilieka, metsi-mʌɦakali
pɾʌkr̥itika koʈi-koʈi sʌmpʌdako ãtsʌlʌ,
viɾɦʌɾuka ɾʌɡʌtʌle svʌtʌntɾʌ ɾʌ ʌʈʌlʌ
dzɲanʌbʱumi, ʃantibʱumi tʌɾai, pʌɦaɖ, ɦimalʌ
ʌkʰʌɳɖʌ jo pjaɾo ɦamɾo matr̥ibʱumi nepalʌ
bʌɦul dzati, bʱaʃa, dʱʌɾmʌ, sãskɾiti tsʰʌn viʃalʌ
ʌɡɾʌɡami ɾaʃʈɾʌ ɦamɾo, dzʌjʌ dzʌjʌ nepalʌ
தமிழ் மொழிபெயர்ப்பு
பல நூறு பூக்களால், தொடுக்கப்பட்ட ஒரே மாலை நேபாளம்
மேச்சி முதல் மஹாகாளி வரை வியாபித்து நிற்கும் இறையாண்மை நேபாளம்.
முடிவில்லாத இயற்கையின் வளமை
ஆற்றல் மறவர்களின் குருதி போர்த்திய, சுதந்திரமான அசைந்து கொடுக்காத தேசம்;
அறிவு நிலம், அமைதி நிலம், சமவெளி, குன்றுகள் நெடிய மலைகள் கொண்ட நிலம்
அகண்ட, பிரிக்கப்பட முடியாத, நேசத்துக்குரிய அன்னை நிலம் நேபாளம்.
பல இனங்கள், மொழிகள், மதங்கள், பண்பாடுகளின் ஊடே
நம்பிக்கைகளுக்கு மேலாய், முன்னேறும் தேசம் - எல்லாரும் போற்றும் எங்கள் நேபாளம்!

மேற்கோள்கள்

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.