புருகுப்தர்
புருகுப்தர் (Purugupta) (சமக்கிருதம்: पुरुगुप्त) (ஆட்சிக் காலம் கி பி 467–473) வட இந்தியாவின் 9-வது குப்தப் பேரரசர் ஆவார். குப்தப் பேரரசர் முதலாம் குமாரகுப்தன் – பேரரசி ஆனந்ததேவி இணையருக்குப் பிறந்த புருகுப்தர், இவரது ஒன்று விட்ட சகோதரர் ஸ்கந்தகுப்தருக்குப் பின் குப்தப் பேரரசின் அரியணை ஏறியவர்.[1]
புருகுப்தர் | |
---|---|
ஆட்சிக்காலம் | கி பி 467 – 473 |
முன்னையவர் | ஸ்கந்தகுப்தர் |
பின்னையவர் | இரண்டாம் குமாரகுப்தர் |
தந்தை | முதலாம் குமாரகுப்தன் |
மரபு | குப்த வம்சம் |
தாய் | ஆனந்ததேவி |
குப்தப் பேரரசு கி பி 320 – 550 | ||||||||||||||||||||||||||||||||||
---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|
|
||||||||||||||||||||||||||||||||||
புருகுப்தரைப் பற்றிய கல்வெட்டுக் குறிப்புகள் ஏதும் கிடைக்காத போதும், இவரது பேரன் மூன்றாம் குமாரகுப்தர் வெளியிட்ட பிதாரி வெள்ளி நாணயங்கள் மூலமும் மற்றும் நாளந்தாவில் அகழ்வாராய்ச்சியில் கிடைத்த, இவரது மகன்களான நரசிம்மகுப்தர், புத்தகுப்தர் மற்றும் மூன்றாம் குமாரகுப்தர் காலத்திய களிமண் முத்திரைகளின் மூலம் புருகுப்தரைப் பற்றிய செய்திகள் ஓரளவு அறிய முடிகிறது.
சாரநாத்தில் உள்ள புத்தரின் சிற்பத்தில் உள்ள குறிப்புகளின் படி, புருகுப்தருக்குப் பின் இரண்டாம் குமாரகுப்தன் அரியணை ஏறினார் என்ற முடிவிற்கு வரமுடிகிறது.[2]
மேற்கோள்கள்
- Mahajan, V. D. (2007) [1960]. Ancient India. New Delhi: S. Chand. பக். 512. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:81-219-0887-6.
- Agarwal, Ashvini (1989). Rise and Fall of the Imperial Guptas. Delhi: Motilal Banarsidass. பக். 220, 223–5. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:81-208-0592-5.
அரச பட்டங்கள் | ||
---|---|---|
முன்னர் ஸ்கந்தகுப்தர் |
குப்தப் பேரரசர் ஆட்சிக் காலம்: கி பி 467–473 |
பின்னர் இரண்டாம் குமாரகுப்தர் |