பிளாசி சண்டை

பிளாசி சண்டை (Battle of Plassey) 1757 இல் பிரித்தானிய கிழக்கிந்திய நிறுவனத்துக்கும், வங்காளத்தின் நவாப் சிராச் உத் தவ்லாவிற்கும் இடையே நடைபெற்ற ஒரு சண்டை. இதில் கிழக்கிந்திய நிறுவனம் வெற்றி பெற்று வங்காளத்தைக் கைப்பற்றியது. இவ்வெற்றியே இந்தியாவில் ஆங்கிலேயர் ஆட்சி தோன்றியதன் முதல் படியாகக் கருதப்படுகிறது.

பிளாசி சண்டை
ஏழாண்டுப் போரின் பகுதி

பிளாசி சண்டைக்குப் பின் கிளைவ் மீர் ஜாஃபரை சந்திக்கிறார் (ஓவியர்: பிரான்சிஸ் ஹேமன் ~ 1762)
நாள் 23 ஜூன் 1757
இடம் பலாஷி, வங்காளம்
தெளிவான கிழக்கிந்திய நிறுவன வெற்றி
நிலப்பகுதி
மாற்றங்கள்
வங்காளம் பிரித்தானியக் கிழக்கிந்தியக் கம்பனியால் இணைக்கப்பட்டது
பிரிவினர்
பிரித்தானிய கிழக்கிந்திய நிறுவனம் வங்காள நவாப்
பிரெஞ்சு கிழக்கிந்திய நிறுவனம்
தளபதிகள், தலைவர்கள்
கர்னல் ராபர்ட் கிளைவ் சிராச் உத் தவ்லா

சின்ஃபிரே

பலம்
750 ஐரோப்பிய வீரர்கள்
2,100 இந்திய சிப்பாய்கள்
100 பீரங்கிப்படை வீரர்கள்
8 பீரங்கிகள்
35,000 காலாட்படை வீரர்கள்
18,000 குதிரைப்படை வீரர்கள்
53 பீரங்கிகள்
50 பிரெஞ்சு பீரங்கிப்படை வீரர்கள்
இழப்புகள்
மாண்டவர் - 22
காயமடைந்தவர் - 50[1]
மாண்டவர்களும் காயமடைந்தவர்களும் - 500

பிளாசி சண்டை ஐரோப்பாவில் நடைபெற்ற ஏழாண்டுப் போரின் ஒரு பகுதியாகும். ஆற்காடு நவாப் பிரெஞ்சு கிழக்கிந்திய நிறுவனத்தின் ஆதரவைப் பெற்றிருந்தார். பிரித்தானியக் கோட்டையாக விளங்கிய கல்கத்தாவைத் தாக்கி பல ஆங்கிலேயர்களைக் கொன்றார். இதற்கு பதிலடி கொடுக்கும் வண்ணம் ஆங்கிலேயப் படைகள் வங்காளத்தைத் தாக்கின. பளாஷி (பிளாசி) என்ற இடத்தில் இரு தரப்பின் படைகளுக்கும் இடையே இறுதிகட்ட மோதல் ஏற்பட்டது. ராபர்ட் கிளைவ் தலைமையிலான கம்பனி படைகளைக் காட்டிலும் நவாபின் படைகள் பன்மடங்கு எண்ணிக்கை கொண்டிருந்தன. இதனால் கிளைவ் நவாபின் தளபதி மீர் ஜாஃபருடன் ஒரு சதித்திட்டம் தீட்டினார். இச்சதியின் விளைவாக மீர் ஜாஃபரின் கட்டுப்பாட்டிலிருந்த படைப்பிரிவுகள் சண்டையின் போது கம்பனிப் படைகளைத் தாக்காமல் ஒதுங்கிக் கொண்டன. மீர் ஜாஃபரின் அணிமாற்றத்தால், கிளைவ் எளிதில் வெற்றி பெற்றார்.

இதனையும் காண்க

குறிப்புகள்

  1. Harrington, pp. 81–82

மேற்கோள்கள்

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.