கீழைச் சாளுக்கியர்


கீழைச் சாளுக்கியர் (வேங்கிச் சாளுக்கியர்) என்பவர்கள் தென் இந்தியாவில் ஒரு பகுதி ஆண்ட அரச மரபினர் ஆவர். இவர்களது அரசு இக்காலத்தைய ஆந்திரப் பிரதேசத்தில் அமைந்திருந்தது. இவர்களின் தலைநகரம் வேங்கியாகும். இது தற்காலத்தில் படவேங்கி, சின்ன வேங்கி என்ற பெயரில் மேற்கு கோதாவரி மாவட்டத்தில் எலுருவுக்கு அருகில் உள்ளது. இந்த அரசு கிபி 1130 வரை 500 ஆண்டுகளுக்கு இருந்தது. பின்பு இது சோழப் பேரரசுடன் இணைந்தது. இணைந்தாலும் வேங்கி அரசை கீழைச் சாளுக்கியர்களே சோழர்களின் பாதுகாப்புடன் கிபி 1189 வரை ஆண்டனர். போசளர்களாலும் தேவகிரி யாதவப் பேரரசுகளாலும் தாக்கப்பட்டு இவ்வரசு வீழ்ந்தது. இவர்கள் தங்கள் தலைநகரை வேங்கியிலிருந்து ராஜமகேந்திரவரமுக்கு (ராஜமுந்திரி) மாற்றினார்கள்.

கீழைச் சாளுக்கியர்கள்
తూర్పు చాళుక్యులు,
624–1189
தலைநகரம் எலுருவுக்கு அருகிலுள்ள வேங்கி
ராஜமுந்திரி
மொழி(கள்) தெலுங்கு [1][2][3][4]
சமயம் இந்து
அரசாங்கம் முடியாட்சி
மகாராசா
 -  624-641 குப்ஜ விஷ்ணுவர்தனன்
 - 641-673 முதலாம் செயசிம்கா
 - 673-682 இரண்டாம் விஷ்ணுவர்தனன்
 - 1018-1061 இராஜராஜ நரேந்திரன்
வரலாறு
 - உருவாக்கம் 624
 - குலைவு 1189
Warning: Value specified for "continent" does not comply

கீழைச் சாளுக்கியர்கள் வாதாபி (பாதமி) சாளுக்கியர்களுடன் நெருங்கியவர்கள். ஏழாம் நூற்றாண்டில் இரண்டாம் புலிகேசி கங்க மன்னனைத் தன்னுடன் சேர்த்துக்கொண்டு பல்லவ பேரரசின் மீது படையெடுத்தான். பல்லவ நாட்டை சூறையாடி, முதலாம் மகேந்திரவர்ம பல்லவன் வசமிருந்த வேங்கி நாட்டைக் கைப்பற்றி புலிகேசி தன் தம்பியான விட்டுணுவர்தனை அரசனாக்கினான். இந்த விட்டுணுவர்தனின் மரபினரே கீழைச் சாளுக்கியர் எனப் பெயர் பெற்றனர்.[5] மேலைச் சாளுக்கியர்களுக்கும் சோழர்களுக்கும் இடையே பல போர்கள் வேங்கி நாட்டுக்காக நடந்தன. கீழைச் சாளுக்கியர்களின் 500 ஆண்டு ஆட்சியில் இப்பகுதி ஒன்றுபடுத்தப்பட்டதுடன் தெலுங்கு பண்பாடு, இலக்கியம், கலை போன்றவை சிறப்பிடம் எய்தியது. இவர்கள் ஆட்சி ஆந்திர வரலாற்றின் பொற்காலம் என போற்றப்படுகிறது.

குறிப்புகள்

  1. Cin̲n̲aiyā Kōvintarācan̲ār, தொகுப்பாசிரியர் (2004). சோழர் வரலாறு. An̲n̲am,  Chola (Indic people). பக். 81. https://books.google.co.in/books?id=Vl1uAAAAMAAJ&dq=இவர்களின்+தாய்மொழி+தெலுங்கு+மொழியாகும்+கீழைச்சளுக்கிய&focus=searchwithinvolume&q=இவர்களின்+தாய்மொழி+தெலுங்கு+மொழியாகும்+கீழைச்சளுக்கிய.
  2. முனைவர் தா. சா மாணிக்கம்,, தொகுப்பாசிரியர் (1994). தமிழும் தெலுங்கும். உலகத் தமிழாரய்ச்சி நிறுவனம். பக். 21.
  3. Dr. B.S.L. Hanumantha Rao, தொகுப்பாசிரியர் (1983). Andhrula Charitra . Tripurasundari. பக். 27.
  4. Andrea L. Stanton, தொகுப்பாசிரியர் (2012). Cultural Sociology of the Middle East, Asia, and Africa: An Encyclopedia. பக். 15.
  5. தென்னாட்டுப் போர்களங்கள்,க. அப்பாதுரை.
This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.