இராமகுப்தர்

இராமகுப்தர் (ஆட்சிக்காலம்:380), சமுத்திரகுப்தரின் மூத்த மகனும், இரண்டாம் சந்திரகுப்தரின் அண்ணனும் ஆவார். இவர் மிகச் சில மாதங்களே குப்தப் பேரரசை ஆண்டார். துவக்கத்தில் இவரைப் பற்றிய செய்திகள் வாய்மொழியாகவே இருந்தது. விதிஷா அருகில் உள்ள துர்ஜன்பூர் கல்வெட்டுகளில் இராமகுப்தரை மகாராசாதிராசா எனக் குறிப்பிட்டுள்ளது. ஏரண்-விதிஷா பகுதிகளில், இராமகுப்தர் வெளியிட்ட நாணயங்கள் கிடைக்கப்பெற்றது.[1]

இராமகுப்தர்
5வது குபதப் பேரரசர்
முன்னையவர் சமுத்திரகுப்தர்
பின்னையவர் இரண்டாம் சந்திரகுப்தர்

இராமகுப்தர் தொடர்பான மரபுக் கதைகள்

சகர்களின் மேற்கு இந்தியப் பகுதியின் குஜராத்தை ஆண்ட மேற்கு சத்ரபதி மன்னர் மூன்றாம் ருத்திரசிம்மன் மீது இராமகுப்தர் படையெடுத்து சென்ற போது, இராமகுப்தர் உள்ளிட்ட அவரது படைகள் ருத்திரசிம்மனிடம் சிக்கின. சிக்கிய இராமகுப்தரையும், படையினரையும் விடுவிக்க, இராமகுப்தரின் மனைவி துருஸ்வமினியை மூன்றாம் ருத்திரசிம்மனிடம் ஈடாக வைத்து, தன்னையும், தன் படைகளையும் இராமகுப்தர் மீட்டார். பின்னர் இரண்டாம் சந்திரகுப்தர், ருத்திரசிம்மன் மீது படையெடுத்து வென்று, இராமகுப்தரின் மனைவி துருஸ்வமினியை மீட்டு வந்தார் என வாய் வழிக் கதைகள் நிலவுகிறது.

அடிக்குறிப்புகள்

  1. Agarwal, Ashvini (1989). Rise and Fall of the Imperial Guptas, Delhi:Motilal Banarsidass, ISBN 81-208-0592-5, pp.153-9.
அரச பட்டங்கள்
முன்னர்
சமுத்திரகுப்தர்
குப்தப் பேரரசர் பின்னர்
இரண்டாம் சந்திரகுப்தர்
This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.