தமிழ் நீதி நூல்கள்

அறம் என்பது ஒழுக்கம். ஒழுக்கம் என்பது வாழ்க்கையில் கடைப்பிடித்து ஒழுகவேண்டிய முறைமை. திருக்குறள் இதனை அறத்தாறு [1] எனக் குறிப்பிடுகிறது. ஆற்றில் வெள்ளம் பள்ளத்தை நோக்கி ஓடும். உயிரினங்களுக்கு உதவிக்கொண்டே ஓடும். அது அடித்துக்கொண்டு வந்தவை வண்டலாகப் படியும். அது போல உயிரினங்களுக்கு உதவுவது அறம். ஓடும் மண்ணில் ஊறி ஊற்றுத் தெளிவு போல் வெளிப்பட்டு உதவுவது ஒழுக்கம். இந்த ஒழுக்கத்தைப் பிற்காலத் தமிழ் நீதி என்னும் சொல்லால் குறிப்பிடுகிறது.

தமிழர்

நீதம் என்னும் வடசொல் வெண்ணெயைக் குறிக்கும். பாலில் வெண்ணெய் எடுப்பது போல வாழ்க்கைப் பாங்கில் திரட்டப்பட்ட நல்லாறு [2] நீதி

மக்களுக்கு ஒழுக்க நீதிகளை அறிவுறுத்துவதற்காக எழுந்த நூல் நீதி நூல் எனப்படுகின்றது. பண்டைக்காலம் தொட்டே தமிழில் பல நீதி நூல்கள் எழுந்துள்ளன. சங்ககால நூல்கள் பலவற்றில் நீதிக் கருத்துக்கள் ஆங்காங்கே பரவிக் காணப்பட்டாலும், நீதி நூல் என்று கூறுமளவுக்குத் தனியான நூல் எதுவும் கிடைக்கவில்லை. சங்கம் மருவிய காலத்து நூல்களின் தொகுப்பான பதினெண்கீழ்க்கணக்கில் உள்ள 18 நூல்களுள் 11 நீதி நூல்களாகக் காணப்படுகின்றன. இவற்றுள் புகழ் பெற்றதும், பரவலாக அறியப்பட்டதும், வெளிநாட்டு அறிஞர்களின் கவனத்தை ஈர்த்ததுமான நூல் திருக்குறளாகும்.

பட்டியல்

சங்க காலம் - பதினெண் கீழ்க்கணக்கு

  1. திருக்குறள்
  2. நாலடியார்
  3. நான்மணிக்கடிகை
  4. இன்னா நாற்பது
  5. இனியவை நாற்பது
  6. திரிகடுகம்
  7. ஆசாரக்கோவை
  8. பழமொழி நானூறு
  9. சிறுபஞ்சமூலம்
  10. ஏலாதி
  11. முதுமொழிக்காஞ்சி

இடைக்காலம்

ஔவையார்

பிற்காலம்

சதகங்கள்

  • தண்டலையார் சதகம்
  • கோவிந்த சதகம்
  • சயங்கொண்டார் சதகம்
  • அறப்பளீசுர சதகம்
  • மணவாள நாராயண சதகம்

நீதிக் கதை நூல்கள்

  • பஞ்ச தந்திரக் கதைகள் (தமிழ் மொழிபெயர்ப்பு)
  • தமிழ் ஈசாப்புக் கதைகள் (தமிழ் மொழிபெயர்ப்பு)

அடிக்குறிப்பு

  1. அறத்தாறு இது என வேண்டா சிவிகை
    பொறுத்தானோடு ஊர்ந்தான் இடை (திருக்குறள்)
  2. நல்லாறு எனினும் கொளல் தீது மேலுலகம்
    இல் எனினும் ஈதலே நன்று (திருக்குறள்)
This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.