அகாமனிசியப் பேரரசு

அகாமனிசியப் பேரரசு அல்லது அக்கீமெனிட் பேரரசு (பழைய பாரசீக மொழி: Haxâmanishiya,[1] ஹகாமனிசியப் பேரரசு, ஆங்கிலம்: Achaemenid Empire அகமனீதுப் பேரரசு, கிமு 550-330), அகன்ற அகன்ற ஈரானின் குறிப்பிடத்தக்க பகுதியை ஆண்ட முதல் பாரசீகப் பேரரசு என அழைக்கப்படுகிறது.[2] இதன் பலம் உயர்நிலையில் இருந்தபோது இது 7.5 மில்லியன் சதுர கிலோமீட்டர் நிலப்பரப்பைத் தன்னுள் அடக்கியிருந்தது. நிலப்பரப்பின் அடிப்படையில் செந்நெறிக்காலப் பேரரசுகளில் மிகப் பெரியது இதுவேயாகும்.

அகாமனிசியப் பேரரசு
هخامنشیان

 

 

 

கிமு 550–கிமு 330 [[செலூக்கியப் பேரரசு|]]
 
[[தாலமைக் பேரரசு|]]
 

அகாமனிசியர் அமைவிடம்
அகாமனிசியப் பேரரசின் உயர்நிலையில் அதன் அளவு
தலைநகரம் எகபடனா, பாசர்கடீ, பெர்சப்பொலிஸ், சூசா
மொழி(கள்) பழைய பாரசீகம், ஈலமைட்டு மொழி, அக்காதியம்
அரசாங்கம் முடியாட்சி
பேரரசர்
 -  கிமு 550 –கிமு 529 பேரரசன் சைரசு
 - கிமு 336 –கிமு 330 டேரியஸ் III
வரலாற்றுக் காலம் பண்டைய வரலாறு
 - உருவாக்கம் கிமு 550
 - பெர்சப்போலிசில் கட்டுமானம் தொடங்கியது கிமு 515
 - எகிப்து கம்பிசஸ் II ஆல் கைப்பற்றப்படல் கிமு 525
 - கிரேக்க-பாரசீகப் போர்கள் கிமு 499–449
 - வெற்றிகரமான எகிப்தியக் கலகம் எகிப்தின் விடுதலைக்கு வித்திட்டது. கி மு 404
 - கைப்பற்றப்பட்டது கிமு 330
 - பாக்திரியாவின் சத்ரப் பேசஸ் தாரியுஸ் III ஐக் கொன்றுவிட்டுத் தானே அரசன் ஆர்டக்சேர்க்செஸ் V ஆக முடிசூட்டிக் கொண்டான். கிமு 330
Warning: Value specified for "continent" does not comply

இப்பேரரசு சைரசு என்பவரால் நிறுவப்பட்டது. இது ஆப்கனிஸ்தான், பாகிஸ்தான் ஆகியவற்றின் பகுதிகள், நடு ஆசியா, சின்ன ஆசியா ஆகியவற்றின் பகுதிகள், பெரும்பாலான கருங்கடல் கரையோரப் பகுதிகள், ஈராக், வடக்கு சவூதி அரேபியா, ஜோர்தான், இஸ்ரேல், லெபனான், சிரியா, எகிப்தின் குறிப்பிடத்தக்க குடியேற்றப் பகுதிகள், லிபியா ஆகியவற்றை உள்ளடக்கி மூன்று கண்டங்களில் பரந்திருந்தது.

மேற்கத்திய வரலாற்றில் இப்பேரரசு, கிரேக்க-பாரசீகப் போர்களில் கிரேக்க நகர அரசுகளின் எதிரியாகக் குறிப்பிடப்பட்டுள்ளது. பேரரசின் அளவும், அது நீண்டகாலம் நிலைத்திருந்ததும்; மொழி, சமயம், கட்டிடக்கலை, மெய்யியல், சட்டம், நாடுகளின் அரசுகள் ஆகியவற்றின் மீது பாரசீகச் செல்வாக்கு இன்றுவரை நிலைத்திருப்பதற்கான காரணமாகியது.

வரலாறு

மீடெஸ் அரசின் ஒரு சிற்றரசாகத் தொடங்கிய இவ்வரசு பின்னர் பேரரசர் சைரசு காலத்தில் மீடெசைக் கைப்பற்றி எகிப்து, அனதோலியா மற்றும் ஆசியா மைனர் ஆகியவற்றையும் உள்ளடக்கி விரிவாகியது. பேரரசர்கள் முதலாம் டேரியஸ் மற்றும் செர்க்செஸ் ஆகியோர், கிமு 499 முதல் 449 முடிய நடத்திய கிரேக்க-பாரசீகப் போர்கள் மூலம் பண்டைய கிரேகக்த்தையும் கைப்பற்றுமளவுக்கு நெருங்கியது. கிமு 330 ஆம் ஆண்டின் அக்கீமெனிட் பேரரசு பேரரசன் அலெக்சாந்தரால் தோற்கடிக்கப்படது.

இதனையும் காண்க

மேற்கோள்கள்

  1. https://books.google.fr/books?id=qPVHBAAAQBAJ&pg=PA79&lpg=PA79&dq=hax%C4%81mani%C5%A1iya&source=bl&ots=IDiu2fLvpe&sig=GlwJITmrAifN3DAAi33UmbtffVA&hl=en&sa=X&redir_esc=y#v=onepage&q=hax%C4%81mani%C5%A1iya&f=false
  2. Sampson, Gareth C. (2008). The Defeat of Rome: Crassus, Carrhae and the Invasion of the East. Pen & Sword Books Limited. பக். 33. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:978-1-84415-676-4. "Cyrus the Great, founder of the First Persian Empire (c. 550–330 BC)."
This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.