ஸ்ரீகுப்தர்

ஸ்ரீகுப்தர் (Śri Gupta) (ஆட்சிக் காலம்:கி பி 240- 280)[1]வட இந்தியாவில் குப்த வம்சத்தை நிறுவியர் ஆவார். வடக்கு அல்லது நடு வங்காளமே குப்தர்களின் தாயகமாக வரலாற்று ஆய்வாளர்கள் கருதுகின்றனர்.

ஸ்ரீகுப்தர்
நிறுவனர், குப்த வம்சம்
ஆட்சிக்காலம் கி பி 240-280
பின்னையவர் கடோற்கஜன்
வாரிசு
கடோற்கஜன்
மரபு குப்த வம்சம்

இரண்டாம் சந்திரகுப்தரின் மகள் பிரபாவதி குப்தரின் கல்வெட்டுக் குறிப்புகளின் படி, மன்னர் ஸ்ரீகுப்தர், குப்த வம்சத்தை நிறுவியதாக அறியப்படுகிறது.

நாளாந்தா பல்கலைக் கழகத்தில் பௌத்த சமயக் கல்வி கற்க, சீனாவிலிருந்து வரும் பௌத்த பிக்குகள் தங்குவதற்கான, ஸ்ரீகுப்தர் நாளந்தாவிற்கு அருகில் மிருகசிகாவனம் (Mṛgaśikhāvana) எனும் பௌத்த விகாரை ஒன்று கட்டிக் கொடுத்து, அருகில் உள்ள 40 வருவாய் கிராமங்களையும் இவ்விகாரைக்கு தானமாக வழங்கினார் என, கி பி 690-இல் நாளாந்தாவிற்கு வருகை புரிந்த சீன பௌத்த அறிஞர் யிஜிங் (Yijing) தனது பயணக் குறிப்பில் குறிப்பிட்டுள்ளார்.[2]:35

சமயம்

ஸ்ரீகுப்தர் வைணவ சமயத்தைச் சார்ந்தவராக இருப்பினும், தமது இராச்சியத்தில் சமணம் மற்றும் பௌத்த சமயங்களின் நடவடிக்கைகளை ஆதரித்தார்.[2]:44

மேற்கோள்கள்

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.