பட்டாணி

பட்டாணி என்பது பொதுவாக உருளை வடிவத்தில் இருக்கும் பருப்பு வகை ஆகும். பைசம் சடய்வம்(ஆங்கிலம்:Pisum sativum ) என்று அறியப்படும் இந்த விதைகள் அவரை போன்ற தோற்றத்தில் இருக்கும். பூக்களின் அண்டத்தில் இருந்து இவை உருவாகுவதால் இவற்றை தாவரவியலில் பழங்களாகவே கருதுகின்றனர்.

Pea
அவரையின் உள் பட்டாணிகள்
பட்டாணி செடி: பைசம் சடய்வம்
உயிரியல் வகைப்பாடு
திணை: தாவரம்
தரப்படுத்தப்படாத: பூக்கும் தாவரம்
தரப்படுத்தப்படாத: இருவித்திலைத் தாவரம்
தரப்படுத்தப்படாத: ரோசிதுகள்
வரிசை: Fabales
குடும்பம்: பபேசியே
சிற்றினம்: Vicieae
பேரினம்: Pisum
இனம்: P. sativum
இருசொற் பெயரீடு
பைசம் சடய்வம்
L.
உறையவைக்கப்பட்ட பட்டாணி
சாதமுடன் சமைக்கப்பட்ட பட்டாணி
Pisum sativum

ஆனால் சமையல் கலையில் இவைகள் காய்களாகவே பயன் படுகிறது. பச்சை நிறத்தில் இருக்கும் இவை பொதுவாகவே பச்சை பட்டாணி என்றே அழைக்கப் படுகிறது. காய்ந்த பின் இவை வெளிர் பச்சை நிறத்திலும், சில இடங்களில் வெளிர் மஞ்சள் நிறத்திலும் இருக்கும். பல நாடுகளில் இவை உறைய வைக்கப்பட்ட நிலையிலும் விற்கப்படுகிறது.

உலகில் பல நாடுகளில் பயிரிடப்படும் இவை ஓராண்டு தாவரமாகும். குளிர்கால பயிரான இவை பணிக்கலாம் தொடங்கி வெயில் காலம் வரை, பயிரிடப்படும் இடத்திற்கேற்ப நடப்படுகிறது. ஒரு பட்டாணி விதை சுமார் ௦.1 முதல் ௦.36 கிராம் வரை இருக்கும்.

சத்துகள்

பட்டாணியில் அதிக அளவில் நார்ச்சத்து, புரதம், வைட்டமின்கள், தாது உப்புகள் நிறைந்து இருக்கின்றன. காய்ந்த நிலையில் இதில் ஒரு கால் பகுதி புரதமும் ஒரு கால் பகுதி சர்கரையும் இருக்கிறது.

அறிவியலில் பட்டாணி

ஆஸ்திரிய நாட்டைச் சேர்ந்த மரபியல் விஞ்ஞானி கிரிகோர் மெண்டல் பல நுணுக்கமான வேறுபாடுகளைக் கொண்ட பட்டாணிச் செடிகளை வளர்த்து, அவற்றின் மரபியல் பண்புகளை ஆராய்ந்தார். இந்த ஆராய்ச்சிகளின் விளைவாக, பாரம்பரிய இயல்புகள் சந்ததியூடாக கடத்தப்படும் செயல்முறையை விளக்க, அவர் இரு முக்கிய விதிகளை முன்மொழிந்தார். அவை பின்னாளில் மெண்டலின் பரம்பரை விதிகள் எனப் பெயரிடப்பட்டு அழைக்கப்பட்டு வருகின்றன.

வெளி இணைப்புக்கள்

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.