தம்பதெனிய அரசு

தம்பதெனிய இராச்சியம் அல்லது தம்பதெனிய இராசதானி (Kingdom of Dambadeniya) என்பது கிபி 1220–1354 காலப்பகுதியில் இலங்கையில் இருந்த ஒரு இராச்சியம்.

தம்பதெனிய இராச்சியம்
இராச்சியம்

1220–1345
தலைநகரம் தம்பதெனிய
யாபஹுவ இராசதானி
பொலன்னறுவை
குருணாகல்
மொழி(கள்) சிங்களம்
சமயம் பௌத்தம்
அரசாங்கம் அரசாட்சி
அரசன்
 -  1220–1224 மூன்றாம் விஜயபாகு
 - 1271–1283 முதலாம் புவனேகபாகு
 - 1283–1302 அரசில்லாக் காலம்
 - 1325/6-1344/5 ஐந்தாம் விஜயபாகு
வரலாறு
 - பொலனறுவையின் வீழ்ச்சி 1220
 - தலைநகர் கம்பளைக்கு மாற்றம் 1345
நாணயம் மாசா
தற்போதைய பகுதிகள் இலங்கை

கலிங்க மாகன் பொலன்னறுவை இராச்சியத்தைக் கைப்பற்றிய பின்னர் மூன்றாம் விஜயபாகு மன்னனால் (1232–1236) தம்பதெனிய இராச்சியம் உருவாக்கப்பட்டது. இம்மன்னன் 'மலயரடவில்' ஒற்றுமையை ஏற்படுத்தி ஆட்சிக்கு வந்தான். கலிங்க மாகனால் அழிவுற்றிருந்த தனது நாட்டை மீள் கட்டியெழுப்ப முயற்சித்தான். முக்கியமாக பௌத்த மதத்தை சீர்திருத்த முயற்சித்தான்.

2 ஆம் பராக்கிரமபாகு (1236–1270)

இவ்வரசன் கலிங்க மாகனுடைய ஆட்சியில் இருந்து இராசரட்டைப் பிரதேசத்தை மீட்டெடுத்ததால் தம்பதெனிய இராச்சியத்தின் தலை சிறந்த மன்னனாகக் கருதப்படுகின்றான்.

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.