டார்ஜிலிங் மாவட்டம்
டார்ஜிலிங் மாவட்டம் மேற்கு வங்காளத்தின் வடமேற்குப் பகுதியில் அமைந்துள்ளது. இமய மலையின் அடிவாரத்தை ஒட்டியது. இதன் தலைமையகம் டார்ஜிலிங் நகரத்தில் உள்ளது. (டார்ஜே - இடி, லிங் - நிலம்). டார்ஜிலிங் மலைப் பிரதேசத்தில் தேயிலை விளைச்சல் அதிகம். சுற்றுலாத்துறையின் மூலம் கணிசமான அளவில் வருமானம் கிடைக்கிறது. மேற்கு வங்காளத்தின் 23 மாவட்டங்களில் ஒன்றாகும். இம்மாவட்டத்தில் இந்திய கூர்க்கா சமூகத்தினர் அதிகம் வாழ்கின்றனர்.

மேற்கு வங்காளத்தின் வடமேற்கில் அமைந்த டார்ஜிலிங் மாவட்டம் எண் 1
டார்ஜிலிங் மாவட்டம் மாவட்டம் দার্জিলিং জেলা दार्जीलिङ जिल्ला | |
---|---|
![]() டார்ஜிலிங் மாவட்டம்மாவட்டத்தின் இடஅமைவு மேற்கு வங்காளம் | |
மாநிலம் | மேற்கு வங்காளம், இந்தியா |
நிர்வாக பிரிவுகள் | ஜல்பைகுரி கோட்டம் |
தலைமையகம் | டார்ஜிலிங் |
பரப்பு | 3,149 km2 (1,216 sq mi) |
மக்கட்தொகை | 1,842,034 (2011) |
மக்கள்தொகை அடர்த்தி | 585/km2 (1,520/sq mi) |
படிப்பறிவு | 79.92% |
பாலின விகிதம் | 971 |
மக்களவைத்தொகுதிகள் | டார்ஜிலிங் |
சட்டமன்ற உறுப்பினர் எண்ணிக்கை | டார்ஜிலிங், சிலிகுரி, குர்சியோங், மதிகரா-நக்சல்பாரி, பான்சிதேவா சட்டமன்றத் தொகுதிகள் |
முதன்மை நெடுஞ்சாலைகள் | தேசிய நெடுஞ்சாலை எண் 31 மற்றும் 55 |
அதிகாரப்பூர்வ இணையத்தளம் |
மேலும் பார்க்கவும்
- கூர்க்காலாந்து
- கூர்க்கா ஜனமுக்தி மோர்ச்சா
சான்றுகள்
This article is issued from
Wikipedia.
The text is licensed under Creative
Commons - Attribution - Sharealike.
Additional terms may apply for the media files.