இயக்கிகள்

இயக்கிகள் என்பவர்கள் மந்திரங்களுக்கும், தந்திரங்களுக்கும் கட்டுப்பட்டக்கூடியவர்களாகவும், பல்வேறு திறன்களைப் பெற்றவர்களாகவும் இந்திய தொன்மவியலில் குறிப்பிடப்படுபவர்கள்.[1] இந்து தொன்மவியலில் இயக்கர்கள் என்றொரு குழு குறிப்பிடப்படுகிறது. எசக்கியம்மன் அல்லது இயக்கியம்மன் என்ற சிறுதெய்வமும் இந்து சமயத்தவரால் வழிபடப்படுகிறது. இயக்கிகளை சித்தர்களும், மாந்திரிகளும், சமண தீர்த்தங்கரர்களும் தங்களுடைய கட்டுப்பாட்டில் வைத்துள்ளார்கள். இயக்கிகளை கட்டுப்படுத்தி தங்களுக்கு தேவையான செயல்களை செய்ய வைக்க இயலும் எனவும், அவர்களை காவல் ஆட்களைப் போலவும், ஏவல் ஆட்களைப் போலவும் பயன்படுத்த முடியும் என்பதும் நம்பிக்கையாகும்.

சொல்லிலக்கணம்

இயக்கிகள்- இயக்கம் செய்யும் பெண்கள்.

சமண சமயம்

சமண சமயத்தினைச் சார்ந்த தீர்த்தங்கர்கள் சிலர் தங்களுக்குக் காவலாக இயக்கிகளை வைத்திருந்தார்கள்.[1] சுவாலாமாலினி, பத்மாவதி, சக்ரேஸ்வரி, அம்பிகை, வராகி ஆகிய இயக்கிகள் முறையே சந்திரபிரபு, பார்சுவநாதர், விருஷப தேவர், நேமிநாதர், விமலநாதர் ஆகியோரின் காவல் தெய்வங்களாக இருந்துள்ளார்கள்.[1]

பார்சுவநாதர் தன் காவலுக்கு, பத்மாவதி எனும் இயக்கியையும், இயக்கின் துணைவர் யட்சன் தானேந்திரனையும் கொண்டிருந்தார்.

இதனையும் காண்க

ஆதாரங்கள்

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.