கோரி முகமது
கோரி முகமது அல்லது முஸாத்தீன் முகமது அல்லது ஷிஹாபுதீன் (Muhammad of Ghor) or (Mu'izz ad-Din Muhammad) or Shihab ad-Din) (1149 - மார்சு 15, 1206), கோரியைத் தலைநகராகக் கொண்டு, கோரி அரசை (Ghurid Empire) தன் உடன் பிறந்தவன் கியாசுதீன் முகமதுடன் 1173 முதல் 1202 வரை கூட்டாகவும், பின் 1202 முதல் 1206 முடிய தனி உரிமையுடனும் ஆட்சி புரிந்தவர்.
முஸாத்தீன் முகமது | |
---|---|
கோரி பேரரசின் சுல்தான் | |
![]() கோரி முகமது | |
ஆட்சி | 1173-1202 (சகோதரன் கியாசுதீன் முகமது உடன்) ; (தனி உரிமையுடன் 1202-1206 ) |
முன்னிருந்தவர் | கியாசுதீன் முகமது |
பின்வந்தவர் | கோரி: கியாசுதீன் முகமது கசினி: தாஜூதீன் இல்திஷ் தில்லி: குத்புதீன் ஐபக் வங்காளம்: முகமது பின் பக்தியார் கில்ஜி முல்தான்: நசீருதின் குபாட்சா |
மரபு | கோரி அரசகுலம் |
தந்தை | பஹாலுத்தீன் ஷாம் 1 |
பிறப்பு | 1149 கோரி, தற்கால ஆப்கானிஸ்தான் |
இறப்பு | மார்ச்சு 15, 1206 தாமியக், ஜீலம் மாவட்டம், தற்கால பாகிஸ்தான் |
அடக்கம் | தாமியக், ஜீலம் மாவட்டம், தற்கால பாகிஸ்தான் |
சமயம் | இசுலாம்[1] |
தெற்காசியாவில் இசுலாமிய ஆட்சி அமைய அடித்தளமிட்டவர் கோரி முகமது. தற்கால ஆப்கானிஸ்தான், பாகிஸ்தான், இந்தியா, தஜிகிஸ்தான், துருக்மெனிஸ்தான் நாடுகளைக் கைப்பற்றி ஆட்சி செய்தவர்.
கசினி முகமதுவின் தலைநகரான கஜினியை 1173இல் கைப்பற்றி கசினி அரச குலத்தை அழித்து, வட இந்தியாவை கைப்பற்ற படையெடுத்தார்.[1] 1175இல் முல்தான் பகுதியை ;பஷ்டூன் இன ஹமித் லூடியிடமிருந்து கைப்பற்றி பின் உச் (Uch) பகுதியையும் கைப்பற்றினார். 1186இல் லாகூரைக் கைப்பற்றி கோரி அரசுடன் இணைத்தார்.[1] 1202இல் கோரி அரசின் சுல்தானாக, 1206இல் ஜீலம் அருகே கொலை செய்யப்பட்டு இறக்கும் வரை ஆட்சி புரிந்தார்.[2]
இந்திய படையெடுப்புகள்
- 1176 ல் முகமது கோரி. குஜராத் மீதான படையெடுப்பில், அரசி நாயகி தேவியிடம் தோல்வி அடைந்தார்.
- 1191 முதல் தராயின் போரில் ராணி சம்யுக்தையின் கணவரும், கன்னோசி மன்னர் செயசந்திரனின் மருமகனுமான பிரிதிவிராஜ் சௌகானுக்கு எதிரான போரில் கோரி முகமது தோல்வி அடைந்தார்.
- 1193இல் இரண்டாம் தராயின் போரில் கன்னோசி மன்னன் செயச்சந்திரன் உதவியுடன் பிரதிவிராஜ் சௌகானுடன் நடந்த போரில் கோரி கோரி முகமது வென்றார்.
- 1193-1194இல் சந்தவார் எனும் இடத்தில் நடந்த போரில் முகமது கோரி பிரிதிவிராஜ் சௌகானை கொன்றார்.
மேற்கோள்கள்
- Encyclopedia Iranica, Ghurids, C. Edmund Bosworth, Online Edition 2012,(LINK)
- MUHAMMAD B. SAM Mu'izz AL-DIN, T.W. Haig, Encyclopaedia of Islam, Vol. VII, ed. C.E.Bosworth, E.van Donzel, W.P. Heinrichs and C. Pellat, (Brill, 1993), 410.
- The Iranian World, C.E. Bosworth, The Cambridge History of Iran, Vol. 5, ed. J. A. Boyle, John Andrew Boyle, (Cambridge University Press, 1968), 161-170.
- Rediscovery Of India, The: A New Subcontinent By Ansar Hussain Khan, Ansar Hussain Published by Orient Longman Limited Page 54
- Ghaznavids, C.E. Bosworth, Encyclopedia Iranica
உசாத்துணை
- C. Edmund, Bosworth (2001). "GHURIDS". Encyclopaedia Iranica, Online Edition. அணுகப்பட்டது 5 January 2014.
- C. E. Bosworth (1968). "The Political and Dynastic History of the Iranian World (A.D. 1000–1217)". in Frye, R. N.. The Cambridge History of Iran, Volume 5: The Saljuq and Mongol periods. Cambridge: Cambridge University Press. பக். 1–202. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:0-521-06936-X. http://books.google.com/books?id=16yHq5v3QZAC&lpg=PP1&pg=PA1#v=onepage&q&f=false.