இலங்கையின் வரலாறு

ஆண்டுகளுக்கு மேற்பட்ட நீண்டகால வரலாற்றைக் கொண்டதாகும். இலங்கையின் காலத்தால் முந்திய வரலாற்று நூலாகக் கருதப்படும் மகாவம்சத்தின்படி இலங்கையின் வரலாறு கிமு 6ம் நூற்றாண்டு அளவில் இந்தியாவின் கலிங்க நாட்டிலிருந்து துரத்திவிடப்பட்ட அந்நாட்டு இளவரசனான விஜயன் என்பவன் தனது தோழர்கள் எழுநூறு பேருடன் இலங்கையில் வந்து இறங்கியதுடன் ஆரம்பமாகின்றது.[1][2] எனினும் இதற்கு முன்னரே இயக்கர், நாகர் ஆகிய இரண்டு இனத்தவர்கள் இலங்கையில் வாழ்ந்தது பற்றியும், அவர்கள் இங்கே அரசமைத்து ஆண்டது பற்றியதுமான குறிப்புக்களும் மகாவம்சத்தில் காணப்படுகின்றன.

தமிழர்

இலங்கையின் வரலாறு 1900

தொடக்கத்தில் தமிழர் பண்பாட்டை பின்பற்றி இருந்த இவர்களிடையே மகிந்ததேரரால் கிமு 3ஆம் நூற்றாண்டின் நடுப்பகுதியில் பௌத்தம் அறிமுகம் செய்யப்பட்டது. இதைத் தொடர்ந்து பெருமைக்குரிய நாகரிகம், அனுராதபுரம் (அரசு கிமு 200 இலிருந்து கிபி 1000 வரை), பொலன்னறுவை (அரசு கிபி 1070 முதல் கிபி 1200 வரை), ஆகிய இடங்களில் வளர்ச்சியடைந்தன. பொலன்னறுவையின் வீழ்ச்சிக்குப் பின்னர் இலங்கையில் பல்வேறு இராச்சியங்கள் உருவாகின.

இலங்கையின் வடபகுதியின் பண்டைய வரலாறு பற்றி இலங்கை வரலாற்று நூல்களில் அதிக தகவல்கள் இல்லை. எனினும் 14ம் நூற்றாண்டுக்குப் பின்னரே இலங்கையின் வடபகுதியில் இருந்த தமிழர் தனி அரசு பற்றிய ஆதாரங்கள் கிடைக்கப் பெறுகின்றன.

16வது நூற்றாண்டில் நாட்டின் சில கடலோரப் பகுதிகள் போர்த்துக்கேய, ஒல்லாந்திய பிரித்தானியப் பேரரசுகளின் கீழ் இயங்கின. அனுராதபுரத்திலிருந்து கண்டி வரை 181 அரசர்களும் அரசிகளும் வெவ்வேறு காலகட்டங்களில் ஆண்டு வந்துள்ளனர். [3] 1815க்குப் பிறகு முழுமையான நாடும் பிரித்தானிய குடியேற்றவாத ஆட்சியின் கீழ் வந்தது. இவர்களுக்கு எதிராக ஆயுதப் புரட்சிகள் 1818இலும் 1848இலும் நடத்தப்பட்டன. இறுதியாக 1948இல் விடுதலை பெற்றது.

இலங்கையின் புராதன குடிகள்

இலங்கையின் வரலாறு 2500 ஆண்டுகளுக்கு மேற்பட்ட நீண்டகால வரலாற்றைக் கொண்டதாகும். இலங்கையின் வரலாற்று நூலாகக் கருதப்படும் மகாவம்சத்தின்படி இலங்கையின் வரலாறு கிமு 6ம் நூற்றாண்டு அளவில் ஆரியர்களின் வருகைக்கு முன்னர் இலங்கையில் பின்வரும் சுதே மக்கள் வாழ்ந்ததாக கூறப்படுகின்றது.

  • இயக்கர்
  • நாகர்

வாழ்ந்த இடங்கள்

இவர்களுள் இயக்கர் மகியங்கன, லக்கல போன்ற பிரதேசங்களிலும், நாகர் யாழ்ப்பாணத்தில் நாகதீவு, களனி போன்ற பிரதேசங்களிலும் வாழ்ந்துள்ளனர்.

ஆதாரங்கள்

ஆரிய இனத்தவர் இலங்கைக்கு வருவதற்கு முன்பு புராதன மக்கள் இங்கு வாழ்ந்ததற்காக கூறப்படும் ஆதாரங்கள்

  • இராமன் - இராவணன் கதை போன்ற புராதனக் கதைகள்.
  • தற்காலத்தின் மத்திய பகுதியில் இலங்கையில் வாழ்ந்த பலாங்கொடை மனிதர்கள் பற்றிய பொல்பொருள் தடயங்கள்.
  • தொல்பொருள் அகழ்வின்போது கண்டுபிடிக்கப்பட்ட பாத்திரங்களும், எலும்புகளும்.

ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்ட இடங்கள்

ஆதிக் குடியேற்றங்கள் பற்றி ஆய்வுகளும், அகழ்வுகளும் மேற்கொள்ளப்பட்ட இடங்களாக கூறப்படுபவை:

  • பத்தியகம்பளை
  • கொனாட்டு என்ற கல்மணை
  • கித்துல்கலபெலிகன
  • குருவிட்டை
  • பொம்மரிப்பு
  • உடரஞ்சாமடம்

குடியேற்றங்களை உறுதிப்படுத்தல்

  • நாகர்களிடையே ஏற்பட்ட பிணக்குகளைத் தீர்த்து வைப்பதற்காக புத்தபெருமான் 3 முறை இலங்கைக்கு வந்தார் என மகாவம்சம் கூறுகின்றது
  • இந்தியாவிலிருந்து இலங்கைக்கு 700 தோழர்களுடன் வந்த விஜயன் இயக்கர் தலைவியான குவேணியை மண முடித்ததாக மகாவம்சம் கூறுகிறது.

உசாத்துணை

  1. Wilh. Geiger. The Trustworthiness of the Mahavamsa. The Indian Historical Quarterly 1930 June;VI(02):228.
  2. B. Gunasekara, The Rajavaliya. AES reprint. New Delhi: Asian Educational Services, 1995. p iii ISBN 81-206-1029-6
  3. "lanka.info". lanka.info. http://www.lanka.info/Sri_Lanka/ancientKings.jsp.

வெளி இணைப்புகள்

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.