பிரித்தானியாவின் இந்தியப் பேரரசு
பிரித்தானியாவின் இந்தியப் பேரரசு என்பது 1858 முதல் 1947 ஆம் ஆண்டு வரை இந்திய துணைக் கண்டத்தில் நிலவிவந்த பிரித்தானிய ஆட்சியைக் குறிக்கும். அச்சமயம் இந்தியா என பொதுவாக அழைக்கப்பட்டாலும் ஐக்கிய இராச்சியத்தால் [1] நேரடியாக ஆட்சி செய்யப்பட்ட இந்தியாவின் மாகாணங்கள் பிரித்தானிய முடிக்கு கீழ்பட்ட அரசர்களால் ஆட்சி செய்யப்பட்ட முடியாட்சிகள் என்பவற்றைக் கொண்டிருந்தது. 1876 ஆம் ஆண்டுக்குப் பின்னர் இது இந்தியப் பேரரசு என அழைக்கப்பட்டு அப்பெயரிலேயே கடவுச் சீட்டுகளும் வழங்கப்பட்டன.
இந்தியாவில் பிரித்தானிய ஆட்சி | ||||||
முடியாட்சி | ||||||
| ||||||
| ||||||
நாட்டுப்பண் காட் சேவ் தி குயின் | ||||||
![]() பிரித்தானிய இந்தியா அமைவிடம் 1909 ஆம் ஆண்டு இந்தியப் பேரரசு | ||||||
தலைநகரம் | கொல்கத்தா (1858–1912) புது டில்லி (1912–1947) | |||||
மொழி(கள்) | இந்துஸ்தானி, ஆங்கிலம், தமிழ் உட்பட மேலும் | |||||
அரசாங்கம் | முடியாட்சி | |||||
இந்தியாவின் பேரரசர்/பேரரசி (1876–1947) | ||||||
- | 1858–1901 | விக்டோரியா | ||||
- | 1901–1910 | ஏழாம் எட்வர்ட் | ||||
- | 1910–1936 | ஐந்தாம் ஜோர்ஜ் | ||||
- | 1936 | எட்டாம் எட்வர்ட் | ||||
- | 1936–1947 | ஆறாம் ஜார்ஜ் | ||||
இந்திய வைசுராய்² | ||||||
- | 1858–1862 | விஸ்கவுன்ட் கானிங்க் | ||||
- | 1862–1863 | எர்ல் எட்டாவது எல்ஜின் | ||||
- | 1864–1869 | சர் ஜான் லாரென்ஸ் | ||||
- | 1869–1872 | எர்ல் மாயோ | ||||
- | 1872–1876 | நார்த்புரூக் பிரபு | ||||
வரலாறு | ||||||
- | அமைப்பு | ஆகஸ்டு 2 1858 | ||||
- | 14 ஆகஸ்டு 1947 | ஆகஸ்டு 15 1947 | ||||
பரப்பளவு | ||||||
- | 1937 | 49,03,312 km² (18,93,179 sq mi) | ||||
- | 1947 | 42,26,734 km² (16,31,951 sq mi) | ||||
நாணயம் | பிரித்தானிய இந்திய ரூபாய் | |||||
தற்போதைய பகுதிகள் | ![]() ![]() ![]() ![]() ![]() | |||||
¹ Reigned as Empress of India from May 1, 1876, before that as Queen of the United Kingdom. ² Governor-General and Viceroy of India | ||||||
Warning: Value specified for "continent" does not comply |
ஆளும் முறை 1858 ஆண்டு பிரித்தானியக் கிழக்கிந்தியக் கம்பனி ஆட்சி முடிவுக்கு கொண்டுவரப்பட்டு விக்டோரியாவின் ஆட்சியின் போது பிரித்தானிய முடிக்கு மாற்றப்பட்டதோடு தொடங்கியது. (1876 ஆம் ஆண்டு விக்டோரியா தன்னை இந்தியாவின் பேரரசியாக பிரகடனப்படுத்திக் கொண்டார்.) இவ்வாட்சி 1947 ஆம் ஆண்டு இந்தியப் பிரிவினை வரை நீடித்தது. மேலும் இது இந்தியா என்ற பெயரில் உறுப்பு நாடுகளுள் ஒன்றாக 1900, 1920, 1928, 1932 மற்றும் 1936 ஆண்டுகளில் கோடைகால ஒலிம்பிக்ஸிலும் 1945 இல் சான் பிரான்சிஸ்கோவில் ஐக்கிய நாடுகள் சபையின் உறுப்பினராகவும் இணைந்தது.
இந்தியத் துணைக்கண்டத்தை கைப்பற்றுதல்
பக்சார் சண்டை, பிளாசி சண்டை, வாலிகொண்டா போர், கர்நாடகப் போர்கள், ஆங்கிலேய-மராட்டியப் போர்கள், ஆங்கிலேய-சீக்கியப் போர்கள், ஆங்கிலோ - ஆப்கான் போர்கள்[2] மற்றும் ஆங்கிலேய-பர்மியப் போர்கள் மூலம் பிரித்தானியக் கிழக்கிந்திய கம்பெனியும், பிரித்தானிய இந்தியாவின் ஆளுநர்களும் இந்தியத் துணைக்கண்டத்தின் தற்கால ஆப்கானித்தான், பாக்கித்தான், இந்தியா, வங்காளதேசம் இலங்கை மற்றும் பர்மா பகுதிகளை பிரித்தானியப் பேரரசின் காலனி நாடுகளாக அடிமைப்படுத்தினர்.
இந்தியத் துணைக்கண்டத்தின் செழிப்பான 13 மாகாணங்களை பிரித்தானியப் பேரரசால் நியமிக்கப்பட்ட வைஸ்ராயின் நேரடி ஆட்சியிலும், நிலவருவாய் வசூலிக்க இயலாத வளமற்ற, மலைப்பாங்கான பகுதிகளை ஆட்சி செய்ய, துணைப்படைத் திட்டம் மூலம் 562 சுதேச சமஸ்தானங்களின் மன்னர்களிடம் ஒப்படைக்கப்பட்டது. மேலும் அவகாசியிலிக் கொள்கையின் படி, பிரித்தானியாவின் இந்திய அரசு, வாரிசு அற்ற பல சுதேச சமஸ்தானங்களை தனது நேரடிக் கட்டுப்பாட்டில் எடுத்துக் கொண்டது.
முக்கிய மாகாணங்கள்
20 ஆம் நூற்றாண்டின் போது பிரித்தானிய இந்தியா ஒரு ஆளுநர் அல்லது துணைநிலை ஆளுநர் மூலம் நிர்வகிக்கப்படும் எட்டு மாகாணங்களைக் கொண்டிருந்தது. 1907 ஆண்டு கணக்கின்படி மக்கள் தொகை அடிப்படையில் பின்வரும் மாகாணங்களை கொண்டிருந்தது. அவைகள்:
(British) பிரித்தானியாவின் இந்திய மாகாணங்கள் (தற்போதைய பகுதிகள்) |
மொத்த பரப்பளவு சதுர கி.மீ (சதுர மைல்) | 1901 ல் மக்கட்தொகை (மில்லியனில்) | முதன்மை நிர்வாக அதிகாரி |
---|---|---|---|
வடகிழக்கு எல்லைப்புற முகமை (அஸ்ஸாம், திரிபுரா, மேகாலயா, அருணாச்சலப் பிரதேசம், நாகாலாந்து, மிசோரம் மற்றும் மணிப்பூர்) |
130,000 (50,000) |
6 | முதன்மை ஆனையாளர் |
வங்காள மாகாணம் (வங்காள தேசம், மேற்கு வங்காளம், பீகார், ஜார்கண்ட் மற்றும் ஒரிசா) |
390,000 (150,000) |
75 | துணைநிலை ஆளுநர் |
பம்பாய் மாகாணம் (சிந்து, மகாராஷ்டிரா & கர்நாடகாவின் சில பகுதிகள்) |
320,000 (120,000) |
19 | ஆளுநரின் நிர்வாககுழு |
பர்மிய மாகாணம் (பர்மா) |
440,000 (170,000) |
9 | துணைநிலை ஆளுநர் |
மத்திய மாகாணம் (மத்தியபிரதேசம் & சத்தீஸ்கர்) |
270,000 (100,000) |
13 | முதன்மை ஆனையாளர் |
மெட்ராஸ் மாகாணம் (தமிழ்நாடு ,ஆந்திர பிரதேசம், கேரளா மற்றும் கர்நாடகாவின் சில பகுதிகள்) |
370,000 (140,000) |
38 | ஆளுநரின் நிர்வாகக் குழு |
பஞ்சாப் மாகாணம் (பாக்கித்தானிய பஞ்சாப், இந்திய பஞ்சாப், வடமேற்கு எல்லைப்புற மாகாணம், ஹரியானா, இமாச்சலப் பிரதேசம், சண்டிகர் மற்றும் டெல்லி) |
250,000 (97,000) |
20 | துணைநிலை ஆளுநர் |
ஐக்கிய மாகாணம் (உத்தரப்பிரதேசம் & உத்தராகண்ட்) |
280,000 (110,000) |
48 | துணைநிலை ஆளுநர் |
வங்கப் பிரிவினைக்கு பின் (1905–1911) அசாம் மற்றும் கிழக்கு வங்க பகுதிகளை இணைத்து ஒரு துணை ஆளுநரின் ஆட்சியின் கீழ் ஒரு புதிய மாகாணம் உருவாக்கப்பட்டது. 1912ல் கிழக்கு மற்றும் மேற்கு வங்காளப் பகுதிகள் இணைந்து, பீகார், ஜார்கண்ட் மற்றும் ஒரிசா பகுதிகள் கொண்ட வங்காள மாகாணமாக மாறியது.
சிறிய ஆட்சிப்பகுதிகள்
சிறிய ஆட்சிப்பகுதிகள் (தற்போதைய பகுதிகள்) |
மொத்த பரப்பளவு சதுர கி.மீ (சதுர மைல்) | 1901 ல் மக்கட்தொகை (மில்லியனில்) | முதன்மை நிர்வாக அதிகாரி |
---|---|---|---|
அஜ்மீர்-மேவார் (ராஜஸ்தானின் ஒரு பகுதி) |
7,000 (2,700) |
477 | முதன்மை ஆனையாளர் |
அந்தமான் நிகோபார் தீவுகள் (அந்தமான் நிகோபார் தீவுகள்) |
78,000 (30,000) |
25 | முதன்மை ஆனையாளர் |
பலுசிஸ்தான் (பலுசிஸ்தான்) |
120,000 (46,000) |
308 | முதன்மை ஆனையாளர் |
குடகு (குடகு மாவட்டம்) |
4,100 (1,600) |
181 | முதன்மை ஆனையாளர் |
வடமேற்கு எல்லைப்புற மாகாணம் (1901-1955) |
41,000 (16,000) |
2,125 | முதன்மை ஆனையாளர் |
ஆட்சி நிர்வாகம்
இதனையும் காண்க
- பிரித்தானிய கிழக்கிந்திய நிறுவனம்
- இந்தியாவில் கம்பெனி ஆட்சி
- பிரித்தானிய இந்தியாவின் மாகாணங்களும், ஆட்சிப் பகுதிகளும்
- பிரித்தானிய இந்தியாவின் மத்தியச் சட்டமன்றம்
- இந்திய மாகாணங்களின் சபை
- இந்தியத் தலைமை ஆளுநர்கள் மற்றும் வைஸ்ராய்களின் பட்டியல்
- இந்திய மன்னராட்சி அரசுகளின் பட்டியல்
- பர்மாவில் பிரித்தானிய ஆட்சி
- மராத்தியப் பேரரசு
- முகலாயப் பேரரசு
மேற்கோள்கள்
- First the United Kingdom of Great Britain and Ireland then, after 1927, the United Kingdom of Great Britain and Northern Ireland
- A Selection of Historical Maps of Afghanistan