கதம்பர் வம்சம்

கடம்பர் வம்சம் (கன்னடம்: ಕದಂಬರು) (345 - 525 கி.பி) கருநாட்டக வட கன்னட மாவட்டத்தின் வனவாசியை தலைமயிடமாக கொண்டு ஆட்சி செய்து வந்த அரச குலமாகும். இவர்கள் கர்நாடகத்தின் பேரரசுகளான சாளுக்கியர், இரட்டைக்கூடர் போன்றவர்களின் படைத் துணையோடு தற்போதைய கோவா, கங்கல் போன்ற பகுதிகளை ஆண்டு வந்தனர். கதம்ப அரசனான காகுசுடவர்மனின் ஆளுகையில் கர்நாடகத்தின் பெரும்பகுதி கதம்பர்களின் ஆட்சியின் கீழ் இருந்தது. கர்நாடகத்தின் பெரும் பகுதியை ஆண்டவர்களில் கதம்பர்கள் மட்டுமே கன்னட மொழியை தாய்மொழியாகக் கொண்டவர்கள். இவர்களுக்கு முன்பு ஆண்ட மன்னர்கள் அனைவரும் வேறு மொழியை தாய்மொழியாகக் கொண்டவர்கள் ஆவர். கதம்பர்களின் ஆளுகைக்கு உட்பட்ட நிலப்பரப்பில் கன்னடம் ஆட்சி மொழியாக இருந்து வந்தது. தமிழ் மொழியிலிருந்து கன்னடம் ஒரு தனி மொழியாக வளர்ந்ததற்கு கதம்பர்கள் முக்கிய காரணமானவர்கள்.கதம்பர் வம்சத்தை முதன்முதலில் 345ஆம் ஆண்டு தோற்றியவர் மயூரசர்மா ஆவார்.

பனவாசியின் கதம்பர்கள்
கதம்பர்கள்
ಬನವಾಸಿ ಕದಂಬರು
Empire
(345 வரை பல்லவர்களுக்கு கீழ்)

345–525
கதம்பர்கள் அமைவிடம்
  500யில் கதம்பர்களின் ஆட்சிக்கு உட்பட்ட பகுதி
தலைநகரம் பனவாசி
அரசாங்கம் முடியாட்சி
ராஜா
 -  345-365 மயூரவர்மா
 - 365-390 கனகவர்மா
 - 390-415 பகிதர்கா
 - 435-455 காகூசுதவர்மா
 - 455-460 சந்திவர்மா
 - 460-480 மிருகேசவர்மா
 - 480-485 சிவமந்தவர்மா
 - 485-519 ரவிவர்மா
 - 519-525 ஹரிவர்மா
வரலாறு
 - உருவாக்கம் 345
 - குலைவு 525
பனவாசியின் கதம்பர்கள் காலக்கோடு
கதம்பர்கள்
மயூரவர்மன் கி. பி. 350 - 375
சந்திரகாந்தன் கி. பி. 375 - 400
பக்ரதவர்மன் கி. பி. 400 - 425
ரகுகாகுத்தவர்மன் கி. பி. 425 - 450
முதலாம் சாந்திவர்மன் கிருஷ்ணன் கி. பி. 450 - 475
மாந்தத்ரிவர்மன் - மிருகேச வர்மன் கி. பி. 475 - 500
தேவவர்மன் - விஷ்ணு - சிவரதன் - பானு - இரவி வர்மன் கி. பி. 500 - 535
குமாரன் - சிம்மன் - அரிவர்மன் கி. பி. 535 - 570
மாந்தாதன் - கிருஷ்ணன் 2, அரசவர்மன் கி. பி. 570 - 585

கதம்பர்கள் சமண மதத்தையும் ஆதரித்து தங்கள் ஆட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் பல்வேறு சமணக்கோவில்களை நிறுவினர். கதம்பர்கள் கட்டிய பல கோவில்கள் மிகச்சிறந்த கட்டிடக்கலை அமைப்பைக் கொண்டவையாகும். வனவாசியில் அமைந்திருக்கும் மதுகேசுவரா ஆலயம் இதற்கு மிகச்சிறந்த உதாரணமாகும்.

கதம்பர்களின் முன்னோர்

கதம்பர்களின் முன்னோர் சங்ககாலத் தமிழகத்தைச் சேர்ந்த கடம்பர்களான இருக்கலாம் எனக் கருதப்படுகிறது.[1]

மேற்கோள்களும் குறிப்புகளும்

  1. Chopra P.N., Ravindran T.K., Subrahmanian N. (2003), History of South India (Ancient, Medieval and Modern), Part 1, Chand publications, New Delhi ISBN 81-219-0153-7
மதுகேசுவரா ஆலயம், பனவாசி
மதுகேசுவரா ஆலயம், பனவாசி
This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.