வங்காள விரிகுடா

வங்காள விரிகுடா (Bay of Bengal) இந்தியப் பெருங்கடலில் அடங்கிய கடலாகும். முக்கோண வடிவில் உள்ள இக்கடலின் கிழக்கில் மலேய தீபகற்பமும், வடக்கில் மேற்கு வங்காளம், மற்றும் வங்கதேசமும், மேற்கில் இந்திய துணைக்கண்டமும் அமைந்துள்ளன. இலங்கை, அந்தமான் நிகோபார் தீவுகள் ஆகியவை இக்கடலில் உள்ள தீவுகளாகும். [1]

வங்காள விரிகுடா
Bay of Bengal
வங்காள விரிகுடாவின் வரைபடம்
அமைவிடம் தெற்காசியா
பெருங்கடலின் வகை விரிகுடா
Primary sources இந்தியப் பெருங்கடல்
Basin countries இந்தியா, வங்காள தேசம், மியான்மார், தாய்லாந்து, இந்தோனீசியா, இலங்கை
ஆகக்கூடிய நீளம் 2,090 கிமீ; c.1,300 மைல்
ஆகக்கூடிய அகலம் 1,610 கிமீ; 1,000 மைல்
பரப்பளவு 2,172,000 கிமீ²
சராசரி ஆழம் 2,600 மிமீ ; 8,500 அடி
ஆகக்கூடிய ஆழம் 4,694 மீ ; 15,400 அடி
வங்கக் கடலில் ஒரு மீன்பிடிப் படகு

கங்கை, பிரம்மபுத்ரா, மகாநதி, கோதாவரி, கிருஷ்ணா, காவிரி, மெக்னா, ஐராவதி ஆகியவை வங்காள விரிகுடாவில் கலக்கும் முக்கிய நதிகளாகும். இக்கடலின் கரையில் அமைந்துள்ள சில முக்கிய நகரங்கள் சென்னை, விசாகப்பட்டிணம், கொல்கத்தா, பாண்டிச்சேரி ஆகியவை.

வங்காள விரிகுடாவில் ஆழிப்பேரலை

திசம்பர் 26, 2004ம் ஆண்டில் காலை 6.29 மணிக்கு இந்தோனேசியாவின், சுமத்ரா தீவில் ஏற்பட்ட நிலநடுக்கம் இந்தியாவில் ஆழிப்பேரலையாக உருவெடுத்து பல்வேறு பகுதிகளை அழித்தது.

தமிழ்நாடு, அந்தமான், நிகோபார் தீவுகள் மற்றும் இலங்கை, இந்தோனேசியா நாடுகளில் லட்சக்கணக்கான உயிர்கள் பலியாயின. உலகின் 11 நாடுகளில் பாதிப்பை உண்டாக்கிய இந்த பயங்கர நில நடுக்கம், ரிக்டர் அளவில் 9 ஆக பதிவானது.

இந்தியாவில் 9571, இந்தோனேசியாவில் 94,100, இலங்கையில் 30,196, தாய்லாந்தில் 5,187, மியான்மரில் 90 பேரும், மாலத்தீவில் 75 பேரும், மலேசியாவில் 68 பேரும், சோமாலியாவில் 176 பேரும், தான்சானியாவில் 10 பேரும், கென்யாவில் ஒருவரும் ஆழிப்பேரலைக்கு பலியாயினர்.[2]

மேற்கோள்கள்

  1. https://www.britannica.com/place/Bay-of-Bengal Bay of Bengal
  2. https://tamil.oneindia.com/news/tamilnadu/tsunami-12-years-on-270477.html
This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.