கோட்டை இராச்சியம்

ஸ்ரீ ஜயவர்த்தனபுரக் கோட்டையை மைய நிலையமாகக் கொண்டு அரசாட்சி நடைபெற்றதே கோட்டேஅரசு அல்லது கோட்டே இராசதானி (Kingdom of Kotte). இது கி.பி. 15 நூற்றாண்டுக் காலப் பகுதியில் இலங்கையில் சீராக ஆட்சி நடைபெற்ற அரசாகும். இலங்கையை ஒரு குடைக் கீழ் கொண்டு வருதற்காக ஆட்சி நடந்தேறிய கடைசி அரசும் இதுவாகும்.

கோட்டை அரசின் வரைபடம்
கோட்டே அரசு
இலங்கை

1412–1597
 


கொடி

தலைநகரம் கோட்டே
மொழி(கள்) சிங்களமொழி
அரசாங்கம் மன்னராட்சி
கோட்டை அரசு
 -  1412-1467 ஆறாவது பராக்கிரமபாகு மன்னன் (முதல்)
 - 1508-1528 ஒன்பதாவது தர்ம பராக்கிரமபாகு மன்னன் (களனியில்)
 - 1551-1597 தர்மபால அரசன் (கடைசி)
வரலாறு
 - முழு இலங்கையையும் ஒற்றுமைப்படுத்துதல் 1412
 - குலைவு 1597

கோட்டை என்பதன் பொருள்

சிங்களத்தில் கோட்டே என்பதன் பொருள் (பாதுகாப்பு) அரண் என்பதாகும். அலகேசுவரர் மூலம் கட்டப்பட்ட கோட்டையையும் இது குறிப்பிடப்படுகிறது.

நிறுவல்

மேற்குக் கடற்பகுதியிலிருந்து வந்த படையெடுப்பாளர்களின் தாக்குதல்களை முறியடிக்க, மூன்றாவது விக்கிரமபாகு அரசனின் ஆட்சிக் காலத்தில் கம்பளை அரசின் அமைச்சர் அலகேசுவரன் (1370–1385) மூலம் கட்டப்பட்ட இந்தப் பாதுகாப்புக் கோட்டை, பின்னர் அதாவது 1412இல் ஆறாவது பராக்கிரமபாகு மன்னன் மூலம் தலைநகராகக் கொள்ளப்பட்டது. இப்பகுதியைச் சுற்றியுள்ள சதுப்பு நிலம் மூலம் இது மிகவும் பாதுகாப்பாக அமைந்துள்ளது.[1]

பின்னிணைப்பு

மேற்கோள்கள்

  1. வார்ப்புரு:உபன்யாச இணையத்தளம்
This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.