மேற்கு வங்காளம்
மேற்கு வங்காளம் (West Bengal) என்பது இந்தியாவின் வடகிழக்குப் பகுதியில் அமைந்துள்ள ஒரு மாநிலமாகும். இது மக்கள்தொகை அடிப்படையில் இந்தியாவின் 4வது பெரிய மாநிலமாகும். இது கிழக்கில் வங்காளதேசத்தையும் மேற்கில் நேபாளம் மற்றும் பூடான் ஆகிய நாடுகளையும் தன் எல்லைகளாகக் கொண்டுள்ளது. இந்தியாவின் 7வது பெரிய நகரமான கொல்கத்தா, இம்மாநிலத்தின் தலைநகராக உள்ளது. வங்காள மொழியே இங்கு பெரும்பான்மையாகப் பேசப்படும் மொழி. சுந்தரவனக் காடுகள் மற்றும் வங்காளப் புலிகள், இரும்பு மற்றும் நிலக்கரி சுரங்கங்களுக்கு பெயர் பெற்ற மாநிலம்.
மேற்கு வங்காளம் | ||||||||
---|---|---|---|---|---|---|---|---|
மாநிலம் | ||||||||
| ||||||||
![]() இந்தியாவில் மேற்கு வங்காளத்தின் அமைவிடம் | ||||||||
நாடு | இந்தியா | |||||||
உருவாக்கம் | 26 சனவரி 1950 | |||||||
தலைநகரம் | கொல்கத்தா | |||||||
முன்னாள் தொகுதி | கொல்கத்தா | |||||||
அரசு | ||||||||
• Body | வங்காள அரசு | |||||||
• ஆளுநர் | கேசரிநாத் திரிபாதி | |||||||
• முதலமைச்சர் | மம்தா பானர்ஜி (AITC) | |||||||
• சட்டமன்றம் | மேற்கு வங்காள சட்டமன்றம் (295 இடங்கள்) | |||||||
• உயர் நீதிமன்றம் | கல்கத்தா உயர் நீதிமன்றம் | |||||||
பரப்பளவு | ||||||||
• மொத்தம் | 88,752 | |||||||
பரப்பளவு தரவரிசை | 14வது | |||||||
மக்கள்தொகை (2011)[1] | ||||||||
• மொத்தம் | 9,13,47,736 | |||||||
• தரவரிசை | 4வது | |||||||
• அடர்த்தி | 1 | |||||||
இனங்கள் | வங்காளியர் | |||||||
GDP (2018–19)[2][3] | ||||||||
• Total | ||||||||
• தனிநபர் வருமானம் | ₹1,08,372 (US$1,528.51) | |||||||
மொழி | ||||||||
• அலுவல்முறை | ||||||||
• கூடுதல் அலுவல்முறை | Nepali in two sub-divisions of Darjeeling[7] | |||||||
நேர வலயம் | IST (ஒசநே+05:30) | |||||||
ஐ.எஸ்.ஓ 3166 குறியீடு | IN-WB | |||||||
வாகனப் பதிவு | WB | |||||||
HDI (2017) | ![]() | |||||||
கல்வியறிவு (2011) | 77.08%[9] | |||||||
பாலின விகிதம் (2011) | 950 ♀/1000 ♂[10] | |||||||
இணையதளம் | அதிகாரப்பூர்வ இணையதளம் | |||||||
^* 294 தேர்வு, 1 நியமனம் |
வரலாறு
1947ஆம் வருடம் அன்றைய வங்காளம், இந்துக்கள் பெரும்பான்மையினராக இருந்த பகுதி மேற்கு வங்காளம் என்றும், இஸ்லாமியரின் பகுதி கிழக்கு வங்காளம் என்றும் பிரிக்கப்பட்டது. இன்றைய வங்கதேசமே அந்த கிழக்கு வங்காளமாகும்.
புவியியல்
88,752 சதுர கிலோ மீட்டர் சதுர கிலோ மீட்டர் பரப்பளவு கொண்ட மேற்கு வங்காள மாநிலத்தின் அண்டைய பகுதிகள் பின்வருவன
- வடமேற்கில் நேபாளம், சிக்கிம்
- வடக்கில் பூட்டான்
- வடகிழக்கில் அசாம்
- கிழக்கில் வங்கதேசம்
- தெற்கில் வங்காள விரிகுடா
- தென்மேற்கில் ஒரிஸா
- மேற்கில் பீகார் மற்றும் ஜார்க்கண்ட்
மேற்கு வங்காள மாநிலம் 20 மாவட்டங்களாக பிரிக்கப்பட்டுள்ளது.
அரசியல்
1948 முதல் 1977 வரை மேற்கு வங்காளத்தை இந்திய தேசிய காங்கிரஸ் தொடர்ச்சியாக இருபத்து ஒன்பது ஆண்டுகள் ஆட்சி செய்தது. 1977ஆம் ஆண்டிலிருந்து 2011 ம் ஆண்டு வரை தொடர்ச்சியாக 34 ஆண்டுகள் மேற்கு வங்காளம் இடது சாரி கட்சிகளால் ஆளப்பட்டு வந்தது. 2011ம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் திரிணாமுல் காங்கிரசு வெற்றி பெற்றதை அடுத்து மம்தா பானர்ஜி முதல்வராக பதவியேற்றார்.
சட்டமன்ற-மக்களவை தொகுதிகள்
மேற்கு வங்காளம் 294 சட்டமன்ற தொகுதிகளும், 42 மக்களவை தொகுதிகளையும் கொண்டது.
மக்கள் வகைப்பாடு
2011 ஆம் ஆண்டு இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பின் படி இம்மாநிலத்தின் மொத்த மக்கள் தொகை 91,276,115 ஆக உள்ளது. அதில் ஆண்கள் 46,809,027 மற்றும் பெண்கள் 44,467,088 ஆகவும் உள்ளனர். பாலின விகிதம் ஆயிரம் ஆண்களுக்கு 950 பெண்கள் வீதம் உள்ளனர். மக்கள் தொகை அடர்த்தி ஒரு சதுர கிலோ மீட்டரில் 1,028 பேர் வீதம் வாழ்கின்றனர். இம்மாநிலத்தின் சராசரி படிப்பறிவு 76.26 % ஆகவும், ஆண்களின் படிப்பறிவு 81.69 % ஆகவும், பெண்களின் படிப்பறிவு 70.54 % ஆகவும் உள்ளது. ஆறு வயதிற்குட்பட்ட குழந்தைகளின் எண்ணிக்கை 10,581,466 ஆக உள்ளது. பத்தாண்டு மக்கள்தொகை வளர்ச்சி விகிதம் 13.84% ஆக உள்ளது. நகர்புற மக்கள் தொகை 38.13% ஆகவும், கிராமப்புற மக்கள் தொகை 31.87% ஆகவும் உள்ளது. [11]
சமயம்
இம்மாநிலத்தில் இந்து சமயத்தவரின் மக்கள்தொகை 64,385,546 (70.54 %) ஆகவும், இசுலாமியர் மக்கள்தொகை 24,654,825 (27.01 %) ஆகவும், கிறித்தவ சமயத்தினரின் மக்கள்தொகை (658,618) (0.72 %) ஆகவும், சீக்கிய சமய மக்கள்தொகை 63,523 (0.07 %) ஆகவும், சமண சமய மக்கள்தொகை 60,141 (0.07 %) ஆகவும், பௌத்த சமய மக்கள் தொகை 282,898 (0.31 %) ஆகவும், பிற சமயத்து மக்கள்தொகை 942,297 (1.03 %) ஆகவும் மற்றும் சமயம் குறிப்பிடாதவர்கள் மக்கள்தொகை 228,267 (0.25 %) ஆகவும் உள்ளது.
கோட்டங்களும் மாவட்டங்களும்

இருபது மாவட்டங்களைக் கொண்ட மேற்கு வங்காள மாநிலத்தின் நிர்வாக வசதிக்காக இராஜதானி கோட்டம், வர்தமான் கோட்டம் மற்றும் ஜல்பைகுரி கோட்டம் என மூன்று கோட்டங்களாக பிரிக்கப்பட்டுள்ளது. மூன்று கோட்டங்களில் 23 மாவட்டங்கள் கொண்டுள்ளது.[12]
இராஜதானி கோட்டம்
இராஜதானி கோட்டத்தில் கொல்கத்தா மாவட்டம், ஹவுரா மாவட்டம், முர்சிதாபாத் மாவட்டம், நதியா மாவட்டம் வடக்கு 24 பர்கனா மாவட்டம், தெற்கு 24 பர்கனா மாவட்டம் மற்றும் ஜார்கிராம் மாவட்டம் என 7 மாவட்டங்களை கொண்டுள்ளது.
வர்தமான் கோட்டம்
வர்தமான் கோட்டத்தில் பாங்குரா மாவட்டம், கிழக்கு மிட்னாபூர் மாவட்டம், மேற்கு மிட்னாபூர் மாவட்டம், பிர்பூம் மாவட்டம், கிழக்கு வர்த்தமான் மாவட்டம், மேற்கு வர்த்தமான் மாவட்டம், ஹூக்லி மாவட்டம் மற்றும் புருலியா மாவட்டம் என 8 மாவட்டங்களை கொண்டுள்ளது.
ஜல்பைகுரி கோட்டம்
ஜல்பைகுரி கோட்டத்தில் ஜல்பாய்குரி மாவட்டம், டார்ஜிலிங் மாவட்டம், அலிப்பூர்துவார் மாவட்டம், கூச் பெகர் மாவட்டம், தெற்கு தினஜ்பூர் மாவட்டம், மால்டா மாவட்டம், உத்தர தினஜ்பூர் மாவட்டம் மற்றும் காளிம்பொங் மாவட்டம் என 8 மாவட்டங்கள் கொண்டுள்ளது.
[13][14][15]
தரவரிசை | மாவட்டம் | மக்கள்தொகை | வளர்ச்சி வீதம் | பாலின வீதம் | கல்வி அறிவு | மக்கள் அடர்த்தி |
---|---|---|---|---|---|---|
2 | வடக்கு 24 பர்கனா | 10,082,852 | 12.86 | 949 | 84.95 | 2463 |
6 | தெற்கு 24 பர்கனா | 8,153,176 | 18.05 | 949 | 78.57 | 819 |
9 | முரிசிதபாத் | 7,102,430 | 21.07 | 957 | 67.53 | 1334 |
14 | மேற்கு மிட்னாபூர் | 5,943,300 | 14.44 | 960 | 79.04 | 636 |
16 | ஹூக்லி | 5,520,389 | 9.49 | 958 | 82.55 | 1753 |
18 | நதியா | 5,168,488 | 12.24 | 947 | 75.58 | 1316 |
20 | கிழக்கு மிட்னாபூர் | 5,094,238 | 15.32 | 936 | 87.66 | 1076 |
23 | ஹவுரா | 4,841,638 | 13.31 | 935 | 83.85 | 3300 |
35 | கொல்கத்தா | 4,486,679 | −1.88 | 899 | 87.14 | 24252 |
58 | மால்டா | 3,997,970 | 21.50 | 939 | 62.71 | 1071 |
66 | ஜல்பைகுரி | 3,869,675 | 13.77 | 954 | 73.79 | 621 |
80 | பங்குரா | 3,596,292 | 12.64 | 954 | 70.95 | 523 |
84 | பிர்பூம் மாவட்டம் | 3,502,387 | 16.15 | 956 | 70.90 | 771 |
124 | வடக்கு தினாஜ்பூர் | 3,000,849 | 22.90 | 936 | 60.13 | 956 |
129 | புருலியா | 2,927,965 | 15.43 | 955 | 65.38 | 468 |
136 | கூச் பிகார் | 2,822,780 | 13.86 | 942 | 75.49 | 833 |
257 | டார்ஜிலிங் | 1,842,034 | 14.47 | 971 | 79.92 | 585 |
295 | தெற்கு தினஜ்பூர் | 1,670,931 | 11.16 | 954 | 73.86 | 753 |
அலிப்பூர்துவார்[13] | ||||||
கிழக்கு வரத்தமான் | ||||||
மேற்கு வர்தமான் | ||||||
காளிம்பொங் | ||||||
ஜார்கிராம் |
பொருளாதாரம்
நிகர மாநில உற்பத்தி (2004–05)[16] | |
ஆண்டு | ரூபாய் |
---|---|
2004–2005 | 190,073 |
2005–2006 | 209,642 |
2006–2007 | 238,625 |
2007–2008 | 272,166 |
2008–2009 | 309,799 |
2009–2010 | 366,318 |
துர்காபூர் மற்றும் ஆசான்சோல் இரும்பு, நிலக்கரி மற்றும் அலுமினிய சுரங்கங்கள் மூலம் எஃகு, இரும்பாலைகள், மின்சார மற்றும் மின்னனு கருவிகள், மின் கம்பிகள், தோல், துணி நெசவு, நகையணிகள், மோட்டார் கார் உதிரிபாகங்கள், தொடருந்து பயனிகள் பெட்டிகள், தொடருந்து சரக்கு பெட்டிகள், தொடருந்து என்ஜின்கள், தேயிலை, சர்க்கரை, வேதியல் மூலப் பொருட்கள், சணல் மற்றும் சணலால் ஆன பொருட்கள் மாநிலத்தின் பொருளாதார வளர்ச்சி ஆதாரமாக உள்ளது. டையமண்ட் துறைமுகம், மாநில பொருளாதரத்திற்கு உறுதுணையாக உள்ளது.
வேளாண்மை
வேளாண்மைத் தொழில் மேற்கு வங்காளத்தின் பொருளாதாரத்தின் முக்கிய ஆதாரம் ஆகும். நெல் முதன்மை வேளாண்மை பயிராகும். அரிசி, உருளைக்கிழங்கு, சணல், கரும்பு, தேயிலை மற்றும் கோதுமை முக்கிய விளைபொருட்கள் ஆகும்.
போக்குவரத்து
தரைவழி போக்குவரத்து
2011-ஆம் ஆண்டு முடிய மேற்கு வங்காளத்தில் மாநில நெடுஞ்சாலைகளின் நீளம் 92,023 km (57,180 mi) கொண்டது.:18 மற்றும் தேசிய நெடுஞ்சாலைகளின் நீளம் 2,578 km (1,602 mi) கொண்டது.[17] மாநில அரசின் பேருந்துகளும், தனியார் பேருந்துகளும் மக்களின் தரை வழி போக்குவரத்திற்கு உதவுகிறது.
தொடருந்து
மேற்கு வங்காளத்தில் தொடருந்து இருப்புப் பாதைகளின் நீளம் 4481 கிலோ மீட்டர் ஆகும். தென்கிழக்கு இரயில்வே, கிழக்கு இரயில்வே மற்றும் கொல்கத்தா மெட்ரோ இயில்வேயின் மண்டலத் தலைமையகங்கள் கொல்கத்தாவில் அமைந்துள்ளது.
வானூர்தி நிலையங்கள்
நேதாஜி சுபாசு சந்திர போசு பன்னாட்டு வானூர்தி நிலையம் மாநிலத்தின் பெரிய வானூர்தி நிலையம் ஆகும்.
நீர் வழி போக்குவரத்து
கிழக்கு இந்தியாவில் உள்ளூர் ஆற்று நீர் வழிப் போக்குவரத்தில் கொல்கத்தா ஆற்றுத் துறைமுகம் சிறப்பிடம் வகிக்கிறது. கொல்கத்தா மற்றும் ஹால்டியா துறைமுகங்கள் ஏற்றுமதி மற்றும் இறக்குமதி பணிகளுக்கு சிறப்பிடமாக உள்ளது. அந்தமான் நிக்கோபர் தீவுகளுக்கு கொல்கத்தாவிலிருந்து பயணிகள் மற்றும் சரக்குக் கப்பல்கள் செல்கிறது.
சுந்தரவனக் காடுகளில் பயணிக்க பெரிய இயந்திரப் படகுகள் உதவுகிறது.
பெயர் மாற்றம்
இம்மாநிலத்தின் பெயரை பஸ்ச்சிம் பங்கா என மாற்ற அம்மாநில அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் முடிவெடுக்கப்பட்டுள்ளது. மத்திய அரசின் ஒப்புதலுக்குப் பின்னர் மேற்கு வங்காளம் பஸ்ச்சிம் பங்கா என அழைக்கப்படுவது அதிகாரபூர்வமாக நடைமுறைக்கு வரும்.[18][19]
புகழ் பெற்ற மனிதர்கள்
- இராசாராம் மோகன் ராய்
- இரவீந்திரநாத் தாகூர்
- பங்கிம் சந்திர சட்டர்ஜி
- சுபாஷ் சந்திர போஸ்
- ஜகதீஷ் சந்திரபோஸ்
- சுவாமி விவேகானந்தர்
- ராமகிருஷ்ணர்
- சாரதா தேவி
- ஈஸ்வர சந்திர வித்யாசாகர்
- சரத்சந்திர சட்டோபாத்யாயா
- சத்யஜித் ராய்
- மதுசூதன சரஸ்வதி
- பக்திவேதாந்த சுவாமி பிரபுபாதா
- பிபின் சந்திர பால்
- சித்தரஞ்சன் தாஸ்
- குதிராம் போஸ்
- சத்தியேந்திர நாத் போசு
- ராஷ் பிஹாரி போஸ்
- தாராசங்கர் பந்தோபாத்தியாய்
- காஜி நஸ்ருல் இஸ்லாம்
- அரவிந்தர்
- அமார்த்ய சென்
- பிரணாப் முகர்ஜி
- மம்தா பானர்ஜி
- சோம்நாத் சாட்டர்ஜி
ஆகியோர் இம்மாநிலத்தைச் சேர்ந்த புகழ் பெற்ற மனிதர்களாவர்.
இதையும் பார்க்கவும்
மேற்கோள்கள்
- "Area, population, decennial growth rate and density for 2001 and 2011 at a glance for West Bengal and the districts: provisional population totals paper 1 of 2011: West Bengal". Registrar General & Census Commissioner, India. மூல முகவரியிலிருந்து 7 January 2012 அன்று பரணிடப்பட்டது. பார்த்த நாள் 26 January 2012.
- "West Bengal Budget Analysis 2018–19". பார்த்த நாள் 1 February 2018.
- "Medium term fiscal policy statement & fiscal policy stratergy statement for 2018–19". Finance Department, Government of West Bengal (January 2018). பார்த்த நாள் 8 June 2018.
- "Fact and Figures". பார்த்த நாள் 30 March 2018.
- "Sub-national HDI - Area Database" (en). Institute for Management Research, Radboud University. பார்த்த நாள் 25 September 2018.
- "Sex ratio, 0–6 age population, literates and literacy rate by sex for 2001 and 2011 at a glance for West Bengal and the districts: provisional population totals paper 1 of 2011: West Bengal". Government of India:Ministry of Home Affairs. மூல முகவரியிலிருந்து 7 January 2012 அன்று பரணிடப்பட்டது. பார்த்த நாள் 29 January 2012.
- "Sex Ratio in West Bengal". மூல முகவரியிலிருந்து 27 February 2014 அன்று பரணிடப்பட்டது.
- http://www.census2011.co.in/census/state/west+bengal.html
- District Profiles of West Bengal
- http://timesofindia.indiatimes.com/city/kolkata/Alipurduar-a-new-district-on-June-25/articleshow/36916065.cms
- "Indian Districts by Population, Growth Rate, Sex Ratio 2011 Census". Government of India. பார்த்த நாள் 3 December 2012.
- "Directory of district, sub division, panchayat samiti/ block and gram panchayats in West Bengal, March 2008" (DOC). West Bengal Electronics Industry Development Corporation Limited, Government of West Bengal (March 2008). பார்த்த நாள் 15 February 2012.
- "Net state domestic product at factor cost—state-wise (at current prices)". Handbook of statistics on Indian economy. Reserve Bank of India (15 September 2011). பார்த்த நாள் 7 February 2012.
- "Statewise Length of national highways in India". National Highways. Department of Road Transport and Highways; Ministry of Shipping, Road Transport and Highways; Government of India. பார்த்த நாள் 9 February 2012.
- http://www.indianexpress.com/news/west-bengal-to-be-renamed-paschimbanga/834327/
- http://thatstamil.oneindia.in/news/2011/08/19/west-bengal-is-now-paschim-banga-aid0091.html