சிஞ்சார் மலைகள்

சிஞ்சார் மலைகள் (Sinjar Mountains)[1][2] (அரபு மொழி: جبل سنجار Jabal Sinjār; வடமேற்கு ஈராக் நாட்டின் நினிவே மாகாணத்தில், சிஞ்சார் மாவட்டத்தில், கிழக்கிலிருந்து மேற்காக 100 கிமீ தொலைவிற்கும், 1,463 மீட்டர் உயரத்திலும் பரந்துபட்ட ஒரு மலைதொடராகும். சிரியாவின் வடகிழக்கில் இம்மலைத்தொடர் 25 கிமீ நீளத்திற்கு பரவியுள்ளது. இம்மலைத்தொடரின் தெற்கில் சிஞ்சார் நகரம் அமைந்துள்ளது. [3][4] யாசிதி மக்களால் இம்மலைத்தொடர் புனிதமாகக் கருதப்படுகிறது.[5][6]

சிஞ்சார் சமவெளியில் வேளாண்மை
சிஞ்சார் மலைத்தொடரின் மேற்கில் அமைந்த ஜெபல் சிஞ்சார் பிரதேசம்


சிஞ்சார் மலைகள்
سنجار
Şengal
شەنگال/شەنگار
சிஞ்சார் மலைகளின் செய்மதி காட்சி
உயர்ந்த இடம்
உயரம்1,463 m (4,800 ft)
ஆள்கூறு36°22′0.22″N 41°43′18.62″E
புவியியல்
சிஞ்சார் மலைகள்
سنجار
Şengal
شەنگال/شەنگار
சிஞ்சார் மலைகள், சிஞ்சார் மாவட்டம், நினிவே மாகாணம் ஈராக்

மக்கள் & வரலாறு

சிஞ்சார் மலைத்தொடரில் கால்நடைகளை மேய்க்கும் யசீதி மக்கள்

வரலாற்று முந்தைய காலத்தில் இம்மலைத்தொடர், அசிரியர்களுக்கும், இட்டைட்டுகளுக்கும் எல்லையாக விளங்கியது. கிமு 538-இல் பார்த்தியப் பேரரசு ஆட்சியிலும், பின்னர் சிஞ்சார் மலைகளை பார்த்தியர்களிடமிருந்து உரோமைப் பேரரசு கைப்பற்றி கிமு 115 வரை ஆட்சி செலுத்தியது. கிபி 363-இல் பைசாந்தியப் பேரரசுக்கும், சாசானியப் பேரரசுக்கும் நடைபெற்ற போரின் முடிவில் சிஞ்சார் மலைகள் இரு பேரரசுகளின் எல்லைகளாக விளங்கியது.

பாரசீகப் பேரரசின் ஆட்சியால், இம்மலைத்தொடர் பகுதிகளில் சொராட்டிரிய நெறி பரவத்தொடங்கியது. கிபி 4-ஆம் நூற்றாண்டில் இம்மலைப்பகுதிகளில் நெஸ்டோரியன் கிறித்தவம் தழைத்தது. கிபி 6-ஆம் நூற்றாண்டில் இசுலாமியப் படையெடுப்புகளால், இம்மலைதொடர்களில் வாழ்ந்த கிறித்தவர்கள், இசுலாமிய கலீபாக்களுக்கு ஜிசியா வரியைக் கட்டி வாழ்ந்தனர்.[7]

கிபி 12-ஆம் நூற்றாண்டு முதல் சிஞ்சார் மலைத்தொடர்களில் யசீதி மக்கள் கால்நடைகளை மேய்த்து வாழ்கின்றனர். [8] [9] ஊழிக்காலத்தின் முடிவில் நோவாவின் பேழை இம்மலைத்தொடரின் உயர்ந்த முகட்டில் நின்றதாக பழைய ஏற்பாடு கூறுகிறது.[10]

1920-களில் யசீதி மக்கள் அரேபியர்களாலும், மற்றவர்களாலும் துரத்தப்பட்டு இம்மலையில் தஞ்சமடைந்தனர்.[8]

3 ஆகஸ்டு 2014 அன்று சிஞ்சார் நகரம் இசுலாமிய அரசுப் படைகளால் கைப்பற்றப்பட்டு, 40,000 யசீதி மக்கள் இனப்படுகொலை செய்யப்பட்டனர்.[11][12] [13][14] யசீதி மக்களுக்கு எதிரான இசுலாமிய அரசின் கொடூரங்களால் மக்கள் நீர், உணவு, உடை, உறைவிடம் இன்றி அலைந்து திரிந்தனர்.[15] யசீதி மக்களுக்கு ஐக்கிய இராச்சியம் மற்றும் ஐக்கிய அமெரிக்க அரசின் விமானப் படைகள் வானிலிருந்து உணவு, நீர், மருந்துகளை யசீதி மக்களுக்கு வழங்கினர்.[16] [17][18] [19]10 ஆகஸ்டு 2014 முதல் இசுலாமிய அரசுப் படைகளிடமிருந்து, குர்து மக்கள் படையினர் யசீதி மக்களுக்கு பாதுகாப்பு வழங்கினர்.[20][21][22][14] இசுலாமியப் படைகளால் 7,000 யசீதிப் பெண்கள் பாலியல் அடிமைகளாகப் பிடித்துச் செல்லப்பட்டு, 7,000 யசீதி ஆண்களின் தலை வீசப்பட்டு கொல்லப்பட்டனர்.[16][21][23]பல யசீதிப் பெண்கள் இசுலாமிய அரசுப் படையினருக்கு அஞ்சி சிஞ்சார் மலையிலிருந்து குதித்து தற்கொலை செய்து கொண்டனர்.[24]

இதனையும் காண்க

மேற்கோள்கள்

  1. சியோநெட்டு (GEOnet) பெயர் வழங்கியில் இருந்து Jabal Sinjār (Approved) , United States National Geospatial-Intelligence Agency
  2. சியோநெட்டு (GEOnet) பெயர் வழங்கியில் இருந்து جبل سنجار (Native Script) , United States National Geospatial-Intelligence Agency
  3. Edgell, H. S. 2006. Arabian Deserts: Nature, Origin, and Evolution. Springer, Dordrecht, The Netherlands. 592 pp. ISBN 978-1-4020-3969-0
  4. Numan, N. M. S., and N. K. AI-Azzawi. 2002. Progressive Versus Paroxysmal Alpine Folding in Sinjar Anticline Northwestern Iraq. Iraqi Journal of Earth Science. vol. 2, no.2, pp.59-69.
  5. "Iraqi Kurds: "No Friend but the Mountains"" (7 October 2013).
  6. "ISIS resumes attacks on Yezidis in Shingal".
  7. Fuccaro, Nelida (1995). Aspects of the social and political history of the Yazidi enclave of Jabal Sinjar (Iraq) under the British mandate, 1919-1932. Durham University. பக். 22–3. http://etheses.dur.ac.uk/5832/1/5832_3247.PDF?UkUDh:CyT. பார்த்த நாள்: 13 May 2018.
  8. Tim Lister (August 12, 2014). "Dehydration or massacre: Thousands caught in ISIS chokehold". CNN. பார்த்த நாள் 2014-08-13.
  9. Fuccaro, Nelida (1999). The Other Kurds: Yazidis in Colonial Iraq. London: I.B.Tauris. பக். 4748. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:978-1-86064-170-1.
  10. Parry, Oswald Hutton (1895). Six Months in a Syrian Monastery: Being the Record of a Visit to the Head Quarters of the Syrian Church in Mesopotamia: With Some Account of the Yazidis Or Devil Worshippers of Mosul and El Jilwah, Their Sacred Book. London: H. Cox. பக். 381. இணையக் கணினி நூலக மையம்:3968331.
  11. Martin Chulov (3 August 2014). "40,000 Iraqis stranded on mountain as Isis jihadists threaten death". The Guardian. https://www.theguardian.com/world/2014/aug/06/40000-iraqis-stranded-mountain-isis-death-threat. பார்த்த நாள்: 2014-08-06.
  12. "Northern Iraq: UN voices concern about civilians’ safety, need for humanitarian aid". United Nations News Centre. 2014-08-08. https://www.un.org/apps/news/story.asp?NewsID=48444#.U-ppGGNCxI0. பார்த்த நாள்: 2014-08-12.
  13. "Irak : la ville de Sinjar tombe aux mains de l'Etat islamique" (in French). Le Monde. 2014-08-03. http://www.lemonde.fr/proche-orient/article/2014/08/03/irak-la-ville-de-sinjar-tombe-aux-mains-de-l-etat-islamique_4466279_3218.html. பார்த்த நாள்: 2014-08-12.
  14. "Thousands of Yazidis 'still trapped' on Iraq mountain". BBC News. 2014-08-12. https://www.bbc.com/news/world-middle-east-28756544. பார்த்த நாள்: 2014-08-12.
  15. "People Eating Leaves to Survive on Shingal Mountain, Where Three More Die". Rûdaw.net. 2014-08-07. http://rudaw.net/english/middleeast/iraq/070820143. பார்த்த நாள்: 2014-08-12.
  16. "Iraq crisis: No quick fix, Barack Obama warns". BBC News. 2014-08-09. https://www.bbc.co.uk/news/world-middle-east-28725908. பார்த்த நாள்: 2014-08-09.
  17. "Britain's RAF makes second aid drop to Mount Sinjar Iraqis trapped by Isis – video". The Guardian. 2014-08-12. https://www.theguardian.com/world/video/2014/aug/12/raf-drop-aid-mount-sinjar-iraqis-trapped-isis-video. பார்த்த நாள்: 2014-08-12.
  18. "JTF633 supports Herc mercy dash". Media Release. Department of Defence (22 August 2014). பார்த்த நாள் 25 August 2014.
  19. "Irak : les opérations pour sauver les réfugiés yézidis continuent" (in French). Le Monde. 2014-08-12. http://www.lemonde.fr/proche-orient/article/2014/08/12/la-syrie-en-guerre-accueille-1-000-familles-de-refugies-fuyant-l-irak_4470547_3218.html. பார்த்த நாள்: 2014-08-12.
  20. "Iraq Crisis: Kurds Push to Take Mosul Dam as U.S. Gains Controversial Guerrilla Ally" (18 August 2014).
  21. "Irak: les yazidis fuient les atrocités des djihadistes" (in French). Le Figaro. 10 August 2014. Archived from the original on 2014-08-11. https://www.webcitation.org/6RjrIjnKe.
  22. Rubin, Alissa J.; Almukhtar, Sarah; Kakol, Kamil (April 2, 2018). "In Iraq, I Found Checkpoints as Endless as the Whims of Armed Men". The New York Times. https://www.nytimes.com/2018/04/02/magazine/iraq-sinjar-checkpoints-militias.html?smid=tw-nytimesatwar&smtyp=cur.
  23. "Etat islamique en Irak : décapités, crucifiés ou exécutés, les yézidis sont massacrés par les djihadistes" (in French). Atlantico. 9 August 2014. Archived from the original on 11 August 2014. https://www.webcitation.org/6Rjrq80F5.
  24. Ahmed, Havidar (14 August 2014). "The Yezidi Exodus, Girls Raped by ISIS Jump to their Death on Mount Shingal". Rudaw Media Network. http://rudaw.net/english/kurdistan/140820142. பார்த்த நாள்: 26 August 2014.

வெளி இணைப்புகள்

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.