ஆசியா மைனர்
ஆசியா மைனர் அல்லது சிறிய ஆசியா (கிரேக்கம்: Μικρά Ασία , Mikra Asia; துருக்கிய மொழி: Anadolu et Küçük Asya, அனத்தோலியாவும் ஆசிய மைனரும்) ஐரோப்பாவிற்கு அடுத்துள்ள ஆசியாவின் பகுதிகளாகும். பலவெவ்வேறான வட்டாரங்கள் இதில் அடங்கும்: லிடியா, லிசியா, கேரியா, கலாசியா, பிலியன்சு,பிதைனியா,பைசியா, உரோமானிய ஆசியா மாகாணம் (இது எபேசஸ் அல்லது ஐயோனியா எனவும் அழைக்கப்பட்டது), சிலிசியா, ஐசவுரியா, ஐரிக் போன்றவை அடங்கும்
புவியியல்

துவக்க காலத்தில் அனத்தோலியா என்ற பெயர் மூவலந்தீவின் உட்புறப்பகுதிகளை குறிப்பிடப் பயன்படுத்தப்பட்டது. பைசாண்டைனிய காலதில் அனத்தோலிகம் என்ற மறைமாவட்டம் இருந்தது. இதற்கு முந்தையக் காலங்களில் ஆசியா மைனர் என்ற பெயர் பய்படுத்தப்பட்டது. 1923இல் துருக்கிய குடியரசு நிறுவப்பட்ட பின்னர் அனத்தோலியா என்ற சொல் கிழக்கு திரேசு தவிர்த்த அனைத்து துருக்கிக்கும் பயன்படுத்தப்படுகின்றது. நடுநிலக் கடலின் தெற்கு, மேற்குப்பகுதிகளை சுற்றியும் துருக்கியின் வடக்கிலுள்ள கருங்கடல் பகுதியும் டார்டனெல்லெசின் வடக்கு-மேற்கத்திய பகுதியும் அடங்கும்.