கோவிந்த பகவத் பாதர்
கோவிந்த பகவத் பாதர் (Govinda Bhagavatpada) Govinda Bhagavatpāda), ஆதிசங்கரரின் குரு. கௌடபாதரின் சீடர்
குருவின் சந்திப்பு
மாதவீய சங்கர விஜயம் எனும் நூலில், கோவிந்த பகவத் பாதரின் குறிப்புகள் உள்ளன. ஆதிசங்கரர், காலடியை நீங்கி, நர்மதை ஆற்றை அடைந்த போது, கோவிந்த பகவத் பாதர், ஆற்றாங்கரையில் சமாதி நிலையில் இருந்தார். அந்நேரத்தில், நர்மதை ஆற்றில் எதிர்பாராது பெருக்கெடுத்த வெள்ளத்தை தடுக்க, தன் கமண்டலத்தைக் கொண்டு தடுத்து, சமாதி நிலையில் இருந்த கோவிந்த பகவத் பாதரின் உயிரைக் காத்தார்.
ஆதிசங்கரரை நோக்கி நீ யார் எனக் கேட்டார். அதற்கு சங்கரர் அத்வைத தத்துவத்தில் செய்யுள் நடையில் சில சுலோகங்களில் நான் யார் என்பதை விளக்கியதை கேட்ட கோவிந்த பகவத் பாதர், சங்கரரை தன் சீடராக ஏற்றுக் கொண்டார்.[1]
கோவிந்த பகவத் பாதரின் ஆணைப்படி, சங்கரர், உபநிடதம், பிரம்ம சூத்திரம் மற்றும் பகவத் கீதை ஆகிய இந்து சமயத்தின் மூன்று அடிப்படை நூல்களுக்கு பாஷ்யம் எழுதி, அத்வைத வேதாந்தத்தை இந்தியா முழுவதும் தானும், தனது சீடர்கள் மூலமும் பரப்பினார்.
கோவிந்த பகவத் பாதரின் நினைவைப் போற்றும் வகையில், ஆதிசங்கரர் தான் எழுதிய பஜ கோவிந்தம் எனும் நூலில், குரு தோத்திரத்தில் கோவிந்த பகவத் பாதரின் பெருமைகளை விளக்கியுள்ளார்.