பத்மாவதி (சமணம்)

பத்மாவதி (Padmāvatī), சமண சமயத்தின் 23-வது தீர்த்தங்கரரான பார்சுவநாதரின் காவல் தேவதையான இயக்கி ஆவார். பத்மாவதியின் துணைவர் யட்சன் தாரனேந்திரர் ஆவார். பார்சுவநாதர் தீயின் நடுவில் இருந்து தவமிருக்கையில், அவரை தீப்பிழ்புகளிலிருந்து காக்கும் பணியை செய்பவர் பத்மாவதி எனும் இயக்கியாவார்.

பத்மாவதி (சமணம்)
வால்கேஸ்வரர் ஜெயின் கோயில், மும்பை

சமண சாத்திரங்களின் படி, பார்சுவநாதர் தவத்தில் இருக்கையில், மெகாலி எனும் அரக்கன், பார்சுவநாதரின் தவத்தை கெடுக்கும் தீச்செயல்களிலிருந்து காத்தவர்கள், இயக்கி பத்மாவதியும், அவர்தம் துணைவர் யட்சன் தானேந்திரனும் ஆவார்.[1][2]

தாமரை மலர் மீது அமர்ந்து, ஐந்தலை நாகமும் கொண்ட பத்மாவதியின் தலைக்கிரீடத்தில் பார்சுவநாதரின் சிறு அளவிலான உருவம் காணப்படும்.

படக்காட்சியகம்

இதனையும் காண்க

அடிக்குறிப்புகள்

  1. Jain & Fischer 1978, பக். 21.
  2. Shah 1987, பக். 267.

மேற்கோள்கள்

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.