சிஞ்சார்

சிஞ்சார் (Sinjar) நகரத்தை சிங்கால் (Shingal) எனும் அழைப்பர்.[2] (அரபு மொழி: سنجار,[3] குர்தியம்: Shingal,[4] இந்நகரம் ஈராக்கின் வடக்கில் நினிவே மாகாணத்தில், சிஞ்சார் மாவட்டத்தில், சிஞ்சார் மலையடிவாரத்தில் 522 மீட்டர் உயரத்தில் உள்ளது. 2013-ஆம் ஆண்டின் மக்கள்தொகை கணக்கெடுப்பின்படி,இந்நகரத்தின் மக்கள்தொகை 88,023.[5] சிஞ்சார் நகரம் பெரும்பாலான யசீதி மக்களின் தாயகமான உள்ளது. மேலும் சிஞ்சார் மலைகள் யசீதி மக்களின் புனித மலையாக உள்ளது.

சிஞ்சார்
سنجار Shingal
சிங்கால்
சிஞ்சார்
ஈராக்கில் சிஞ்சார் நகரத்தின் அமைவிடம்
ஆள்கூறுகள்: 36°19′21″N 41°51′51″E
நாடு ஈராக்
ஆளுநரகம்நினிவே ஆளுநரகம்
மாவட்டம்சிஞ்சார் மாவட்டம்
அரசு
  மேயர்பகாத் அமீத் ஒமர்[1]
ஏற்றம்522
மக்கள்தொகை (2013)
  மொத்தம்88
நேர வலயம்GMT (ஒசநே+3)

வரலாறு

கிபி இரண்டாம் நூற்றாண்டில் உரோமைப் பேரரசு இந்நகரத்தை கைப்பற்றி, இராணுவத்தளம் அமைத்து சிங்காரா என பெயரிட்டனர். கிபி 360-இல் சாசானியப் பேரரசு இந்நகரைக் கைப்பற்றினர். கிபி 6-ஆம் நூற்றாண்டில் இந்நகரம் இசுலாமிய படையெடுப்புகளால் கலீபா இராச்சியத்தில் இணைக்கப்பட்டது.[6]

2014-இல் இசுலாமிய அரசுப் படைகள் சிஞ்சார் நகரத்தைக் கைப்பற்றி, அங்கு வாழ்ந்த ஆயிரக்கணக்கான யசீதி மக்களை கொன்று குவித்ததுடன், யசீதி பெண்களை பாலியல் அடிமைகளாக பிடித்து வைத்துக் கொண்டனர்.[7][8]

திசம்பர் 2015-இல் இசுலாமிய அரசுப் படைகளிடமிருந்து சிஞ்சார் நகரத்தை மீட்ட போது நகரத்தின் காட்சி

13 நவம்பர் 2014-இல் இசுலாமிய அரசுப் படைகளிடமிருந்து சிஞ்சார் நகரத்தை ஐக்கிய அமெரிக்காவின் சிறப்புப் படைகளின் உதவியுடன் குர்திஸ்தான் மற்றும் யசீதிப் படைகள் கைப்பற்றினர். [9]

தன்னாட்சி

சிஞ்சார் நகரத்தில் யசீதி மக்கள் படையினர்

ஆகஸ்டு 2017-இல் யசீதி மக்கள் சிஞ்சார் பகுதியை தன்னாட்சி பிரதேசமாக அறிவித்தனர். யசீதி மக்கள்[10]

இதனால் சிஞ்சார் நகர யசீதி மக்கள் குர்து படைகளுக்கும், ஈராக்கிய படைக்களுக்கும் இடையே பந்தாடப்பட்டனர்.[11]

இதனையும் காண்க

மேற்கோள்கள்

மேலும் படிக்க

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.