மேற்கு சத்ரபதிகள்


மேற்கு சத்ரபதிகள் (Western Satraps) (ஆட்சி காலம் கி. மு 35 – கி. பி 405), தற்கால மேற்கு மற்றும் மைய இந்தியாவின் பகுதிகளான சௌராஷ்டிர தீபகற்பம், மாளவம், மகாராட்டிரம், குசராத்து, இராஜஸ்தான், மத்தியப் பிரதேசம் மற்றும் பாகிஸ்தானின் சிந்து பகுதிகளை கி மு 35 முதல் கி. பி 405 வரை ஆண்ட, மத்திய ஆசியாவின் சிதியர்கள் இனத்தைச் சேர்ந்த, இந்தோ-சிதியன் அரசர்களை மேற்கு சத்ரபதிகள் என்பர். இவர்கள் இந்தியத் துணைக்கண்டத்தின் மேற்குப் பகுதிகளை ஆண்டதால் மேற்கு சத்திரபதிகள் என்ற பெயரால் அழைக்கப்படுகின்றனர்.[1] [2]

மேற்கு சத்ரபதிகள்
[[இந்தோ சிதியன் பேரரசு|]]
கிமு 35–கிபி 405 [[குப்தப் பேரரசு|]]
மேற்கு சத்ரபதிகள் அமைவிடம்
மேற்கு சத்திரபதி பேரரசின் எல்லை (35–405).
தலைநகரம் உஜ்ஜைன்
மொழி(கள்) பாலி
சமசுகிருதம்
பிராகிருதம்
சமயம் இந்து சமயம்
பௌத்தம்
அரசாங்கம் முடியாட்சி
இந்தோ-சிதியன்#இந்தோ-சிதியன் ஆட்சியாளர்கள்#மேற்கு சத்ரபதி அரசர்கள்
 -  c. 35 அபிரகா
 - 388–395 மூன்றாம் ருத்திரசிம்மன்
வரலாற்றுக் காலம் பண்டைய இந்தியா
 - உருவாக்கம் கிமு 35
 - குலைவு கிபி 405
தற்போதைய பகுதிகள்  இந்தியா
 பாக்கித்தான்
Warning: Value specified for "continent" does not comply

மேற்கு சத்ரபதிகள் குசாணர்கள் மற்றும் சாதவாகனர்களின் சமகாலத்தவர்கள் ஆவர். சாதவாகனப் பேரரசின் காலத்தில், மேற்கு மற்றும் மத்திய இந்தியாவில் மேற்கு சத்ரபதிகள் குறுநில மன்னர்களாக இருந்தனர். மேற்கு சத்ரபதி அரசர்கள் வெளியிட்ட நாணயங்கள் பிரித்தானிய அருங்காட்சியகத்தில் உள்ளன. [3]

350 ஆண்டுகளில் மேற்கு சத்ரபதிகளில் 27 தன்னாட்சி பெற்ற மேற்கு சத்ரபதி குறுநில மன்னர்கள் மேற்கு இந்தியாவையும், மைய இந்தியாவையும் ஆண்டனர். பாரசீக மொழியில் சத்ரப் எனில் மாகாண ஆளுநர் என்று பொருள்படும்.

நாணயங்கள்

மேற்கு சத்ரபதி அரசர்கள் குஷாணர்கள், சாதவாகனர்கள் போன்று தங்கத்தாலும், வெள்ளியாலும் நாணயங்களை வெளியிட்டனர். [4]

முக்கிய அரசர்கள்

சத்ரபதிகள்

  • யபிரஜெயா
  • ஹோஸ்பிஸ்சஸ்
  • ஹிகாரகா
  • அபிரகா
  • பூமகா(?–119)
  • நாகபனா (119–124)

கர்லா குகை வளாகத்தின் பெரிய சைத்தியத்தை, மேற்கு சத்ரபதி மன்னர் நாகபனா கிபி 120ல் நிறுவினார்.[5][6][7]

Great Chaitya hall at Karla[5]

பத்ரமுக குல அரசர்கள்

  • சாஸ்தனா (c. 78-130), சொமொதிகாவின் மகன்
  • ஜெயதாமன், சாஸ்தனாவின் மகன்
  • முதலாம் உருத்திரதாமன் (c. 130–150), ஜெயதாமனின் மகன்
  • முதலாம் தாமஜதஸ்ரி (170–175)
  • ஜிவதாமன் (175, d. 199)
  • முதலாம் ருத்திரசிம்மன் (175–188, d. 197)
  • ஈஸ்வரதத்தா (188–191)
  • முதலாம் ருத்திரசிம்மன் (மீண்டும்) (191–197)
  • ஜீவதாமன் (மீண்டும்) (197–199)
  • முதலாம் ருத்திரசேனன் (200–222)
  • சம்காதாமன் (222–223)
  • தாமசேனன் (223–232)
  • இரண்டாம் தாமஜாதஸ்ரீ (232–239) உடன்
  • வீரதாமன் (234–238)
  • முதலாம் யசோதாமன் (239)
  • விஜயசேனன் (239–250)
  • மூன்றாம் தாமஜாதசரி (251–255)
  • இரண்டாம் ருத்திரசேனன் (255–277)
  • விஸ்வசிம்மன் (277–282)
  • பத்ருதாமன் (282–295)
  • விஸ்வசேனன் (293–304)

இரண்டாம் ருத்திரசிம்மனின் குடும்பம்:

  • இரண்டாம் ருத்திரசிம்மன், ஜீவதாமனின் மகன் (304–348) உடன்
  • இரண்டாம் யசோதாமன் (317–332)
  • இரண்டாம் ருத்திரதாமன் (332–348)
  • மூன்றாம் ருத்திரசேனன் (348–380)
  • சிம்மசேனன் (380–384(5?)
  • நான்காம் ருத்திரசேனன் (382–388)
  • மூன்றாம் ருத்திரசிம்மன் (388–395)

இதனையும் காண்க

அடிக்குறிப்புகள்

  1. http://www.gloriousindia.com/history/western_kshatrapas.html Western Kshatrapas]
  2. http://empires.findthedata.com/l/137/Western-Satraps-Dynasty Western-Satraps-Dynasty]
  3. [ http://coinindia.com/galleries-kshaharatas.html The Coin Galleries: Western Kshatrapas: Kshaharata Dynasty ]
  4. http://people.bu.edu/ptandon/WK-Legends.pdf How to read the legends on coins of the Western Kshatrapas]
  5. World Heritage Monuments and Related Edifices in India, Volume 1 ʻAlī Jāvīd, Tabassum Javeed, Algora Publishing, 2008 p.42
  6. Southern India: A Guide to Monuments Sites & Museums, by George Michell, Roli Books Private Limited, 1 mai 2013 p.72
  7. "This hall is assigned to the brief period of Kshatrapas rule in the western Deccan during the 1st century." in Guide to Monuments of India 1: Buddhist, Jain, Hindu - by George Michell, Philip H. Davies, Viking - 1989 Page 374
  8. Epigraphia Indica Vol.18 p.326 Inscription No1

மேற்கோள்காள்

  • Rapson, "A Catalogue of Indian coins in the British Museum. Andhras etc."
  • John Rosenfield, "The dynastic art of the Kushans", 1976
  • Claudius Ptolemy, "The geography", Translated and edited by Edward Luther Stevenson, Dover Publications Inc., New York, ISBN 0-486-26896-9

வெளி இணைப்புகள்

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.