பண்டைய அண்மை கிழக்கின் நகரங்கள்

பண்டைய அண்மைக் கிழக்கின் தற்கால மத்திய கிழக்கு நாடுகளில், கிமு 3,000 ஆண்டுகளுக்கு முந்தைய வரலாறு கொண்ட பண்டைய நகர அரசுகள் இருந்தன.

பண்டைய அண்மைக் கிழக்கின் வரைபடம்

இப்பண்டைய நகர அரசுகளின் ஆட்சிகள், கிமு 6ம் நூற்றண்டில் பாரசீகத்தின் அகாமனிசியப் பேரரசு மற்றும் கிமு நான்காம் நூற்றாண்டில் பேரரசர் அலெக்சாந்தர் படையெடுப்புகளாலும், பின்ன்ர் கிபி ஏழாம் நூற்றாண்டில் இசுலாமிய படையெடுப்புகளாலும் முடிவிற்கு வந்தது.

வெண்கலக் காலத்திய பண்டைய அண்மைக் கிழக்கின் மிகப்பெரிய நகரங்களில் ஒன்றாக பண்டைய எகிப்தின் மெம்பிஸ் நகரம் 30,000 மக்களுடன் விளங்கியது. மத்திய வெண்கலக் காலத்தில் மெசொப்பொத்தேமியாவின் ஊர் நகரம் 65,000 மக்கள்தொகையுடனும், பாபிலோன் நகரம் 50,000 முதல் 60,000 மக்கள்தொகையுடனும், 20,000 – 30,000 மக்கள்தொகையுடன் இருந்த நினிவே நகரம், கிமு 700ல் (இரும்புக் காலத்தில்) 1 இலட்சம் மக்கள்தொகையுடன் விளங்கியது.

பண்டைய அண்மை கிழக்கின் நகரங்கள்

மெசொப்பொத்தேமியாவின் பண்டைய நகரங்களைக் காட்டும் வரைபடம்


இதனையும் காண்க

மேற்கோள்கள்

வெளி இணைப்புகள்


This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.